டிஜிட்டல் பரிமாற்றத்தில் செய்யவேண்டியவை, செய்யக்கூடாதவை

 

 

 Credit Card, Payment, Credit, Card, Money, Business



டிஜிட்டல் பரிமாற்றத்தில் செய்யவேண்டியவை, செய்யக்கூடாதவை


இணையம், மொபைல் வழி பரிமாற்றம்


வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை தட்டச்சு செய்து இணைய வழி பணப்பரிமாற்றம் செய்வது முக்கியம். முகவரியில் HTTPS என்று ்இருப்பதை சோதியுங்கள். எஸ் என்ற எழுத்து பாதுகாப்பை குறிக்கிறது. கூடவே உள்ள பூட்டு அடையாளம் பாதுகாப்பான பரிமாற்றத்திற்கு சான்று.


உங்கள் கணக்கிற்கு அளிக்கும் பாஸ்வேர்டு எவரும் கணிக்க முடியாதபடி, #*@$ ஆகிய எண்கள், சிறப்புக்குறியீடுகளைக் கண்டிப்பாக கொண்டிருக்க வேண்டும்.


பணப்பரிமாற்றத்திற்கு பயன்படுத்தும் ஆப்களை(வங்கி, வங்கியல்லாதவை, வாலட்) மேம்படுத்திக்கொண்டே இருப்பது அவசியம்.


வங்கிக் கணக்கோடு ஒருவரின் ஸ்மார்ட்போன் எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவை இணைக்கப்பட்டால், குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலம் உடனுக்குடன் பரிமாற்றத்தை அறியலாம்.


நீங்கள் செய்யாத பணப்பரிமாற்றம் வங்கிக் கணக்கில் நடந்தால், அதுபற்றிய புகாரை வங்கிக்கு அளிக்கவேண்டும்.


செய்யக்கூடாதவை


இணையத்தில் வங்கி இணைய முகவரியை சர்ச் எஞ்சினில் தேடி, பணப் பரிமாற்றம் செய்யக்கூடாது.


நம்பகத்தன்மை இல்லாத வலைத்தளங்களில் வங்கி கணக்கு தொடர்பான தகவல்களைக் கொடுக்க கூடாது.


பொதுஇடங்களில் உள்ள வைஃபை, இணைய மையங்களில் உள்ள கணினிகளைப் பயன்படுத்தி பணப் பரிமாற்றம் செய்யக்கூடாது.


இணையவழி பயன்பாட்டிற்காக ஐடி, பின் எண், ஆப் வழியாக பயன்படுத்தும் பின் எண் ஆகியவற்றை வங்கி ஊழியரிடம் கூட வழங்க கூடாது.


ஏடிஎம் பரிமாற்றம்


உங்கள் டெபிட் கார்டில் இஎம்வி (EMV) மற்றும் பின்கோடு ஆகிய வசதிகள் இருப்பது அவசியம். சாதாரண மேக்னடிக் பட்டை மட்டும் இருந்தால் அதனை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளவேண்டும்.


பொருட்களை வாங்கும்போது பின்கோடை பார்க்கும்படி கேமரா, பணம் எடுக்கும்போது கார்டை தேய்க்கும் எந்திரம் சரியாக இருக்கிறதா என கவனித்து ஏடிஎம் கார்டை பயன்படுத்துங்கள்.


ஏடிஎம் மையத்தில் பின்கோடை டைப் செய்யும்போது, ஒருகையால் மூடிக்கொண்டு மறு கையால் டைப் செய்வதை பழக்கமாக்கிக்கொள்ளலாம்.


ஏடிஎம் எந்திரத்தில் பெறும் பணத்தை சரியாக இருக்கிறதா என எண்ணிக்கொண்டு, மறக்காமல் பரிமாற்றம் முடிந்ததும் கார்டை எந்திரத்தில் இருந்து திரும்ப பெறவேண்டும்.


ஸ்மார்ட்போன் எண்ணை வங்கியில் கொடுத்து வைத்திருந்தால், பணம் பரிமாற்றம் ஆகும்போது குறுஞ்செய்தி கிடைக்கும்.


ஏடிஎம் கார்டு திருடுபோனால், தொலைத்துவிட்டால் உடனே அதனை முடக்குவதற்கான தகவலை வங்கியில் தெரிவிப்பது அவசியம்.


கவனிங்க!


பொருட்களை வாங்கும்போது பணப்பரிமாற்றம் தோல்வியடைந்தது என செய்தி வந்தால் அதனை வங்கியில் தெரிவிக்கவேண்டும். அவர்கள் ஐந்து நாட்களுக்குள் நடவடிக்கை எடுப்பார்கள். அல்லது இழப்பீடா தினசரி ரூ.100 என வழங்குவார்கள்.


கா.சி.வின்சென்ட்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்