அன்புள்ள நண்பருக்கு... மின்னூல் வெளியீடு!









இனிய நண்பர்களுக்கு,

இரா.முருகானந்தம் அவர்களுக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு. இதில் நிறைய கடிதங்கள் விடுபட்டுப்போனதற்கு நான் மன்னிப்பு கோருகிறேன். பின்னாளில் இவற்றை தொகுப்பில் சேர்க்க முயற்சிக்கிறேன். தாராபுரத்திலுள்ள நண்பருக்கு சென்னையிலுள்ள சூழலை எழுத்துக்கள் மூலம் புரிய வைக்கமுடியுமா, அதில் வெற்றி அடைந்தேனா என்பதை விட அதை செய்யவேண்டும் என்று தோன்றியது . கடிதங்களை அதற்கு ஊடகமாக பயன்படுத்தினேன். இன்றும் அறைவாசிகள் கடிதம் எழுதும்போது லெட்டரா?  ப்ரோ இதெல்லாம் இன்னைக்கும் கிடைக்குதா? என வியக்கிறார்கள்.

இது ஒருவகையான தகவல் பரிமாற்றம். ஏளனமோ இளப்பமோ அது அவரவரின் பிரச்னை. என் நண்பருடன் போனில் பேசுவதை விட கடிதங்களில் பேசுவது எனக்கு பிடித்தமானதாகிவிட்டது. இலக்கியம், சினிமா, பிரச்னைகள், சந்தித்த மனிதர்கள் என இதில் பேசாத விஷயங்கள் இல்லை. அந்தந்த நேரத்தின் சூழலின் அழுத்தம் கடிதங்களில் உண்டு. அதுதான் அதன் பலமும், பலவீனமும் கூட. வாசியுங்கள். விமர்சியுங்கள். நன்றி!





இணைய லிங்க் இதோ!


https://tamil.pratilipi.com/read/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-gpsEjydBQNPO-156vn741u0524t0

பிரபலமான இடுகைகள்