உடலில் சிப்கள் பொருத்துவதே நம் வளர்ச்சி





Related image




உடலில் பொருத்தும் சிப்களில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது?


2016 ஆம்ஆண்டு ஐரோப்பாவில் நடைபெற்ற CeBit நிகழ்வில் சிப்களை கைகளில் பொருத்துவது பற்றி விவரித்தனர். இந்த சிப்கள் எதிர்காலத்தில் நம் வீட்டுக்கதவை திறக்கும் சாவியாக, பொருட்களை வாங்கும் பணமாக என பல்வேறு பயன்பாடுகளை உள்ளடக்கியதாக இருக்கும்.


மருத்துவ காரணங்களுக்காக உடலில் சிப்களை பொருத்துவதற்கும் வேலைக்காக பொருத்துவதற்கும் வித்தியாசம் உண்டு அல்லவா?


சில வேலைகளை திறம்பட செய்வதற்காக சிப்களை பொருத்துவதில் தவறில்லை. அது உங்கள் வேலைத்திறனை அதிகரிக்கிறது. மூளையில் பொருத்தப்படும் பேஸ்மேக்கர் கருவி திறனை அதிகரிக்கிறது என்றாலும் தற்கொலை எண்ணம், ஆக்ரோஷ உணர்வு போன்ற பக்கவிளைவுகளும் இல்லாமலில்லை. சிப் பொருத்தலில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு தரும் சட்டங்கள் இன்னும் இயற்றப்படவில்லை. காஸ்மெடிக் ஆபரேஷன்கள் போன்றவைதான் இதுவும் என்பதால் பயப்பட அவசியமில்லை.


என்னென்ன நோய்களுக்கு சிப்கள் வரத்தொடங்கியுள்ளன?


இதயநோய் மற்றும் சர்க்கரை நோய்களுக்கான சிப்களை வெளிவரத்தொடங்கியுள்ளன. எதிர்காலத்தில் எமர்ஜென்சியின்போது நோயாளியின் உடலிலுள்ள சிப் மூலமே அவரின் நோய்குறித்த தகவல்களை அறியலாம். 


-மருத்துவர் கான்ஸ்டன்ஸ் கர்ஸ். 


பிரபலமான இடுகைகள்