செவ்வாய் பயணத்தில் நாசா!









செவ்வாயில் நாசா!

செவ்வாயில் இறங்கிய நாசாவின் இன்சைட் ரோபோ, மற்றும் விண்கலனை உருவாக்க செலவான தொகை 993 மில்லியன் டாலர்கள்(ரூ.99.3 கோடி) செவ்வாயை தொட்ட நாசாவின் எட்டாவது வெற்றிகர முயற்சி இது.

2030 ஆம் ஆண்டு செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்ப நாசா முயற்சித்து வருகிறது.

1500 டிகிரி வெப்பத்தை சமாளித்து செவ்வாயில் தரையிறங்கிய இன்சைட் ரோபோவுக்கு தரையிறங்குவது புழுதிப்புயலால் கடும் சவாலாக இருந்தது. பாராசூட் விரித்து வேகம் குறைத்து தரையிறங்க 6.5 நிமிடங்களாயிருக்கின்றன.
செவ்வாயின் நிலம் மற்றும் உட்புறங்கள் எப்படி உருவாகியுள்ளன என்பதை கண்டுபிடிக்கவே நாசாவின் இன்சைட் ரோபோ அனுப்பபட்டுள்ளது.

சோலார் தகடுகள், கேமரா, ரோபோ கைகள், ரேடியோ ஆன்டெனா, சீஸ்மோமீட்டர், வெப்பநிலை மற்றும் காற்றை கணிக்கும் சென்சார்கள் நாசாவின் இன்சைட் ரோபோவில் பொருத்தப்பட்டிருந்தன.