காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவராக வாய்ப்புள்ளவர் யார்?

 

 

 

 

बालोद जिले की समस्याओं के प्रदर्षन में विधायक एवं ...

 

 

 

 

 

அடுத்த தலைவர்?


காங்கிரஸ் கட்சி தலைவர் இல்லாமல் தடுமாறி வருகிறது. உட்கட்சியில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்கு பொறுப்பேற்க யாரும் தயாராக இல்லை என்பதையே இந்த சூழ்நிலை காட்டுகிறது. சோனியா காந்தி உடல்நிலை சிக்கலால் அவதிப்பட, அடுத்த முழுநேர தலைவர் யார் என்று பலரும் அவரா இவரா என யோசித்து வருகின்றனர். வாய்ப்புள்ள சிலரை பார்ப்போம்.



பவன் பன்சால்


இடைக்கால நிர்வாகி, பொருளாளர்.



தலைவராக வாய்ப்புள்ளவர். எளிமையான மனிதர். அதுவேதான் பலவீனமும் கூட. அனைவரையும் இணைக்கும் திறமை போதாது.



திக்விஜய் சிங்


மேலவை உறுப்பினர், காங்கிரஸ் கமிட்டி அழைப்பாளர்



மூத்த தலைவர். மூத்த அரசியல்வாதி என்பதால் இளைஞர்களால் ஏற்கப்படாமல் போக அதிக வாய்ப்புள்ளது.


ஆதிர் ரஞ்சன் சௌத்ரி


மக்களவை தலைவர், மேற்கு வங்க காங்கிரஸ் கட்சி தலைவர்


மேற்கு வங்க அரசியலில் வேர்பிடித்து வளர்ந்து வந்தவர். மற்ற அரசியல் சமாச்சாரங்களை அதிகம் அறிந்தவர் அல்ல.


முகுல் வாஸ்னிக்


சோனியாகாந்திக்கு நெருக்கமான ஆறு உறுப்பினர்களில் இவரும் ஒருவர். மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர். காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்.


கட்சித்தலைமைக்கு கடிதம் எழுதி கலகம் செய்த 23 தலைவர்களில் இவரும் ஒருவர். இப்போது சோனியாவுக்காக இறங்கி பேட்டைப் பிடித்து களமாடவும் தயாராகிவிட்டார். எனவே தலைவர் வாய்ப்பு இவருக்கு கிடைக்கலாம்.



கமல்நாத்


முன்னாள் மத்தியப்பிரதேச முதல்வர்


தலைவர் பதவிக்கு பொருந்தும் அத்தனை அம்சங்களும் உண்டு. கட்சியில் செல்வாக்கு உண்டு. கூட்டணியினருடன் தொடர்பில் இருப்பவர். கார்ப்பரேட் நிறுவனங்களுடன் உறவு உண்டு. ஆனால் தானாகவே தலைவர் போட்டியிலிருந்து தள்ளி இருக்கிறார்.


அசோக் கெலாட்


ராஜஸ்தான் முதல்வர்


சோனியா, ராகுல் என இருவரின் நம்பிக்கையைப் பெற்றவர். கட்சியில் கூட நம்பிக்கையானவர்தான். ஆனால் கூட்டணிக்கட்சிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆகியோருடனான உறவு சரியில்லை. முக்கியமாக முதல்வர் பதவியை விட்டுத்தரமாட்டார்.


மல்லிகார்ஜூன் கார்கே


மேலவை உறுப்பினர், கா.. உறுப்பினர்.


முதுகுக்கு பின்னால் முணுமுணுக்கும் அரசியல் அறியாதவர். அமைப்பை திரட்டும் திறன் இல்லாதவர்.


குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, கபில் சிபல், மனிஷ் திவாரி ஆகிய மனம் திறந்து விமர்சனங்களை முன்வைத்து பேசும் காங்கிரஸ் உறுப்பினர்களும் தலைவர் பதவிக்கு பொறுத்தமானவர்கள். இவர்கள் பல்வேறு ஊடகங்களிலும் காங்கிரஸ் சார்பாக பங்கேற்று அதன் தரப்பை முன்வைத்து பேசி வருகிறார்கள்.



இந்தியா டுடே



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்