ட்ரோன் பயம் என்ன?



Image result for drone at gatwick



ட்ரோன் பயம் என்ன?

உலகெங்கும் அதிவேகமாக பெருகி வரும் ட்ரோன்களை முறைப்படுத்த பல்வேறு நாடுகளும் தயாராகிவருகின்றன. விமானங்களின் மீது முதலில் பறவைகள் மோதி விபத்தை ஏற்படுத்தின. இன்று ட்ரோன்கள் அதனை செய்கின்றன. 
அண்மையில் இங்கிலாந்திலுள்ள கேட்விக் விமானநிலைய ஓடுதளத்தில் ட்ரோன் ஒன்று பறந்ததால் அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டு 36 மணிநேரத்திற்கு பிறகு இயல்புநிலை திரும்பியுள்ளது. விமானநிலையம் செயல்படாததால்  ஒரு லட்சம் பயணிகளுக்கு மேலானவர்கள் காத்திருக்கும்படி நிலைமை உருவானது. 

விமானநிலையம் இயங்கும் ஒரு கி.மீ சுற்றளவில் ட்ரோன்கள் 120 மீட்டர் என்றளவில் இயக்கப்படக்கூடாது என்ற விதி உள்ளது. அதையும் மீறி ட்ரோன்களை இயக்கியவர்களை கண்டறிய இங்கிலாந்து காவல்துறை முயற்சி செய்து வருகிறது. சுற்றுச்சூழல் போராட்டக்காரர்கள் ட்ரோன்களை பறக்கவிட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். வித்தியாசமான அதன் வடிவமைப்பை பார்த்த தொழில்நுட்ப வல்லுநர்கள் இதனை பதினாறு கி.மீ தொலைவிலிருந்து கூட இயக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளனர். தற்போது சிறியளவிலான விமானங்கள் இயக்கப்படத் தொடங்கியுள்ளன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மருந்துகளை கொண்டு செல்ல பயன்படுகின்றன. இந்நிலையில் ட்ரோன்களின் மீதான களங்கமாக இச்சம்பவம் உருவாகியுள்ளது. 

  

பிரபலமான இடுகைகள்