உண்மைக்கு குரல் கொடுத்த பத்திரிகையாளர்கள் -2018

மனிதர்கள் 2018


ஊடகங்கள்- உண்மைக்காக போராடும் பத்திரிகையாளர்கள்






மரியா ரெஸா

ராப்ளர் என்ற இணைய செய்திதள நிறுவனர். பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ ட்யூடெர்டே நாட்டில் நிகழ்த்தி வரும் போதைப்பொருள் படுகொலைகளை அம்பலப்படுத்திய மனசாட்சியின் சுதந்திரக்குரல். அதிகாரம் என்ன செய்யும்? அதேதான் உண்மையைக் கூறிய ஒரே காரணத்திற்காக இணையதள நிருபர்களுக்கு அரசு விழாக்களில் அனுமதி மறுக்கப்பட்டது. ரெஸா மீது வரிவருவாய் மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் மரியாவுக்கு பத்து ஆண்டுகள் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.

மனித உரிமை அமைப்பின் கணக்குப்படி பனிரெண்டாயிரத்திற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். "நான் போர்காலத்திய செய்திகளை பதிவு செய்யும் பத்திரிகையாளன். இப்போது எங்கள் நாட்டை நான் அப்படித்தான் குறிப்பிட வேண்டும்" என்கிறார் ரெஸா.



வா லோன், கியாவ் சோ ஊ

ராய்ட்டர் செய்தியாளர்களான இருவரும் மியான்மரில் நடைபெற்ற ரோஹிங்கியா அட்டூழியங்களை பதிவு செய்து செய்திகளாக தொகுத்ததுதான் அவர்கள் செய்த குற்றம். உடனே அவர்களை கைது செய்த மியான்மர் அரசு, தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை என அலைகழிக்கப்பட்டு கடந்த செப்டம்பரில் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங்சன் சூகி நாட்டின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. "இருவரது கணவர்களும் செய்தி சேகரிக்கும் வேலையின் மீது பேரார்வம் கொண்டவர்கள். உங்கள் கணவரை நீங்கள் கட்டுப்படுத்த முடியாதா? என இணையத்திலும் நேரிலும்  பலரும் எங்களை கேட்கின்றனர். ஆனால் நிச்சயம் அதனை நாங்கள்  செய்யமாட்டோம் " என துணிச்சலாக கூறுகின்றனர் கைதான செய்தியாளர்களின் மனைவியரான சிட் சூ வின், பான் எய் மோன்.




டல்சினா பாரா

மெக்சிகோவின் சினாலோவாவிலுள்ள ரேடியோவின் குற்ற செய்தியாளர். 2009  ஆம் ஆண்டு கார்டெல் குழுக்களால் கடத்தப்பட்டு விசாரிக்கப்பட்டவர் தன்னுடைய மரணத்திற்காக அலட்டிக்கொள்வதில்லை. காணாமல் போன 37 ஆயிரம் பேர்களுக்கான மெக்சிகோவில் பல்வேறு அமைப்புகளுடன் சேர்ந்து போராடும் போராளி டல்சினா.







கேன் டுண்டர்

துருக்கியின் கம்ஹூரியத் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர். தற்போது ஜெர்மனியில் அடைக்கலமாகியுள்ளார். நாட்டின் ரகசியங்களை கட்டுரையாக்கிய குற்றச்சாட்டிற்காக டுண்டர் மீது வழக்கு பதிவானது. வழக்கு விசாரணையின்போது டுண்டரை கொல்வதற்கான முயற்சி நடைபெற்றது. கட்டுரையில் சிரியாவிலுள்ள ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு துருக்கி அரசு உதவியதை அம்பலப்படுத்திய ஆத்திரத்தினால் துருக்கி அரசு இவரின் குரலை பல்வேறு வழிகளில் முடக்க முயற்சித்தது. எனவே நாட்டை விட்டு வெளியேறியவர், நாம் சுதந்திரமானவர்கள் என்ற பெயரில் இணையதளத்தை நடத்தி வருகிறார். அதில் துருக்கி குறித்த பல்வேறு உண்மைகளை புட்டு வைத்து வருகிறார்.

நன்றி: கார்ல்விக், டைம்