இடுகைகள்

மறுபிறப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குடும்பத்தின் வீழ்ந்த பெருமையை தூக்கி நிறுத்த படாதபாடு படும் தற்காப்புக்கலை மாஸ்டர்!

  சுப்ரீம் டிமோன் மாங்கா காமிக்ஸ் ரீட்மாங்காபேட்.காம் 100--- முதல் பாகம். நாயகனின் அம்மா சாதியில் தாழ்ந்தவர். பலத்திலும் குறைந்த குடும்பம். அவரை இரண்டாவது மனைவியாக யூ குடும்பத்தில் மணம்செய்து வைக்கிறார்கள். ஆனால் அந்த குடும்பத்தினர் அவரை கொடுமைபடுத்துகிறார்கள். ஒருகட்டத்தில் வாரிசு பிரச்னை காரணமாக, நாயகனை அடித்து உதைத்து குற்றுயிராக்கி டிராகன் வாழும் இடத்தில் தூக்கி வீசுகின்றனர். அங்குள்ள ஆன்மா நாயகனின் உடலில் புகுந்து அவனை வலிமையாக்குகிறது. கூடவே, அவனுக்கு ஆதரவாக ஆறு காதுகள் கொண்ட குரங்கு ஒன்றும் நண்பனாகிறது. அப்போது வேறு என்ன? நாயகனின் ஆக்சன் இன்ட்ரோடெக்சன்தானே தேவை?  அம்மாவை வல்லுறவு செய்ய முயற்சிக்கும் குடு்ம்ப உறவுகளை அடித்து உதைத்து, யூ குடும்பத்தில் இருந்து பிரித்து தாத்தா வீட்டிற்கு கூட்டி வருகிறான். அவனது தாத்தா, அரசு ராணுவத்தில் புகழ்பெற்ற படைப்பிரிவுத் தலைவராக இருக்கிறார். சிறுவயதிலேயே நாயகனுக்கும், மூன் என்ற பெண்ணுக்கும் திருமணம் செய்து வைக்கப்படுகிறது.  நாயகன் பலவீனமாக இருப்பதால் அவனது தாத்தா, தனது தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்காமல் இருக்கிறார். திடீரென டிராகன் ஆன்மா உள்

மறுபிறப்பெடுத்து வந்து தீயசக்தி இனக்குழுவை அழிக்கப் போராடும் இரவு வீரன்! இம்மார்டல் இன்விசிபிள்

படம்
  இம்மார்டல், இன்விசிபிள் மாங்கா காமிக்ஸ் ரீட்மாங்காகாமிக்ஸ்.காம் 150---- தீயசக்தியைச் சேர்ந்த இனக்குழுவில் உள்ள நாயகன், மக்களுக்கு பீதியூட்டிய தற்காப்புக்கலை மாஸ்டர். அனைத்து நாடுகளிலும் பொது எதிரியாக கருதப்பட்டு துரத்தப்படுகிறார்.  பின்னாளில், எதிரிகளால் வெட்டி படுகொலை கொல்லப்படுகிறார். ஆனால் அவர் மனதில் நம் வாழ்க்கையை முழுமையாக சுதந்திரமாக வாழ முடியவில்லை என்ற கருத்து இருக்கிறது. இதனால் அவர் மீண்டும் பிறப்பெடுக்கிறார். மறுபிறப்பில், சென் என்ற வணிக குடும்பத்தைச் சேர்ந்தவரின் வாரிசாக பிறக்கிறார். அப்பா, வணிகர். அம்மா, புகழ்பெற்ற வாள் வீராங்கனை. அம்மாதான், மகன் கோ உன்னுக்கு அடிப்படை தற்காப்புக்கலை பயிற்சிகளைக் கற்பிக்கிறார். தினசரி மறக்காமல் பயிற்சி செய்யவேண்டும் என கூறுகிறார். அதுவே கோ உன்னுக்கு போதுமானதாக இருக்கிறது. அம்மா சொல்லிக்கொடுத்த கலைகளோடு, அவன் முற்பிறவியில் கற்ற தீயசக்தி கலைகளையும் சேர்த்து பயிற்சி செய்கிறான்.  அவன் அம்மா முற்பிறவியில் எதிரிகளுடன் சண்டையிட்டு இறுதியாக இறந்துபோகிறார். எனவே, அந்த சூழ்நிலையை கோ உன் மாற்ற முயல்கிறான். தன்னுடைய புத்திசாலித்தனத்தால் அம்மாவின் வாள

உலகை ஆள நினைப்பவனின் மறுபிறப்பு ரகசியங்கள்!

படம்
  ஸ்காலர் ரீஇன்கார்னேஷன்  மாங்கா காமிக்ஸ்  150 அத்தியாயங்கள்---- தற்காப்புக்கலை கற்ற மாவீரன் ஒருவனை, பத்து தற்காப்பு கலை மாஸ்டர்கள் ஒன்றாக சேர்ந்து சதி செய்து  கொல்ல நினைக்கிறார்கள். எதற்கு, அவனால் உலக அமைதி கெட்டுவிடுமாம். மாவீரனைப் பொறுத்தவரை கற்ற டார்க் ஆர்ட்ஸ் கலையை ஆயுதமாக பயன்படுத்துகிறான். அவனிடம் வாளோ, குறுங்கத்தியோ கூட கிடையாது. தற்காப்புக்கலை கற்றவன் ஆயுதங்களை சார்ந்து இருக்ககூடாது என்பதுதான் அவனது உறுதியான கொள்கை. இமாலயம் போன்ற மலைப்பகுதியில் நடக்கும் சண்டையில், புத்த துறவி தற்கொலைத் தாக்குதல் நடத்தி மாவீரனை கொல்கிறார். அவரும் இறந்துபோனதாக காட்டுகிறார்கள்.  பிறகு, அதிக காலமெல்லாம் ஆகவில்லை. அதே மாவீரன் மீண்டும் பிறக்கிறான். டார்க் ஆர்ட்ஸ்  என்ற தற்காப்புக்கலை கற்றதால் கொல்லப்பட்டவன், மீண்டும் அதே கலையை நினைவில் கொண்டு பிறக்கிறான். முற்பிறவி நினைவுகளுடன் நகரத்தின் தலைவர் வீட்டில் பிறக்கிறான். முற்காலத்தில், அனாதை. ஆனால் புதிய மறுபிறப்பில் குடும்பம், பெற்றோர். தங்கை, குறிப்பாக வீடு, செல்வம் என அனைத்துமே இருக்கிறது.  மாவீரனைப் பொறுத்தவரை தனது உலகத்தை ஆளும் ஆசையை அவன் கைவிடவில்ல

மறுபிறப்பெடுத்து இரண்டாயிரம் ஆண்டுகளாக அடைத்து வைத்த தீயசக்தியுடன் போராடும் பூசாரி!

படம்
  ஃபிரம் நவ் ஆன் இட்ஸ் ஷோ டைம் ஃபிரம் நவ் ஆன், இட்ஸ் ஷோ டைம் கே டிராமா ராக்குட்டன் விக்கி இரண்டாயிரம் ஆண்டுகளாக அடைக்கப்பட்ட தீயசக்திக்கும், அதை அடைத்த பூசாரிக்குமான   ஜென்மச் சண்டை. தொன்மைக் கால கொரியா. அங்குள்ள சிற்றரசு நாடு. அதில் வாழும் தலைமை பூசாரி, பஞ்சம் தீர்க்க தனது புனித கண்ணாடியைக் கொண்டு   வேண்டிய மழையை வரவைக்கிறார். நாடு செழிப்புறுகிறது. நாட்டு மக்களும் மகிழ்கிறார்கள். அந்த நாட்டின் மன்னரின் மகள், அதாவது இளவரசி அனைவரின் முன்னிலையில் தான் பூன் சிக் என்ற தலைமை பூசாரியை காதலிப்பதாக பேனர் பிடித்து சொல்கிறாள். பூன் சிக்கிற்கு என்ன சொல்வது என்று தெரியாத நிலை, இளவரசியை தான் விரும்புகிறேன் என்று சொன்னால் அடுத்த நொடி அவரின் தலையை வெட்டி எறிந்துவிடுவார்கள். அவரின் இனத்தை   அழித்து வீடுகளை கொளுத்திவிடுவார்கள். எனவே இளவரசியிடம் அரச குல ஆட்களைப் பார்த்து மணந்துகொள்ளுங்கள். தான் தாழ்ந்த குலத்தை சார்ந்தவன் என்று கூறுகிறார். ஆனால், இளவரசி கேட்பதாக இல்லை. தலைமை பூசாரியும், இளவரசியும் குணத்தில் ஒன்று போலத்தான். தன்னை அழித்துக்கொண்டாவது பிறருக்கு நன்மை செய்பவர்கள். இதுதான் அவர்களை