புற்றுநோய் மருந்தாக கஞ்சா!




Image result for weed




புற்றுநோய் மருந்தாக கஞ்சா! 

வரும் ஆண்டில் தொழுநோய் மற்றும் புற்றுநோய்க்கான மருந்து தயாரிப்பில் கஞ்சா இலைகள் பயன்படுத்தப்படவிருப்பதாக அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில்(CSIR) தகவல் தெரிவித்துள்ளது.

தற்போது புழக்கத்திலுள்ள வலிநிவாரணி மார்பின் கீமோதெரபி சிகிச்சை பெறும் புற்றுநோயாளிகளுக்கு பயன்படுகிறது. இதன் பக்கவிளைவாக, தினசரி பயன்படுத்தும் அடிமைப்பழக்கமும் நோயாளிகளை பாதிக்கிறது. புதிய மருந்துகளிலுள்ள CBD,THC எனும் இருவேதிப்பொருட்கள் புற்றுநோய் மற்றும் தொழுநோய்க்கு நிவாரணம் தருகின்றன. “அமெரிக்கா, ஐரோப்பாவில் இம்மருந்துகள் பிரபலம். ஆனாலும் கஞ்சா செடிகளை மருத்துவம், ஆய்வு பணிகளுக்கு பயிரிடவும் இங்கு அனுமதி பெறுவது கடினம்” என்கிறார் சிஎஸ்ஐஆர்-ஐஐஐஎம் இயக்குநரான ராம் விஸ்வகர்மா. இந்தியர்கள் இதனை மருத்துவர்களின் பரிந்துரையைப் பெற்று வாங்கி பயன்படுத்தலாம். அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் ஆராய்ச்சி காரணமாக இம்மருந்துகள் விலை குறைய வாய்ப்புள்ளது.





பிரபலமான இடுகைகள்