இடுகைகள்

டிசம்பர், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பத்திரிகைகளை தாக்கும் சைபர் குழு!

படம்
நாளிதழ்களை தாக்கிய இணைய கொள்ளையர்கள்! அமெரிக்காவைச் சேரந்த லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் நாளிதழ் இணையத்தாக்குதலில் சிக்கியுள்ளது.  பத்திரிகையாளர்களை திட்டமிட்டு தாக்கிய இணைய தாக்குதல் குழு, நியூயார்க் டைம்ஸ், வால்ஸ்ட்ரீட் ஜர்னல் ஆகிய இதழ்களை அச்சகத்திற்கு அனுப்பும் பணியை தாமதப்படுத்தியுள்ளனர். அமெரிக்கர்கள் தாக்குதலுக்கு காரணம் யார் என்று கூறுவார்கள்? அதேதான். வடகொரியா அல்லது கிழக்கு ஐரோப்பா என சந்தேகப்பட்டனர் . பின்னர் தாக்குதல் அமெரிக்காவிலேயே நடந்துள்ளது கண்டறியப்பட்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். Ryuk  எனும் ரான்சம்வேர் அமெரிக்க பத்திரிகைகளை தொடர்ச்சியாக தாக்கியுள்ளது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. பாரம்பரிய செய்தி நிறுவனங்களைக் கடந்த சோஷியல் தளங்களின் வழியே செய்திகளை படிக்கும் அமெரிக்கர்கள் உருவாகத் தொடங்கியுள்ளனர். இதில் தகவல்கள் சரியாக இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.

தூக்கத்தில் டெக்ஸ்டிங் செய்கிறீர்களா?

படம்
தூக்கத்தில் குறுஞ்செய்தி! இது எப்படி முடியும்? நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு தூக்கத்தின் அலம்பலில் மெசேஜ் அனுப்புவதுதான் டெக்ஸ்டிங் என பிரபலமாகிவருகிறது. போனை திறந்து கவனமின்றி எப்படி செய்தி அனுப்ப முடியும்? தூக்க கிறக்கத்திலேயே நண்பர்களுடன் பேசுகிறோம் அல்லவா? குறுஞ்செய்தி அனுப்புவதும் அப்படியே நிகழ்கிறது. என்ன அனுப்பினோம் என்பது கூட பலருக்கும் அடுத்தநாள் நினைவிருக்காது. அப்போது இது தூக்க குறைபாடு என கூறலாமா? நிச்சயமாக. பென்சில்வேனியாவில் 372 கல்லூரி மாணவர்களிடையே நடத்திய ஆய்வில் 26% பேர் தூக்கத்தில் குறுஞ்செய்திகளை அனுப்புவது தெரிய வந்துள்ளது. இதில் படுக்கையில் போன்களை பயன்படுத்தும் பழக்கத்தை கைவிட கையில் க்ளவுஸ் கூட அணிந்து தங்களை சோதித்துள்ளனர். இதற்கு தீர்வுதான் என்ன? போனை படுக்கையிலிருந்து அகற்றுவதே ஒரே தீர்வு. உலகில் 5-10% பேருக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி உள்ளது. தூக்கத்தில் குறுஞ்செய்திகளை அனுப்பும் குறைபாடும் தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது.   

சாம்சங்கின் புதிய நோட்புக்!

படம்
டெக் புதுசு! Samsung Notebook 9 2-in-1 இந்த ஆண்டில் ரிலீசாகவிருக்கும் முக்கியமான லேப்டாப் இது. 13.3 மற்றும் 15 இன்ச் திரை அளவுகளில் தயாரிக்கப்பட்டுள்ள இக்கணினி ஓவியக் கலைஞர்களுக்கானது. இதில் கொடுக்கப்பட்டுள்ள இருமடங்கு வேகம் கொண்ட S பேனா இதற்காக உதவும். 16 ஜிபி ராம், அலுமினிய பாகங்கள், ஐ7 புரோசஸர், 15 மணிநேர பேட்டரி சக்தி என அசத்தலாக உருவாகியுள்ளது. RM 25-01 காட்டில் தனியாக மாட்டிக்கொண்டுவிட்டீர்கள். எப்படி தப்பி பிழைப்பீர்கள். அதற்குத்தான் நடிகர் சில்வஸ்டர் ஸ்டாலோன் வடிவமைத்த இந்த கைக்கடிகாரம் உதவப்போகிறது. காம்பஸ், நீரின் தூய்மை அளவிடும் திறன் உள்ளிட்ட பல விஷயங்களை இதில் சாதிக்கலாம். nReal Light மேஜிக் லீப் நிறுவனத்தின் என்ரியல் லைட் கண்ணாடி, பார்க்கும் காட்சிகளை ஃபேன்டஸி எஃபக்ட்டுகளுடன் பார்க்க உதவுகிறது. நிஜ வாழ்வில் ஃபேன்டஸி தேவை என்பவர்களுக்கு இக்கண்ணாடி பிடிக்கும்.   

சோலார் பேனல் ஆராய்ச்சி சாதித்த மாணவி

படம்
சோலார்பேனல் ஆராய்ச்சி! அமெரிக்காவின் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த பதிமூன்று வயது மாணவி ஜார்ஜியா ஹட்சின்சன் புதிய சோலார் பேனல் தயாரிப்புக்காக 25 ஆயிரம் டாலர்கள் பணப்பரிசை வென்றுள்ளார். அறிவியல் கண்டுபிடிப்புகளுக்காக பள்ளிகளுக்கிடையே பிராட்காம் மாஸ்டர்ஸ் அமைப்பு நடத்திய போட்டியில்தான் ஜார்ஜியா சாதித்திருக்கிறார். சூரியன் ஒளியை ட்யூயல் ஆக்சிஸ் ட்ராக்கர் மூலம் சேமிக்கும் நுட்பத்தை தனது சோலார் பேனலில் முயற்சித்து பரிசு வென்றிருக்கிறார் ஜார்ஜியா ஹட்சின்சன். இதன்மூலம் விலை அதிகமான சென்சார்களை விட துல்லியமாக சூரியனின் நகர்வை கண்காணித்து சோலார் பேனல்களை நகர்த்திக்கொள்ள முடியும். “வெப்பமயமாதலால் சூழல் மாறிவருகிறது. அதை எதிர்கொள்ள இதுபோன்ற கண்டுபிடிப்புகள் உதவும்” என்கிறார் ஜார்ஜியா. தன் கண்டுபிடிப்பிற்கு காப்புரிமை வாங்க விண்ணப்பித்துள்ள ஜார்ஜியா கிடைத்த தொகையை தன் எதிர்கால கல்விக்கு செலவிட முடிவு செய்துள்ளார். “அறிவியல் படிப்பு என்பது ஆண்களுக்கு மட்டுமானதல்ல; பெண்களும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை என் தோழிகளுக்கு ஏற்படுத்துவதே என் முதல் வேலை” என்கிறார் ஹட்சின்சன்.

போராளிப் பெண்கள் 2018

படம்
ஏஞ்சலா சைனி(38) பஞ்சாபில் பிறந்த ஏஞ்சலா சைனி அறிவியல் எழுத்தாளர். பெண்களை அறிவியல் துறைக்குள் அனுமதிக்காத ஆண்களின் மேலாதிக்கத்தை கூறும் இன்ஃபெரியர் ஹவ் சயின்ஸ் காட் வுமன் ராங் எனும் நூலை எழுதியுள்ளார். தற்போது இங்கிலாந்தில் வசிக்கும் சைனி, படிக்கும்போது கணக்கு வகுப்பில் அவர் மட்டுமே ஒரே ஒரு சிறுமி. ”ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கூட 1945 வரை எந்த ஒரு பெண்ணுக்கும் பட்டம் வழங்க தயாராயில்லை. நான் சந்தித்த அறிவியலாளர் நேரடியாக என்னிடமே கணக்கில் பெண்கள் பிரமாதமானவர்கள் என பாலின வெறுப்போடு பேசினார்” என உறுதியாக பேசுகிறார் சைனி. அடுத்த புத்தகமும் அறிவியல் எப்படி பெண்களை பாலின பேதத்துடன் நடத்துகிறது என்பதைப் பற்றி எழுத திட்டமிட்டுள்ளார் சைனி. பி விஜி(50) கோழிக்கோட்டிலுள்ள கடைகளில் பெண்கள் நிம்மதியாக உட்காரந்து வேலை பார்க்க விஜியின் போராட்டம் முக்கியக்காரணம். 2018 ஆம் ஆண்டின் ஜூலையில் கேரள அரசு, புதிய தொழில்துறை சட்டம் மூலம் பெண்களுக்கான வேலைச்சூழலை உறுதி செய்துள்ளது. ”பெண்கள் வேலையில் கடுமையாக ஆண்களோடு போட்டியிட்டு உழைக்கிறார்கள் எனில் மாலையில் ஆண்களின் வன்முறைகளுக்க

2018 மறக்க முடியாத பெண் போராளிகள்

படம்
சக்தி 2018 நிர்ப்ரீத் கவுர்(50) 1984 சீக்கியர்கள் படுகொலை யாராலும் அந்த களங்கங்களை மறைக்க முடியாது. காங்கிரஸ் தொண்டர்கள் செய்த இனப்படுகொலைக்கு நீதி கேட்டு போராடிய பெண்மணி வீடு, வாசல், நிலம், நகை என அனைத்தையும் விற்று காங்கிரஸ் எம்.பி சஜ்ஜன் குமாருக்கு தண்டனை பெற்று கொடுத்திருக்கிறார். கவுரின் பதினாறு வயதில் அக்கொடூரம் நிகழ்ந்தது. அவரின் தந்தையை கட்டிப்போட்டு அடித்து சித்திரவதை செய்து மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தி கொன்றனர். “நிச்சயம் என் தந்தையை நான் காப்பாற்றியிருக்கலாம். ஆனால் அவரை எரித்துக்கொன்றுவிட்டு அவர் துடித்து சாவதை பக்கத்திலேயே நின்று ரசித்தனர்” என்று கூறுவதை நினைத்து பார்க்கவே முடியவில்லை. அந்நிகழ்விற்கு பிறகு கவுர் மூன்று நாட்கள் தலைமறைவாக இருந்து உயிர்பிழைத்திருக்கிறார். காங்கிரஸூக்கு எதிராக வழக்கு போட்டு வெல்வது சாத்தியமா? காலிஸ்தான் ஆதரவாளர் என பதினொரு ஆண்டுகள் சிறையில் தள்ளி சித்திரவதை செய்தது அரசு. ஆனால் கவுர் தளரவில்லை. சிபிஐ, நானாவதி கமிஷன் மீது நம்பிக்கை வைத்து குறைந்தபட்சம் சஜ்ஜன்குமாருக்கு தண்டனை வாங்கி கொடுத்திருக்கிறார். ஆனால் நீதிக்கான

2019 என்ன நடக்கப்போகிறது?

படம்
இந்தியாவில் யோகியின் ஆட்சியிலுள்ள உ.பியில் பிரக்யா ராஜில் ஜனவரி 15 ஆம் தேதி, கும்பமேளா நடைபெற விருக்கிறது. ராமர்கோவிலை கட்டுவதற்கான தீர்ப்பு ஜன. 4, சபரிமலை மனு மீதான விசாரணை ஜன.22 தொடங்கவிருக்கிறது. இலங்கை தேர்தல் ஜன.5 ஆம் தேதி தொடங்குகிறது. பிப்.1 ஆம் தேதி இந்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. கடல்படை அதிகாரி குல்பூஷன் யாதவ் மீதான மரண தண்டனையை எதிர்த்து இந்தியா முறையிட்ட மனு பிப்.18 - 21 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. மார்ச் 29 ஆம் தேதி இங்கிலாந்து ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகுகிறது. டிசி காமிக்ஸ் பணக்கார சூப்பர் மேனான பேட் மேனுக்கு மார்ச்சில் 80 வயது ஆகிறது. ஏப்ரல் மக்களவை தேர்தல் தொடங்குவது ஏப்ரலில். ஒடிஷா, ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம், ஜம்மு - காஷ்மீரிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. மே மாதம் 30 ஆம் தேதி, இங்கிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்குகின்றன. முதல் 5 ஜி போனும் இங்கிலாந்தில் அறிமுகமாகவிருக்கிறது. தென் ஆப்பிரிக்க தேர்தல் நடைபெறும். ஜூன் மாதம், நிலவை மனிதர்கள் தொட்டு 50 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன

மறக்கமுடியாத சம்பவங்கள் 2018

படம்
சிபிஐ தொடங்கி 55 ஆண்டுகளான பின் அதன் நம்பகத்தன்மையை குலைக்க பாஜக செய்த சதி வேலை பார்த்தது. இதன்காரணமாக அதன் அலுவலகத்திற்குள்ளேயே ரெய்டு நடந்தது. ஃபிளிப்கார்ட் நிறுவனத்தை வால்மார்ட்  16 பில்லியன் டாலர்கள் தொகைக்கு விலைபேசி வாங்கியது. 159 ஆண்டுகளாக யாரும் முறியடிக்காத சார்லஸ் டார்வினின் பரிணாம வளர்ச்சியை பாஜக சத்யபால் சிங் கேள்வி கேட்டு சர்ச்சையில் சிக்கினார். மனிதக்குரங்கிலிருந்து மனிதர்கள் உருவாகி வருவதை யாருமே பார்க்கவில்லை என புதுமையான விளக்கம் சொன்னார் சிங். டார்வினின் ஆவியும் எதிர்பார்க்காத எதிர்ப்பு இல்லையா? பாலியல் படங்களை பார்ப்பதில் இந்தியர்களின் அடித்துக்கொள்ள முடியாத இடம் 3 என நிரூபணமானது. தன்பாலின மக்களை குற்றவாளிகள் எனக்கூறும் பழைமை வாத சட்டத்தை நீக்கியது உச்சநீதிமன்றம். இதற்கான தீர்ப்பு பக்கங்களின் எண்ணிக்கை 493. 27 ஆண்டுகளுக்கு பிறகு மேகாலயாவில் சிறப்பு ஆயுதப்படை சட்டம் வாபஸ் பெறப்பட்டது. ஆசிய விளையாட்டுப்போட்டியில் இந்தியா நம்ப முடியாத வேகம் காட்டி வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 69. அசாமில் தேசிய மக்கள் பதிவேட்டில் 40 லட்சம் மக்களின் பெயர்கள் கிடை

விண்வெளி சாதனைகள் 2018 - மறக்கமுடியாத முயற்சிகள்!

படம்
விண்வெளியில் கார் தொழில்துறை சூப்பர்ஸ்டார் எலன் மஸ்க், விண்வெளிக்கு காரை அனுப்பி சாதித்தார். டெஸ்லா ரோட்ஸ்டர் காரை பால்கன் ராக்கெட்டில் ஏற்றி விண்வெளிக்கு பார்சல் அனுப்பி பலரையும் பீதி கொள்ளச்செய்தார். கார் கவிழ்ந்துவிடவில்லை. இன்றும்  56, 237 கி.மீ வேகத்தில் விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கிறது. ஜீன்களை மாற்றும் விண்வெளி விண்வெளியில் வாழ்ந்த நாசா வீரர் ஸ்காட் கெல்லிக்கு உடலிலுள்ள மரபணுக்கள் மாற்றம் கொண்டன. அவர் விண்வெளியில் ஓராண்டு இருந்ததால் பூமிக்கு திரும்பியும் ஜீன்கள் 7 சதவிகிதம் மாற்றமின்றி அந்நிலையிலேயே இருப்பது கண்டறியப்பட்டது. செவ்வாயில் நீர் மூன்று ஆண்டுகள் விண்வெளியில் செவ்வாயை ஆராய்ந்த இத்தாலி விண்வெளி ஆராய்ச்சியாளர் அங்கு 20 கி.மீ நீளத்தில் உறைந்த ஏரி இருப்பதாக கூறி பலருக்கும் பிரமிப்பூட்டினார். அந்த இடம் மட்டுமல்லாமல் பிற இடங்களிலும் நீர் உறைந்துள்ளதை ஆய்வறிக்கைகள் உறுதி செய்தன. சக்திவாய்ந்த ராக்கெட் கடந்த பிப்ரவரியில் எலன்மஸ்கின் ஸ்பேக்ஸ் எக்ஸ், 27 எஞ்சின்களை கொண்ட திரும்ப பயன்படுத்தும் திறன் கொண்ட ராக்கெட்டை விண்வெளியில் ஏவியது. பயன்படுத்தி

துப்பாக்கிச்சூடுகளை தடுக்கும் பாதுகாவலர்!

படம்
பள்ளிகளின் பாதுகாவலர்! பள்ளியின் நெருப்பு அலாரத்தை அடித்த சிறுவனை கண்டுபிடித்தபோது சிகாகோ பொதுப்பள்ளி பாதுகாப்பு அதிகாரி ஜேடின் சூ உறுதியாக சொன்னார். “இதற்காக நான் உன்னை தண்டிக்க போவதில்லை. நான் உனக்கு வேலைதருகிறேன். செய்கிறாயா?” என்று கேட்டார். கருப்பின மாணவர் ஒப்புக்கொள்ள, அதன்பின் நெருப்பு அலாரமணி ஒலிக்கவில்லை. 2011 ஆம் ஆண்டு நவ.11 முதல் 3 லட்சத்து 70 ஆயிரம் மாணவர்களது பாதுகாப்புக்கு ஜேடின் சூ பொறுப்பு.  பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வரும்போதும், பள்ளியிலும், பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்லும் வரையிலும் கண்காணித்து அனுப்புகிறது ஜேடின் சூ குழு. 2009 ஆம் ஆண்டு தொடங்கிய இப்பணி இன்று விரிவான திட்டமாக பின்பற்றப்பட்டுவருகிறது. “பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடந்த சம்பவத்தின்போது, காலை பதினொரு மணிக்கு பள்ளிக்கு வெளியே மாணவர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என யோசித்தேன்” என்கிறார் பள்ளி ஆய்வாளரான நிகோலஸ் ஜே ஸ்க்யூலெர். சிகாகோ பல்கலைக்கழகம், நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பட்டம் வென்றவர் மோட்டரோலா, கிராஃப்ட் புட்ஸ் நிறுவனங்களில் பணிபுரிந்தவர் ஜேடின் சூ. 

திருநங்கை அரசியல்வாதி சாதித்தது எப்படி?

படம்
சக்தி! டேனிகா ரோம் 1984 ஆம் ஆண்டு வர்ஜீனியாவில் பிறந்தவரான டேனிகா ரோம் அமெரிக்காவின் மாநில செனட் சபை உறுப்பினர்(ஜனநாயக கட்சி 2017-18). திருநங்கை என்ற அடையாளத்துடன் தேர்தலில் வென்றுள்ளதே செய்தி. “பத்திரிகையாளரை விட மக்கள் பிரச்னைகளை வேறு யார் புரிந்துகொள்ளமுடியும்? மக்களின் பிரச்னைகளை தீர்க்கும் மசோதாக்களை கொண்டுவருவதே முக்கியம். நான் திருநங்கை என்பதல்ல” என உறுதியாக பேசுகிறார் டேனிகா. லோச்மாண்ட் லோமண்ட் பள்ளி, செயின்ட் போனவென்ச்சர் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர் நியூயார்க்கில் இதழியல் படித்தார். “என் தாத்தா, செய்திகளை அறிந்துகொள்வதில் ஆர்வமுடையவர். அதனால்தான் செய்தியாளராக மாறும் ஆசை உருவானது” என்பவர் பத்தரை ஆண்டுகளாக செய்தியாளராக(Gainesville Times and Prince William Times.) பணியாற்றி 2 ஆயிரத்து 500 கட்டுரைகளை எழுதிக்குவித்தார்.  2004 ஆம் ஆண்டில் ஜார்ஜ் டபிள்யூ புஷ், தன்பாலினத்தோர் திருமண தடை சட்டத்தை தடைசெய்தபோது ரோம் அரசியலில் இணைய விரும்பினார். “நீங்கள் யார், எங்கிருந்து வருகிறீர்கள் என்பதை விட மக்களை முன்னேற்றும் ஐடியாக்கள் உங்களிடம் உள்ளதா, செயல்படுத்

டிவி ஆதிக்கம் என்ன செய்யும்?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? டிவி நம்மை எப்படி அடிமைப்படுத்துகிறது? டிவியில் வரும் தொடர்கள் நம்மை அடிமைப்படுத்த உளவியல் முறையை கையாள்கின்றன. சாதாரணமாக ஒருவர் வெளியுலகை எதற்கு நாடுகிறார், பல்வேறு உறவுகளுடன் பேசுவதற்குத்தானே. டிவியின் தொடர்களில் ஏராளமான கேரக்டர்களை புகுத்தி நிஜ உலகை மறக்கவைப்பதுதான் டிவி சேனல்களின் வெற்றி. சோபாவில் அமர்ந்தாலே உலகின் அத்தனை குணாதிசயங்கள் கொண்ட கதாபாத்திரங்கள் உங்களுடன் பேசினால் நிஜ உலகத்தின் தேவை என்ன? டிவி முன் கட்டுண்டு கிடந்தால் நிஜ உலகின் அத்தனை விஷயங்களும் உங்களின் கைவிட்டு போய்விடும். 

பிளாசிபோ மாத்திரைகளின் வரலாறு!

படம்
பிளாசிபோ மனம்! தொண்ணூறுகளிலிருந்து வளர்ந்துவரும் பிளாசிபோ மருந்துகள்(சர்க்கரை மாத்திரைகள்) உளவியல் ரீதியாக நோயாளிகளை குணமாக்குவதில் முக்கிய பங்காற்றுகின்றன. 2005 -15 காலகட்டத்தில் வலிநிவாரணிகளை விட பிளாசிபோ மாத்திரைகள் சிறப்பாக செயல்பட்டிருக்கின்றன.  அமெரிக்காவில் 46 சதவிகித மருத்துவர்கள் பிளாசிபோ மாத்திரைகளை நோயாளிகளுக்கு பரிந்துரைத்துள்ளனர்.  நீண்டகால நோய் காரணமாக வலியால் அவதிப்படுபவர்களுக்கு பிளாசிபோ உளவியல்ரீதியாக பயனளிக்கிறது. தற்போது குளூட்டேன் பிரச்னை எழுதுவதால் உடல்நலப்பிரச்னை தீவிரமாவதை நாஸிபோஸ்(Nocebos) என்று குறிப்பிடுகின்றனர்.  பதினான்காம் நூற்றாண்டுல் கத்தோலிக்க தேவாலயத்திலிருந்து பிளாசிபோ வார்த்தை பிறந்தது. இறந்தவர்களின் இறுதிச்சடங்கில் பாடும் பாடல்களிலிருந்து இவ்வார்த்தை உருவானது.  விஞ்ஞானி பெஞ்சமின் பிராங்களின் முதல் பிளாசிபோ சோதனையை செய்தார். 1889 ஆம் ஆண்டில் Elixir என்ற மாத்திரையை இங்கிலாந்து மருத்துவரான சார்லஸ் ப்ரௌன் செக்வார்டு தயாரித்து விற்கத்தொடங்கினார்.  1995 ஆம் ஆண்டில் ஹென்றி பீச்சர், தி பவர் ஆஃப் பிளாசிபோ என்ற நூலை பதிப்பித்து உலகெங்கும

வறுத்த பூச்சிகள்தான் எதிர்கால ஸ்நாக்ஸ்!

படம்
நியூஸ் ரூம்! உலகெங்கும் மனிதர்களுக்காக உருவாக்கப்படும் உணவு வீணாக்கப்படும் அளவு 1.43 கோடி டன்கள். சீனாவில் வீணாகும் உணவை சாப்பிட கரப்பான்பூச்சிகளை விவசாயத்துறை வளர்த்துவருகிறது. உணவுக்கழிவை சாப்பிடும் கரப்பான்பூச்சிகளை விலங்குகளுக்கு உணவாக மாற்றமுடியுமாம். விண்வெளி வீரர்களுக்கு ஏற்படும் காயங்களை சரி செய்ய 3டி பிரிண்டிங் நுட்பத்தை பயன்படுத்த ஐரோப்பிய ஏஜன்சி முடிவு செய்துள்ளது. இம்முறையில் செயற்கை தோல், எலும்புகள், உடல் உறுப்புகளை உருவாக்க ஆலோசித்து வருகிறது. ஜெர்மனியின் வால்டர் பிரெண்டல் ஆராய்ச்சி மைய ஆராய்ச்சியாளர்கள் பன்றியின் இதயத்தை பபூன் இன குரங்குகளுக்கு வெற்றிகரமாக பொருத்தி சாதனை செய்திருக்கிறார்கள். ஆறுமாத கண்காணிப்பில் பபூன் குரங்குகள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதிசெய்தவர்கள் மனிதர்களுக்கு இச்சோதனைகளை செய்ய உள்ளனர். இங்கிலாந்தின் இரண்டாவது பெரிய சூப்பர் மார்க்கெட் நிறுவனமான செய்ன்பரி, வறுத்த பூச்சிகளை ஸ்நாக்ஸாக விற்கத்தொடங்கியுள்ளது. உலகில் இரண்டு மில்லியன் மக்கள் பூச்சிகளை உணவாக ஏற்றுள்ளனர் என்கிறது பிபிசி இணையதள தகவல்.   

பெஸ்ட் பை லேபிள் தேவையில்லை!

படம்
நியூஸ் ரூம்! அண்மையில் வெளியான ஐ.நா அறிக்கை கார்பன் வெளியீட்டு அளவு அதிகரித்துள்ளதாக அபாய அலாரம் அடித்துள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் 2டிகிரி செல்சியஸாக கார்பனை கட்டுப்படுத்தவேண்டும் என்பதே பாரீஸ் ஒப்பந்த விதி. உலகெங்கும் ஏடிஹெச்டி நோயால் பாதிக்கப்படும் நோயாளிகள் 20 ஆயிரம் பேரை கார்டிஃப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். ஏடிஹெச்டியால் அதிகம் பாதிக்கப்படும் 12 மரபணுக்களை கண்டறிந்துள்ளனர். நோய் தாக்குதலில் மரபணுக்களின் பங்கு 22 சதவிகிதமாக உள்ளது. தானியங்கி கார் நுட்பத்தை வெப் டெவலப்பர்கள் அறிய வசதியாக அமேஸான் நிறுவனம் பொம்மை கார் ஒன்றை உருவாக்கியுள்ளது. அமேஸான் வெப்சர்வீஸ் நிறுவனம் இதனை பொறுப்பேற்று தயாரித்துள்ளது. நிறுவன ஊழியர்களான பந்தயங்களும் உண்டாம். விலை ரூ.399 டாலர்கள். இங்கிலாந்தைச் சேர்ந்த டெஸ்கோ சூப்பர் மார்க்கெட், விற்பனையிலுள்ள 116 பழங்கள் காய்கறிகளிலுள்ள பெஸ்ட் பை லேபிள்களை அகற்றியுள்ளது. 69% வாடிக்கையாளர்களிடம் ஆய்வு செய்து இம்முடிவை எடுத்துள்ளது என்கிறது டெஸ்கோ. அமெரிக்காவில் பெஸ்ட் பை லேபிள்களின் மூலம் 40 சதவிகித உணவுப்பொருட்கள் வீணாகின்றன.

ஜெர்மனியின் கவிப்பெண்மணி!

படம்
ஜெர்மனி கவிக்குயில்! ஜெர்மனியிலுள்ள பெர்லினில் பிறந்த நெல்லி சச்ஸ்(1891-1970), புகழ்பெற்ற கவிஞர். இவ்வாண்டு அவரது 125 ஆவது பிறந்ததினம். குடல் புற்றுநோயால் மரணித்த நெல்லி, இலக்கியத்திற்கான நோபல் பரிசு வென்ற ஆளுமை. வசதியான யூத தொழிலதிபரின் குடும்ப வாரிசான நெல்லி, நடனம் மற்றும் இலக்கியத்தை விரும்பிக் கற்று பதினேழு வயதில் கவிதைகளை எழுதத் தொடங்கிவிட்டார். 1930 ஆம் ஆண்டு நெல்லியின் தந்தை காலமானார். அப்போது நாஜி படையினரின் தொல்லை அதிகரித்து வந்தது. 1940 ஆம் ஆண்டு ஸ்வீடனின் அரச குடும்பத்தினரின் உதவிபெற்று ஜெர்மனியிலிருந்து நெல்லி மற்றும் அவரது தாய் தப்பிக்க உதவினார் ஸ்வீடன் எழுத்தாளர் செல்மா லாகர்லாஃப். ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமை அடைந்த நெல்லி சில மாதங்களிலேயே ஸ்வீடிஷ் மொழியைக் கற்று கவிதைகளை ஜெர்மனி மொழியில் மொழிபெயர்க்க தொடங்கினார். 75 வயதில் தனது இலக்கியப்பணிகளுக்காக நோபல் பரிசு பெற்ற நெல்லி(இவருடன் இஸ்‌ரேலிய எழுத்தாளர் யோசஃப் அக்னோன்), அறுபது வயதில் தன் முதல் கவிதைத் தொகுப்பை(In den Wohnungen des Todes ) பிரசுரித்தார்.     

உடலில் சிப்கள் பொருத்துவதே நம் வளர்ச்சி

படம்
உடலில் பொருத்தும் சிப்களில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது? 2016 ஆம்ஆண்டு ஐரோப்பாவில் நடைபெற்ற CeBit நிகழ்வில் சிப்களை கைகளில் பொருத்துவது பற்றி விவரித்தனர். இந்த சிப்கள் எதிர்காலத்தில் நம் வீட்டுக்கதவை திறக்கும் சாவியாக, பொருட்களை வாங்கும் பணமாக என பல்வேறு பயன்பாடுகளை உள்ளடக்கியதாக இருக்கும். மருத்துவ காரணங்களுக்காக உடலில் சிப்களை பொருத்துவதற்கும் வேலைக்காக பொருத்துவதற்கும் வித்தியாசம் உண்டு அல்லவா? சில வேலைகளை திறம்பட செய்வதற்காக சிப்களை பொருத்துவதில் தவறில்லை. அது உங்கள் வேலைத்திறனை அதிகரிக்கிறது. மூளையில் பொருத்தப்படும் பேஸ்மேக்கர் கருவி திறனை அதிகரிக்கிறது என்றாலும் தற்கொலை எண்ணம், ஆக்ரோஷ உணர்வு போன்ற பக்கவிளைவுகளும் இல்லாமலில்லை. சிப் பொருத்தலில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு தரும் சட்டங்கள் இன்னும் இயற்றப்படவில்லை. காஸ்மெடிக் ஆபரேஷன்கள் போன்றவைதான் இதுவும் என்பதால் பயப்பட அவசியமில்லை. என்னென்ன நோய்களுக்கு சிப்கள் வரத்தொடங்கியுள்ளன? இதயநோய் மற்றும் சர்க்கரை நோய்களுக்கான சிப்களை வெளிவரத்தொடங்கியுள்ளன. எதிர்காலத்தில் எமர்ஜென்சியின்போது நோயாளியின் உடலிலுள்ள

சிரிக்க சிந்திக்க எல்ஜி நோபல்!

படம்
காமெடி நோபல் பரிசு! 1991 ஆம்ஆண்டு தொடங்கப்பட்டு எல்ஜி நோபல் பரிசு சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் அறிவியல் படைப்புகளுக்கானது. நிறுவனர் மார்க் ஆப்ரஹாம்ஸ். மருத்துவம் உடலின் 3 லட்சம் சிற்றறைகளில் உருண்டோடி வந்து சிறுநீரகத்தில் கற்கள் உருவாகிறது. இச்செயல்முறையை வேகப்படுத்த மார்க் மிச்செல் மற்றும் டேவிட் வர்ட்டிங்கர் ரோலர் காஸ்டரில் பயணிக்கும் முறையை கண்டுபிடித்துள்ளனர். மானுடவியல் சிம்பன்சிகள் மனிதர்களின் பழக்கவழக்கங்களை பின்பற்றுகிறது என்பது ஆராய்ச்சி. அப்படியெனில் சிம்பன்சி போல நடந்துகொள்ளும் மனிதர்களும் உண்டு என சீரியஸாக கிச்சு கிச்சு மூட்டுகிறது தாமஸ் பர்சென், கேப்ரியல் அலினா சாசியக் ஆகியோரின் ஆராய்ச்சி. உயிரியல் வைனில் விழுந்து கிடக்கும் ஈ, ஆணா, பெண்ணா என வாசனை வழியாக கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி. வைனில் விழும் பெண் ஈக்கள் பெரோமோன் எனும் மனிதர்கள் கண்டறிய முடியும் வாசனையை வெளியிடுகின்றன என்பதை கண்டறிந்துள்ளது பால் பெக்கர் குழு. வேதியியல் எச்சில் மூலம் அழுக்கான தரைகளை தூய்மையாக்க முடியுமா என்பதே ஆராய்ச்சி. வேதிப்பொருட்களை விட எச்சிலை பயன்படுத்தி துடைத்தால்

பாலஸ்தீனியர்களின் இடங்களின் மேல் அவர்களுக்கு உரிமை கிடையாது

படம்
நேர்காணல் ”பாலஸ்தீனியர்களின் இடங்களை அபகரிப்பது அநீதியானது” ஓமர் ஷாகிர், ஆய்வாளர், மனித உரிமைகள் கண்காணிப்பகம். தமிழில்: ச.அன்பரசு பாலஸ்தீனத்திலுள்ள சட்டத்திற்கு புறம்பான ஆக்கிரமிப்புகளை பட்டியலிட்ட ஏர்பிஎன்பி, புக்கிங்.காம் உள்ளிட்ட இணையதளங்கள் அவற்றை உடனடியாக நீக்கியுள்ளன. இதற்கு முக்கியக் காரணம், மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்ட Bed and Breakfast on Stolen Land: Tourist Rental Listings in West Bank Settlements ம என்ற அறிக்கை. இது பற்றி ஓமர் ஷாகிப் நம்மிடையே உரையாடினார். நேர்காணலின் சுருக்கமான வடிவம் இது.  வெஸ்ட் பேங்க் பகுதியிலுள்ள இஸ்‌ரேலிய குடியிருப்பு பற்றிய தகவல்களை நீக்க ஏர்பிஎன்பி முடிவெடுத்தது ஏன்? பாலஸ்தீனத்தில் சட்டவிரோதமாக ஏற்பட்ட குடியிருப்புகள் பலவற்றை ஏர்பிஎன்பி தன்தளத்தில் பட்டியலிடப்பட்டிருந்தது. ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் செய்த ஒப்பந்தப்படி அங்கு பாலஸ்தீனியர்கள் விரும்பினாலும் தங்கமுடியாது. சட்டவிரோதமாக பாலஸ்தீனியர்களிடம் பறிக்கப்பட்ட நிலம். இதற்கு முன்பே இவ்விவகாரத்தை அங்குள்ள அமைப்புகள் முன்வைத்தன. பல்வேறு கட்ட ஆராய்ச்சி அறிக்கைகளை ச

உடலில் அரிப்பு ஏற்படுவதன் காரணம் என்ன?

படம்
அரிப்பின் காரணம் தெரியுமா? கொசு கடித்தாலும் சரி, கீழே விழுந்து காயம் ஆனாலும் சரி உடலில் அரிப்பு ஏற்படுகிறது. உடலில் ஏற்படும் ஒட்டுண்ணி தாக்குதலை உடல் தடுக்க அரிப்பை கருவியாக்குகிறது. “மூளை செல்களில் சுரக்கும் செரடோனின் வலி உணர்வை மூளைக்கு கடத்துகிறது. அதேசமயம் உடலில் பூச்சிகளால் அல்லது வேறு விதமாக பாதிப்பு ஏற்படும்போது அது குறித்த கவனத்தை தர அங்கு அரிப்பை தூண்டுகிறது” என்கிறார் வாஷிங்டன் மருத்துவக் கல்லூரியின் ஆராய்ச்சி மைய இயக்குநரான பேராசிரியர் ஸூ ஃபெங் சென். உடலிலுள்ள நோய்தடுப்பு செல்களுக்கு பாதிப்பு ஏற்படும்போது அதனை மனிதர்களுக்கு உணர்த்த அரிப்பு ஏற்படும் சிக்னலை நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படுத்துகிறது. அதேசமயம் ஒருமுறை அரிப்பு ஏற்பட்டால் அது தொடர்வது என்ன காரணத்திற்காக குழப்பம் ஏற்படுகிறது. “அரிப்பு ஏற்படுவது என்பது தீவிரமாகாமல் அடுத்தடுத்த இடங்களுக்கும் பரவுகிறது” என்கிறார் பேராசிரியர் சென். கல்லீரல் நோய், அலர்ஜி, எக்சிமா பிரச்னைகளால் ஏற்படும் அரிப்பு என்பது தோலில் காயம் ஏற்படுமளவு நீளும். இதற்கான தீர்வு மருத்துவரை ஆலோசித்து உணவுமுறை, வாழும் சூழலை மாற்றுவது மட்டுமே.  

ஜஹாங்கீருக்கு பேரரசர் ஆகும் ஆசை இருந்தது

படம்
நேர்காணல் பார்வதி சர்மா, எழுத்தாளர் ஜஹாங்கீரை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்? சில ஆண்டுகளுக்கு முன்பு பாபர் பற்றிய குழந்தைகள் நூல் ஒன்றை எழுதினேன். பிறகு, நாவல் எழுதுவதற்கான முனைப்பில் இருந்தேன். அப்போது என் நண்பர்கள் வரலாற்று நூல் ஒன்றை எழுதலாமே என பரிந்துரைத்தனர். ஜஹாங்கீரைத் தேர்ந்தெடுத்து எழுத நினைத்தேன்.  வரலாற்றில் ஜஹாங்கீர் பலவீனமான அரசர், குடிகாரராக அறியப்படுகிறார். அவரை சித்தரிப்பதில் என்ன வித சவால்களை சந்தித்தீர்கள்? அக்பரின் மகன் ஜஹாங்கீர். நீங்கள் கூறியதுதான் அவரைப்பற்றி பலரும் அறிந்த செய்தி. வேறு செய்திகளும் அவரைப்பற்றி யாருக்கும் தெரியாது. முகலாயர்கள் கூட அவரைப்பற்றி மறந்துவிட்டார்கள். அக்பரின் நிழலில் வளர்ந்தவருக்கு அடையாளம் கூட ஷாஜகானின் அப்பா என்பதுதான். இரண்டு மன்னர்களுக்கு இடையே ஜஹாங்கீர் காணாமல் போய்விட்டார் என்றுதான் கூறவேண்டும். அவர் மதுவில் மயங்கி கிடந்தார் என்பதில் பொய் இல்லை. ஆனால் பேரரசர் என்ற பதவியின் மேல் பேராசை கொண்டவர் ஜஹாங்கீர். எளிதாக அந்த விஷயம் நடக்கவில்லை என்பதோடு மகனுடன் ஒப்பிடப்படும் அவலத்தையும் அவர் சந்தித்தார்.  மனைவி நூர

மணி என்னப்பா? - மயிலாப்பூர் டைம்ஸ்

படம்
மணி என்னப்பா? எல்லாநேரத்திலும் ஒருவர் எப்படி விழிப்பாக இருக்க முடியும். ஆனால் கேள்விகள் வின்சென்டைப் பொறுத்தவரை  பொறுத்தவரை குறைவதில்லை. நண்பருடன் ஜாலியாக டீ சாப்பிடச்சென்றார். டீ டைம் முடிந்தும் பதட்டம் குறையாமல் இருந்தார். ஏன் பாஸ்? எடிட்டர்  ஆறுமணிக்குள் கட்டுரை கேட்டாரா என்ன? என்று கேட்டால் என்னை எரிப்பது போல பார்த்தார்.  கதையின் ஒன்லைன் சிம்பிள், வின்சென்ட் எங்கு சென்றாலும் அவரை மனநலம் பாதித்தவர்கள் மணிகேட்கிறார்களாம்.  என்ன ஒரு வீக்எண்ட் காமெடி என நினைத்தேன். பிளானிங்காக அல்ல; எதார்த்தமாக அவரின் நண்பர் மனோவை கேட்டபோதுதான் விபரீதம் புரிந்தது. அவரும் புதியதாக வாட்ச் வாங்கியிருந்த சமயத்திலும் வின்சென்டிடம் போகும்போது ஒருமுறை வரும்போது ஒருமுறை என மணி கேட்டு மிரட்டியுள்ளனர் பித்தர்கள்.  ஆகா, முன்னோர்கள் சாபம் விட்டுட்டாங்க, தேவனே என்னை திகைக்க வைக்காதீரும் என பைபிள் வாசகங்களை வானத்தை நோக்கி பேச ஆரம்பித்தார் வின்சென்ட். என்ன செய்வது, அவரவர் கர்மம் என விட்டுவிடமுடியுமா? என கட்டிப்பிடித்து தேற்றி ஆல் இஸ் வெல் சொன்னேன். உண்மையில் இது சற்று வித்தியாசமான பிரச்னைதான்.  வாட

லித்தியத்தை இந்தியா பெறுமா?

படம்
லித்தியம் தேடுகிறது இந்தியா! ஸ்மார்ட்போன், லேப்டாப் உள்ளிட்ட எலக்ட்ரிக் சாதனங்களின் பேட்டரிகளுக்கான லித்தியம், கோபால்ட் கனிமங்களை எடுக்க வெளிநாட்டு சுரங்கங்களை இந்தியா நாடவுள்ளது. சீனா இந்த கனிம ரேஸில் ஏற்கனவே முந்தியுள்ளது. நால்கோ, ஹெச்சிஎல், எம்இசிஎல் ஆகிய நிறுவனங்கள் தனியாரின் பங்களிப்புடன் கனிமங்களை பெற முயற்சித்து வருகின்றன. 2030 ஆம் ஆண்டிற்குள் மின் வாகனங்களை சந்தையில் கொண்டுவர இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. உலகில் அர்ஜென்டினா, சிலி, பொலிவியா ஆகிய நாடுகளில் லித்தியம், ஆப்பிரிக்காவின் காங்கோவில் கோபால்டும் கிடைக்கிறது. தற்போது இந்தியாவில் 3.5 லட்சம் டன்கள் லித்தியம் தொழில்துறைக்கு அத்தியாவசிய தேவையாக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு இரும்புத்தாது எடுக்க ஆப்கானிஸ்தானில் அரசு முயற்சித்தும் பாதுகாப்பு பிரச்னைகளால் திட்டம் கைவிடப்பட்டது.  2017 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 1.2 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான கோபால்ட் கனிமத்தை சீனா, காங்கோவிலிருந்து அகழ்ந்தெடுத்து உள்ளது. இந்தியா அறிவியல் லட்சியத்தில் கடக்கவேண்டிய சவால்கள் நிறையவே உள்ளன.

மரபணு எடிட்டிங்கின் சாதனைகள் இவைதான்!

படம்
மரபணுவை வடிவமைப்போம்! மரபணுக்களை வடிவமைத்து தொகுக்கும் CRISPR நுட்பம் கண்டறியப்பட்டதிலிருந்து புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களை தீர்க்கும் முயற்சிகள் அதிகரித்துள்ளன. புற்றுநோய் க்ரீக் மருத்துவரான ஹிப்போகிரேட்ஸ்(கி.பி.460-370) புற்றுநோயை கார்கினோஸ் என குறிப்பிட்டுள்ளார். 2016 ஆம் ஆண்டு சீனாவில் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு டாக்டர். லூ யூ குழுவினர், CRISPR மூலம் எடிட் செய்யப்பட்ட செல்களை உடலில் செலுத்தி சோதித்தனர். நோயாளியின் ரத்தசெல்களை இதற்கு பயன்படுத்தினர். அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர் கார்ல் ஜங் குழுவினர், மெலனோமா, சர்கோமா ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மரபணு சோதனையை அனுமதி பெற்று நிகழ்த்தினர். எய்ட்ஸ் நோய்எதிர்ப்பு சக்தியை உடைத்தெறியும் எய்ட்ஸ் நோய் மாபெரும் உயிர்க்கொல்லிநோய். கட்டுப்படுத்த மருந்துகள் உண்டு. தீர்வுக்கு வழிகள் இல்லை. 2017 ஆம் ஆண்டு மே மாதம் டெம்பிள் மற்றும் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், மெக் கில் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் சென் லியாங் ஆகியோர் மரபணு மாற்றிய செல்களை உடலில் செலுத்தி ஹெச்ஐவி கிருமியை அழிக்க சோ

புவியீர்ப்பு விசையை கணக்கிடும் புதிய வழி!

படம்
புவிஈர்ப்பு விசையை எப்படி கணக்கிடுவது? கிலோகிராமை கணக்கிடும் கருவி எப்போதும் சரியாக இருக்கும் என எப்படி நம்புவது? “இனியும் குறிப்பிட்ட இடத்திலுள்ள(பாரிஸ், பிரான்ஸ்) கருவியை நம்பி அளவீடுகளை நாம் சரிபார்க்க அவசியமில்லை” என்கிறார் ஒடாகோ பல்கலையில் இயற்பியல் துறை பேராசிரியரான மிக்கெல் ஆண்டர்சன்.  நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் பிரான்சிலுள்ளது போல அளவீட்டு கருவிகள் இல்லை. “ஒரேயொரு கருவியை வைத்து அளவீடுகளை செய்வது ஆபத்து. அது பழுதடையும்போது நாம் என்ன செய்வது? அதற்கு மாற்றாக குறைந்த விலையில் அளவீடுகளுக்கான கருவியை உருவாக்குவதே எங்கள் ஆராய்ச்சி” என்கிறார் ஆண்டர்சன்.  லேசர் நுட்பம் மற்றும் குவாண்டம் தியரிகளை பயன்படுத்தி கருவியை உருவாக்கியுள்ளனர். இதில் பயன்படுத்தும் அணுக்கள் கிராவி மீட்டர் போல துல்லியமாக அளவீடுகளை கண்டறிய உதவுகிறது. 

நச்சு உணவு பாதிப்பு ஏற்படுவது ஏன்?

படம்
நச்சு உணவுக்கு தீர்வு! உலகெங்கும் உணவு நச்சாவதால் வயிற்றுப்போக்கு, வாந்தி என பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கான தீர்வை ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். வயிற்றிலுள்ள பேசில்லஸ் செரியஸ் என்ற பாக்டீரியா வெளியிடும் நச்சு மனிதர்களின் உடல் பாதிக்கப்பட முக்கியக் காரணம். “வயிற்றிலுள்ள”இந்த பாக்டீரியா நோய்எதிர்ப்பு அமைப்புடன் ஏற்படுத்தும் செயலின் விளைவாக உணவு நச்சாகிறது” என்கிறார் ஆராய்ச்சி மாணவரான அனுகீர்த்தி மாத்தூர்.  காய்கறிகள், இறைச்சி, மீன், பாஸ்தா ஆகியவற்றை சரியான வெப்பநிலையில் பராமரிக்காதபோது பேசில்லஸ் செரியஸ் பாக்டீரியா அதில் வளரத்தொடங்கி பெருகுகிறது. பாக்டீரியா வெளியிடும் வேதிப்பொருள் உடலின் செல்லை தாக்குகிறது. உடனே நோய் எதிர்ப்பு அமைப்பு இனை தடுக்க முற்பட வயிற்றுப்போக்கு தொடங்குகிறது. “இப்போது பாக்டீரியாவின் தாக்குதலை நம்மால் கணித்து சிகிச்சை மூலம் தடுக்க முடியும்” என்கிறார் மாத்தூர். வருமுன் காப்பதே சிறந்தது என்பதால் கைகளை சரியானபடி கழுவி சமைத்த உணவை சூடு குறைவதற்கு முன்பு சாப்பிடுவது வயிறு தொடர்பான நோய்களை

இணையத்தில் உங்கள் மதிப்பு என்ன?

படம்
இணையத்தில் உங்கள் மதிப்பு என்ன? இணையத்தில் பல்வேறு சமூகவலைதளங்கள், வங்கிதகவல்கள், ஆபாச வலைதளங்கள், உபர் வாகன சேவைகளில் பயன்படுத்தும் நபர்களின் தகவல்களின் மதிப்பு ரூ.3 ஆயிரத்து 500 என காஸ்பர்ஸ்கை ஆய்வுத்தகவல் வெளியாகி உள்ளது. இணையத்தில் நடைபெறும் திருட்டுகள் குறித்த ஆய்வை செய்த காஸ்பர்ஸ்கை ஆய்வகம், கொள்ளையர்கள் தகவல்களை விற்கும் தொகையை வெளியிட்டுள்ளது. தோராயமாக ஒருவரின் கணக்கு தகவல்களுக்கு ஒரு டாலர் விலை நிர்ணயித்து கொள்ளையர்கள் கருப்பு இணையத்தில் விற்கின்றனர்.  “தகவல் திருட்டின் மூலம் கிடைக்கும் அபரிமிதமான பணம் சமூகத்தை உருக்குலைக்கும் செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது” என்கிறார் காஸ்பர்ஸ்கையின் மூத்த ஆராய்ச்சியாளரான டேவிட் ஜேக்கோபை. குறிப்பிட்ட ஒருவரின் தகவல்களை திருடி ஹேக்கர்கள் பயன்படுத்தும்போது பாதிக்கப்படுவது தனிநபர்கள்தான்.  இதன்விளைவாக அவர்களின் அடையாளம் பகிரங்கமாவதோடு சட்டரீதியான பிரச்னைகளுக்கும் உள்ளாவார்கள். ஒரு கணக்கு வேலை செய்யவில்லையென்றால் ஹேக்கர்கள் மற்றொரு பயனரின் கணக்கை ஆஃபராக கொடுக்கும் அளவு கொள்ளை வேகமாக முன்னேறிவருகிறது. பல்வேறு பாஸ்வேர்டுகளை க

பிரேசிலிலிருந்து வெளியேறும் மருத்துவர்கள்!

படம்
கியூப மருத்துவர்கள் வெளியேற்றம்! பிரேசிலில் நடந்த ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து  கிராமப்புறங்களில் பணியாற்றிவந்த 8 ஆயிரம் மருத்துவர்களை கியூப அரசு திரும்ப பெற்றுள்ளது. பிரேசிலில் அண்மையில் நடந்த தேர்தலில் பொறுப்பேற்ற வலதுசாரி தலைவரான ஜெய்ர் பொல்சொனாரோ, கியூப மருத்துவர்களின் பணியை அச்சுறுத்தும்படியானது என்று கூறினார். இதைத்தொடர்ந்து கியூப அரசு, மருத்துவர்களை திரும்ப பெறும் முடிவை ஹவானாவில் அறிவித்தது. 2013 ஆம் ஆண்டு முன்னாள் அதிபர் டில்மா ரூசெஃப் மைஸ் மெடிகோஸ் என்ற பெயரில் மருத்துவர்கள் தட்டுப்பாடாக உள்ள கிராமப்புறங்களில் தொடங்கிய திட்டம் இது. பிரேசிலின் உள்நாட்டு மருத்துவர்கள் பெரிய ஆர்வம் காட்டாததால் கிராம மருத்துவப்பணியிடங்களில் கியூப மருத்துவர்கள் பணிபுரிய அழைக்கப்பட்டனர். மாதம் 3,500 டாலர்கள் சம்பளம், உதவித்தொகை, உணவு, தங்கும் வசதி ஆகியவையும்  பிரேசில் அரசால் வழங்கப்பட்டன.  பிரேசில் சுகாதாரத்துறையும் உலகசுகாதார நிறுவனமும்(Pan American health organization) இணைந்து கியூப அரசுடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, கியூப அரசுக்கு பிரேசில் பணம் செலுத்திவிட, அவர்கள் மருத்துவர்களை தேர்ந்

இளைஞர்களை ஊக்குவிக்கும் இசைக்குழு!

படம்
BTS –- இளைஞர்களின் எழுச்சி! ஏழு கொரிய இளைஞர்கள். வயது இருபதுதான். ஒரு பாடல் கூட ஆங்கிலம் கிடையாது. ஆனால் கிராமி விருது பரிந்துரைப்பட்டியலில் இடம்பிடித்துவிட்டார்கள். எப்படி ஜெயித்தார்கள்? கொரியன், ஜப்பான், ஆங்கிலம், ஸ்பானிஷ் என அத்தனை மொழிகளையும் உடைத்து போட்டு கிளறிய போட்டு உருவாக்கிய அத்தனை பாட்டுகளும் ஹிட். அதோடு ஆண், பெண் எல்லைகளை மங்கலாக்கி ஸ்கர்ட் அல்லது பேண்ட் என சந்தேகம் வரும் உடை அணியும் கலாசாரத்தை பிடிஎஸ் குழு உருவாக்கி அனைவரையும் ஈர்த்தது.  மொழிகளே இப்படி என்றால் பாடல்வகை எப்படியிருக்கும்? ஜாஸ், பாப், ராப், இடிஎம் என அத்தனை இசை வெரைட்டிகளும் இவர்களில் ஆல்பங்களில் உண்டு. கண்மை தீட்டுவது, பெண்மை ததும்பும் உடைகள் என பிடிஎஸ் குழுவினர் மீது 2003 ஆம் ஆண்டு கடும் விமர்சனத்தை முன்வைத்தனர். அன்பு, காதல், கருணை என பாடல்களை பாடிய குழு, பாடல்களிலும் அவன், அவள், அவர்கள் என வார்த்தைகளை பயன்படுத்தியது யாரும் செய்யாத புதுமை. ஏழுபேரின் இதயமும் ஒன்றாக துடிப்பது உண்மையிலேயே ஆச்சரியம்தான். 

கதவுக்கு மறுபுறம் என்ன இருக்கிறது?

படம்
  தி அதர் சைட் ஆப் தி டோர் பாசமும்,  குற்றவுணர்ச்சியும் ஒரு குடும்பத்தை குழிதோண்டி புதைக்கிறது. இதுதான் ஒன்லைன். இதில் சில ஆவிகளைச் சேர்ந்தால் படத்தை பயத்துடன் பார்த்து ரசிக்கலாம். மரியா, கதையின் நாயகன், நாயகி இவர்தான். இந்தியாவில் வாழும் இவருக்கு தன் மகன் ஆலிவரை விபத்தில் காப்பாற்ற முடியாமல் கொன்று விட்டோம் என்ற வலி குற்றவுணர்ச்சி தினந்தினம் அவரைக் கொல்கிறது.  தற்கொலை முயற்சியும் கூட செய்கிறார். ஆனால் கணவர் காப்பாற்றிவிடுகிறார். மிச்சமுள்ள மகளையும் கணவரையும் காப்பாற்ற நினைக்கிறார். அப்போது வீட்டு நிர்வாகம் செய்பவர், தொலைதூரத்திலுள்ள இந்து கோவிலுக்கு சென்று வரச்சொல்கிறார். அப்போதுதான், இறந்த ஆன்மாவை விட்டு நாம் வெளியே வரமுடியும் என்பவர் ஆலிவரின் உடைகளை தீயிட்டு கொளுத்த கோருகிறார். ஆனால் மரியா உடைமைகளை கொளுத்த மறுத்துவிட்டு கோவிலுக்கு செல்கிறார். கோவிலில் பிரார்த்திக்கும்போது என்ன சத்தம், மிரட்டல் வந்தாலும் தாழிட்ட கதவை திறக்ககூடாது என்பதே விதி. ஆனால் பாசத்தின் முன் எப்படி விதிகள் வெல்லும்? மகனின் குரல் கேட்டதும் நரகத்தின் கதவை திறந்துவிடுகிறார். ஆலிவரின் அழிச்சாட்டிய ஆவியுடன் ந

ஜஸ்டிஸ் லீக் குழுவின் போர்: என்னவானது நிலைமை?

படம்
ஜஸ்டிஸ் லீக் வார்(2014) டிசி காமிக்ஸ் மார்வெல்லுக்கு சளைத்ததல்ல. என்ன அடிக்கடி சற்றே கண் அயர்ந்து விடுகிறார்கள். அதற்குள் மார்வெல் எக்கச்சக்க சீரிஸ்களை வெளியிட்டு விடுகிறது. இந்த சீரிஸ் அப்படி அல்ல; வேற்று கிரகத்திலிருந்து வரும் ஏலியன்களை புரட்டி எடுக்கும் பகுதி.  ஜாக் ஸ்னைடர் எடுத்த ஜஸ்டிஸ் லீக் படத்தை இந்த அனிமேஷன் பார்த்த வேகத்தோடு பார்த்தீர்கள் என்றால் , பொங்கல் தின்று லியோ காபி குடித்த கதைதான். தூக்கம் கண்ணைக் கட்டும். நல்ல தூக்கம் வாய்ப்பது பெரிய விஷயம் அல்லவா?  அனிமேஷனில் அனைத்திலும் முன்னாடி நிற்பது பேட்மேன்தான். அனைவரையும் ஒருங்கிணைத்து, க்ரீன் லாந்தர்னின் குறும்புகளை, ஷாஷாமின் டீன் ஏஜ் துறுதுறுப்பை கட்டுப்படுத்தி என வேலைகள் அதிகம். இதில் மெட்டல் மனிதர் சைபோர்க் அபாரமாக அறிமுகமாகி கலக்குகிறார். அனிமேஷனைப் பார்த்துவிட்டு உடனடியாக ஜஸ்டிஸ் லீக் படத்தை பார்க்கச்சென்றால், விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல.  அனிமேஷன் படம் என்றாலும் படத்தில் ஃபிரேம்கள் நகரும் வேகமிருக்கிறதே அபாரம். நீங்கள் அதைப்பார்க்காமல் வொண்டர் உமனின் காலாடையை பார்த்தால் பேட்மேன் உங்களை மன்னிக்க மாட

நம்பிக்கை மனிதர்கள் 2018!

படம்
நம்பிக்கை மனிதர்கள் ஸ்ரீராம் வெங்கட்ராமன்(32), ஐஏஎஸ் தேவிக்குளத்தின் உள்ளூர் ஆட்களுக்கு சப் கலெக்டர் ஸ்ரீராம் என்றால் அவ்வளவு மரியாதை. என்ன காரணம், ஆக்கிரமிப்புகள் மற்றும் மணல் மாஃபியாக்களிடம் காட்டிய அதிரடிதான் காரணம். உடனே என்ன செய்வார்கள்? பணிமாற்றம்தான். 2013 ஆம் ஆண்டு பேட்ச் குடிமை அதிகாரி, பதனம் திட்ட துணை கலெக்டர் பணி. இவரின் அதிரடியில் கலங்கிய இரண்டு எம்எல்ஏக்கள், ஒரு எம்பி தர்ணா போராட்டம் நடத்தியது மக்களுக்காக அல்ல; ஆக்கிரமிப்புகளை அகற்றி அவர்கள் சம்பாதிப்பதை தடுத்ததால். தேவாலயத்திற்கு சொந்தமான நிலத்தையே கம்யூனிஸ்டுகள் அபேஸ் செய்ததை ஸ்ரீராம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார்.  அதற்கு பரிசு, பணிமாற்றம் செய்யப்பட்டு தொழிலாளர்துறை செயலாளர் ஆகியுள்ளார்.  மனிதநேய ஆட்சியர்கள் கேரளாவின் புயல் பாதித்த பகுதிகளில் பேரிடர் மேலாண்மை பணியாற்றிய கண்ணன் கோபிநாத்(தாத்ரா,ஹவேலி ), கிருஷ்ண தேஜா(ஆலப்புழா துணை ஆட்சியர்), ஜீவன் பாபு(இடுக்கி ஆட்சியர்), எம்ஜி ராஜமாணிக்கம் (உணவுத்துறை கமிஷனர்)ஆகியோர் போற்றத்தக்க மனிதர்கள். இதில் கண்ணன் கோபிநாத் தன்னார்வலராக பணியாற்றியதோடு தன் மாவட்ட நித

உப்பில் இருப்பது என்ன?

படம்
உப்பில் என்ன இருக்கிறது? சமையலுக்கு பயன்படுத்தும் உப்பில் 97-99% இருப்பது சோடியம் குளோரைடு மட்டுமே. அதில் இன்னும் தூயது வேண்டுமென்றால் கல் உப்பை நாடலாம்.  உப்பில் சோடியம் குளோரைடு இருக்கலாம். உப்பு வேறு சோடியம் வேறு. சோடியம் என்பது இயற்கையில் அவ்வளவு எளிதாக கிடைக்காத கதிர்வீச்சு தன்மை கொண்ட வேதிப்பொருள்.  செரிமானத்திற்கு முக்கியப் பொருளான சோடியம் உப்பு வழியாக உடலில் சேருவது மிக அவசியம்.  உப்பு என்றாலும் அது உடலில் சேரும்போது சோடியம் அயனிகள், குளோரைடு அயனிகள் என இருப்பதால் இதன் எடையை அவ்வளவு எளிதாக கணித்துவிட முடியாது.  சூப், பாஸ்தா, சாண்ட்விச் , பிரெட் வழியாக உடலுக்கு தேவையான சோடியம் கிடைக்கிறது. உப்பின் எடை மூன்று கிராம் என்றால் அதில் சோடியம் 1.5 கிராம் இருக்கவேண்டுமென்ற தேவை கிடையாது. 

அரசு உங்களை உற்றுப்பார்க்கிறது!

படம்
இந்திய அரசின் பத்து அமைப்புகள் தனிப்பட்ட ஒருவரின் கணினி வழி தகவல் தொடர்பை கண்காணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுபற்றி நிதித்துறை அமைச்சர் அருண்ஜெட்லி காங்கிரஸ் அரசு ஆட்சியிலிருந்து 2009 ஆம் ஆண்டிலிருந்தே இச்சட்டம் அமுலில் உள்ளது. ஆனால் இதனை வெளிப்படையாக கூறியதற்கு எங்கள் மீது பழிபோட பார்க்கிறார்கள்“ என பேசியுள்ளார். பிரைவசி குறித்து மேலவையில் காரசார விவாதம் நடைபெற்றது.  தகவல் தொழில்நுட்ப சட்டம் 69(1) சட்டத்தை இந்திய அரசு சீர்த்திருத்தியது நாட்டில் அதிகரித்துவரும் பிரிவினை வாத தீவிரவாதிகளை கட்டுப்படுத்த என்று கூறியுள்ளது. இச்சட்டத்தின் விளைவாக  Intelligence Bureau, Narcotics Control Bureau, Enforcement Directorate, Central Board of Direct Taxes, Directorate of Revenue Intelligence, Central Bureau of Investigation, National Investigation Agency, Cabinet Secretariat (R&AW), Directorate of Signal Intelligence (for service areas of Jammu and Kashmir, North-East and Assam only) and the Commissioner of Police, Delhi ஆகிய அமைப்புகள் ஒருவரி

மூடநம்பிக்கைகளிலிருந்து மருத்துவம் வளர்ந்த கதை!

படம்
புத்தக கடை! The Sawbones Book: The Hilarious, Horrifying Road to Modern Medicine Justin McElroy, Sydnee McElroy 216 pages Weldon Owen கிரேக்க மம்மிகளை பொடியாக்கி தின்று நோய் தீர்ப்பது, தலையில் துளையிட்டு மைக்ரேன் தலைவலியை விரட்டுவது, கதிரியக்க பொருட்களிலான உடையை அணிந்து ஆண்மையைக் கூட்டுவது என மூடநம்பிக்கைகளிலிருந்து மருத்துவம் வளர்ந்து வந்த வரலாற்றை பேசுகிறது இந்நூல். Einstein's Monsters: The Life and Times of Black Holes Chris Impey 304 pp W. W. Norton Company வானியலாளரான கிறிஸ் இம்பெய், கருந்துகளை, ஐன்ஸ்டீனின் சார்பியல் தியரி உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை எளிமையாக புரியும்படி விளக்கியுள்ள நூல் இது. End of the Megafauna: The Fate of the World's Hugest, Fiercest, and Strangest Animals Ross D E MacPhee,Peter Schouten 256 pp,W. W. Norton Company சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வாழ்ந்த டைனோசர், ராட்சஷ லெமூர் உள்ளிட்ட மிருகங்களை படமாக வரைந்து விவரித்திருக்கிறார்கள். 

லிபர்டி சிலை யாருடைய பரிசு?

படம்
பிட்ஸ்! அமெரிக்காவிலுள்ள சுதந்திரதேவி சிலையை பிரான்ஸ் நாடு அமெரிக்க அரசுக்கு வழங்கியது. முதலில் இச்சிலையை எகிப்து நாட்டிற்கு அளிப்பதற்காகவே உருவாக்கினர். பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்திலுள்ள வனவிலங்கு பூங்கா விலங்குகளுக்கு உணவு தர விரும்பினால் முதலில் காசு கொடுத்து டிக்கெட் வாங்கவேண்டும். பின்னர் விலங்குகளுக்கு உணவான பூனை அல்லது நாயை அழைத்தபடி உள்ளே செல்ல தடையேதுமில்லை.  ஸ்பானிஷ் சொல் ‘esposas’ என்பதற்கு மனைவிகள், கைவிலங்குகள் என இரண்டு அர்த்தங்கள் உண்டு.  1991 ஆம் ஆண்டு இங்கிலாந்திலுள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலையில் வெப்கேமரா கண்டறியப்பட்டது. காபி கப்பின் அளவை சரிபார்க்கவே முதலில் பயன்படுத்தப்பட்டது.  ஆங்கிலத்தில் மூன்று Y எழுத்து வரும் சொல் எது? ‘Syzygy’. முத்தமிடுவது குறித்த அறிவியல் துறைக்கு philematology என்று பெயர்.     

இத்தாலியின் மர்ம கடிகாரம்!

படம்
இத்தாலியின் வானியல் கடிகாரம்! இத்தாலியின் பியாஸா டெய் சிக்னோரியிலுள்ள வானியல் கடிகாரம் உருவாக்கப்பட்ட ஆண்டு 1344. இதனை வடிமைத்த கலைஞர் ஜேக்கபோ டி டொண்டி.  உலகின் மிக தொன்மையான இயங்கும் கடிகாரமான இது 24 மணிநேர டயலை கொண்டுள்ளது. ஒரு மணிமுதல் 24 மணி நேரம் வரை மணிச்சத்தம் ஒலிக்கும்படி அமைத்திருக்கிறார்கள். மற்றொரு சிறப்பு, குறிப்பிட்ட மணிநேரத்தில் சூரிய மண்டலத்தில் கோள்களின் அமைப்பு, நிலவு மற்றும் சூரியனின் இயக்கத்தையும் இக்கடிகாரம் மூலம் அறியமுடியும். முதலில் உருவாக்கப்பட்ட கடிகாரம் அழிந்தபின் 1423 ஆம் ஆண்டு அடுத்த கடிகாரம் உருவானது. இதில் இடம்பெற்றுள்ள ராசிகளில் சிம்மம் மட்டும் இருக்காது. இதன் ஆதார கடிகாரத்தில் அப்போது ஆட்சியிலிருந்த காரரெசி குடும்பத்திற்கு எதிராக  வடிவமைப்பாளர் சிங்க அடையாளத்தை உருவாக்கவில்லை என்று கூறுகின்றனர். சிலர் இந்த அடையாளத்தை டி டொண்டி மறைத்து வைத்திருக்கிறார் என கிசுகிசுக்கின்றனர்.  கடிகார கோபுரத்தை சுற்றிப்பார்க்க வெள்ளி, சனிக்கிழமைகளில் அனுமதிக்கிறார்கள். நேரம்: காலை 10-11.30. ஆன்லைனில் பதிவு செய்து சுற்றிப்பார்க்கலாம். 

ஆஸ்பிரினைக் கண்டறிந்தவரின் கதை!

படம்
அறிவியலாளர்கள் அறிமுகம்! ஃபெலிக்ஸ் ஹாப்மன்(1868-1946) 1897 ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த வேதியியலாளர் ஃபெலிக்ஸ் ஹாப்மன், வலிநிவாரணி ஆஸ்பிரின் மற்றும் ஹெராயினை செயற்கையாக தயாரித்து சாதனை புரிந்தார். ஜெர்மனியின் லுட்விக்ஸ்பர்க்கில் பிறந்த ஃபெலிக்ஸ், லுட்விக் மேக்ஸ்மில்லன் பல்கலைக்கழகத்தில் வேதியியல் படித்தார். முனைவர் படிப்பை நிறைவு செய்தவர் 1894 ஆம் ஆண்டு பேயர் நிறுவனத்தில் வேதியியல் ஆராய்ச்சியாளராக பணிக்கு சேர்ந்தார்.  வலிநிவாரணியான ஆஸ்பிரினை 1897 ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். இது அசிடைல் சாலிசிலிக் எனும் தூயவடிவத்தில் இருந்தது. 1899 ஆம் ஆண்டு ஆஸ்பிரின் என்ற பெயரில் மருந்து விற்பனையானது. முதலில் பவுடர் வடிவில் விற்கப்பட்டது.  டையாமார்பின்(ஹெராயின்) தூயவடிவில் மேம்படுத்தியவரும் ஃபெலிக்ஸ்தான்.  தந்தை ஆர்த்தரைட்டிஸ் பிரச்னைக்கு தீர்வு தரவே ஆஸ்பிரினை ்ஃபெலிக்ஸ் கண்டுபிடித்தார். மருந்து மற்றும் விநியோகப்பிரிவில் பணியாற்றிய ஃபெலிக்ஸ் ஆஸ்பிரின் விற்பனையால் பணக்காரராக வாழ்ந்தார். பின்னர் 1946 ஆம் ஆண்டு ஸ்விட்சர்லாந்தில் காலமானார். ஆஸ்பிரின் கண்டறிந்து 125 ஆண்டுகளாகின்றன. காய்ச்ச

குழந்தைகளுக்கு கதை சொல்லும் ஊடகவியலாளர்!

படம்
ஆப்பிரிக்காவின் ஊடக ஒளி! இரவுணவுக்கு தோழியின் வீட்டுக்கு சென்றபோது, ஏனோ தட்டிலிருந்த உணவை பயோலா ஆலபியால் சரியாக சாப்பிடமுடியவில்லை. “ஆப்பிரிக்காவில் பசி,பட்டினி பிரச்னைகள் தீர்ந்துவிட்டதா என்ன?” என்ற தோழியின் அம்மா கேட்டகேள்வி ஆலபியின் நெஞ்சை விட்டு நீங்கவேயில்லை.  இன்று ஆப்பிரிக்காவின் உள்ளூர்மொழிகளில் இயங்கும் ஏழு டிவி சேனல்களை வேட்கை குறையாமல் உருவாக்கியிருக்கிறார் ஆலபி. சின்சினாட்டி, லாகோஸ், நைஜீரியாவில் பெற்றோருடன் வசித்தவர், தென்கொரியாவின் சியோலில் கல்வி உதவித்தொகை பெற்று படித்தார். டாக்டர் கனவுடன் இருந்த ஆலபி, ஊடகத்தின் பக்கம் மக்களுக்காக திரும்பினார். எம்நெட் ஆப்பிரிக்கா எனும் ஊடக நிறுவனத்தை தொடங்கி, உள்ளூர் மொழிகளில் நிகழ்ச்சிகளை உருவாக்கி டிவிகளுக்கு வழங்கத் தொடங்கினார். 2015 ஆம் ஆண்டில் கன்சல்டன்சி தொடங்கி கலைஞர்களுக்கு நிதியுதவியும் அளித்தார். நைஜீரியாவின் நோலிவுட்டிலும் பெண்களின் பிரச்னைகள் பற்றி பேசவைத்தது ஆலபியின் தன்னிகரற்ற சாதனை. 2012 ஆம் ஆண்டு சக்திவாய்ந்த ஆப்பிரிக்க பெண்கள் பட்டியலில் இடம்பெற்றாலும் குழந்தைகளுக்கான கல்வி நிகழ்ச்சிகளை தயாரிப்பதே ஆலபிக்க

ட்ரோன் பயம் என்ன?

படம்
ட்ரோன் பயம் என்ன? உலகெங்கும் அதிவேகமாக பெருகி வரும் ட்ரோன்களை முறைப்படுத்த பல்வேறு நாடுகளும் தயாராகிவருகின்றன. விமானங்களின் மீது முதலில் பறவைகள் மோதி விபத்தை ஏற்படுத்தின. இன்று ட்ரோன்கள் அதனை செய்கின்றன.  அண்மையில் இங்கிலாந்திலுள்ள கேட்விக் விமானநிலைய ஓடுதளத்தில் ட்ரோன் ஒன்று பறந்ததால் அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டு 36 மணிநேரத்திற்கு பிறகு இயல்புநிலை திரும்பியுள்ளது. விமானநிலையம் செயல்படாததால்  ஒரு லட்சம் பயணிகளுக்கு மேலானவர்கள் காத்திருக்கும்படி நிலைமை உருவானது.  விமானநிலையம் இயங்கும் ஒரு கி.மீ சுற்றளவில் ட்ரோன்கள் 120 மீட்டர் என்றளவில் இயக்கப்படக்கூடாது என்ற விதி உள்ளது. அதையும் மீறி ட்ரோன்களை இயக்கியவர்களை கண்டறிய இங்கிலாந்து காவல்துறை முயற்சி செய்து வருகிறது. சுற்றுச்சூழல் போராட்டக்காரர்கள் ட்ரோன்களை பறக்கவிட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். வித்தியாசமான அதன் வடிவமைப்பை பார்த்த தொழில்நுட்ப வல்லுநர்கள் இதனை பதினாறு கி.மீ தொலைவிலிருந்து கூட இயக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளனர். தற்போது சிறியளவிலான விமானங்கள் இயக்கப்படத் தொடங்கியுள்ளன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட

தமிழ்மொழியை வாசிக்க நேசிக்க உதவும் நூல்!

படம்
அறியப்படாத தமிழ்மொழி - கண்ணபிரான் ரவிசங்கர் அறியப்படாத தமிழ்மொழி கண்ணபிரான் ரவிசங்கர் எழுதிய நூல் தமிழ் குறித்து இதுவரை அறியாத பல்வேறு விஷயங்களை சுவாரசியமான மொழியில் விளக்குகிறது. தமிழ்மொழி குறித்த நூல் எப்படியிருக்கும்?  தொல்காப்பியம் முதல் கலைஞர் எழுதிய திருக்குறள் உரை வரையிலான பெருமைகளை மட்டும் பேசி நிறைவு பெறும். ஆனால் இந்த நூல் தமிழ்மொழி குறித்த கண்மூடித்தனமான நம்பிக்கைகள், பன்ச் டயலாக்குகள், தமிழ் வாழ்க முழக்கங்கள் எப்படி உருவாயின என்பதையும் அதன்மேல் ஏற்றப்பட்ட தவறான சமஸ்கிருத ஏற்றங்களையும் துல்லியமாக உடைத்து பேசுகிறது. மாயோன் சேயோன்(முருகன், திருமால்) எப்படி வரலாற்றுப்போக்கில் சுப்ரமணியன், விஷ்ணு ஆனார்கள், அவர்களுக்கான திணை என்ன, அறுபடை வீடுகள் குறித்த விளக்கங்களும் சான்றுகளோடு கொடுக்கப்பட்டுள்ளன.  பழங்குடிகளின் சிலைகள் எப்படி சிவன் என திரித்து கூறப்பட்டன என்பதோடு தமிழ்மொழியில் சமஸ்கிருதம் உள்ளே நுழைந்து அதனை கரையானாய் அரிப்பது குறித்தும் ஆசிரியர் விளக்கும்போது ஆச்சரியம் பற்றிக்கொள்கிறது. நூல் முழுக்க இணையத்தில் பதிவேற்றப்பட்டதோ என நினைக்கத்தோன்றுகிறது வரிக்

"மக்களைப் பற்றி அரசு கவலைப்படவேயில்லை"

படம்
பெல்ஜியத்தில் பிறந்த ஜீன் ட்ரெஸ், புகழ்பெற்ற இந்திய பொருளாதார வல்லுநராக உள்ளார்.  எஸெக்ஸ் பல்கலைக்கழகத்தில் மேத்தமேட்டிகல் எகனாமிக்ஸ் படித்தவர், 1982 ஆம் ஆண்டு இந்திய புள்ளியல் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார் ஜீன். லண்டன் பொருளாதார பள்ளி, டெல்லி பொருளாதார பள்ளியில் பாடம் கற்றுத்தருவதோடு ராஞ்சி பல்கலையிலும் வருகைதரும் பேராசிரியராக உள்ளார் ஜீன் ட்ரெஸ். கிராம மேம்பாடு, சமூக பாகுபாடு, குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைவு, உடல்நலம், உணவு பாதுகாப்பு, தொடக்க கல்வி ஆகியவற்றைக் குறித்த பல்வேறு ஆய்வுகளை செய்து நூல்களை ( An Uncertain Glory: India and Its Contradictions, Hunger and Public Action ,  India: Development and Participation , and  India: Economic Development and Social Opportunity )எழுதியுள்ளார். அண்மையில் எழுதிய நூல்  Sense and Solidarity: Jholawala Economics for Everyone . பணமதிப்பு நீக்கம் அமுலாகி இரு ஆண்டுகளாகின்றன. இதன் விளைவாக 82% மக்களின் பணம் செல்லாது போன விளைவுகளை தாக்கத்தை இன்றும் அனுபவிக்க முடிகிறது. பொருளாதார வல்லுநராக இது பற்றி தங்கள் கருத்து? கருப்பு பணம்