பத்திரிகைகளை தாக்கும் சைபர் குழு!
நாளிதழ்களை தாக்கிய இணைய கொள்ளையர்கள்!
அமெரிக்காவைச் சேரந்த லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் நாளிதழ் இணையத்தாக்குதலில் சிக்கியுள்ளது. பத்திரிகையாளர்களை திட்டமிட்டு தாக்கிய இணைய தாக்குதல் குழு, நியூயார்க் டைம்ஸ், வால்ஸ்ட்ரீட் ஜர்னல் ஆகிய இதழ்களை அச்சகத்திற்கு அனுப்பும் பணியை தாமதப்படுத்தியுள்ளனர்.
அமெரிக்கர்கள் தாக்குதலுக்கு காரணம் யார் என்று கூறுவார்கள்? அதேதான். வடகொரியா அல்லது கிழக்கு ஐரோப்பா என சந்தேகப்பட்டனர் . பின்னர் தாக்குதல் அமெரிக்காவிலேயே நடந்துள்ளது கண்டறியப்பட்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Ryuk எனும் ரான்சம்வேர் அமெரிக்க பத்திரிகைகளை தொடர்ச்சியாக தாக்கியுள்ளது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
பாரம்பரிய செய்தி நிறுவனங்களைக் கடந்த சோஷியல் தளங்களின் வழியே செய்திகளை படிக்கும் அமெரிக்கர்கள் உருவாகத் தொடங்கியுள்ளனர். இதில் தகவல்கள் சரியாக இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.