பாலைவனத்தில் மது குடித்தால் பிழைக்கலாமா?
ஏன்?எதற்கு?எப்படி?
பாலைவனத்தில் மாட்டிக்கொண்டு விட்டீர்கள்.
கையில் மது மட்டுமே இருக்கிறது. உயிர் பிழைக்க என்ன செய்யலாம்?
மதுவை குடித்து தாகத்தை தணிப்பதே
முக்கியம். பாலைவனத்தில் நீர்ச்சுருக்கம் ஏற்படாமல் தடுப்பது உயிர்பிழைக்க அவசியம். உடலிலுள்ள ADH(Anti
Diuretic Hormone) சிறுநீரில் வரும் அதிகப்படியான நீரை உடலுக்கு பயன்படும்படி சேமித்து
வைக்கிறது. குறைந்தபட்சம் இரண்டு லிட்டர்கள்.
மதுபானங்களிலுள்ள ஆல்கஹால் ஏடிஹெச் ஹார்மோனை
வேலை செய்யவிடாமல் தடுத்து உடலிலிருந்து பெருமளவு நீரை வெளியேற்றுகிறது. உடல் இதற்கு
எதிராக ஹார்மோனை சுரந்து வேலை செய்வது உண்மை என்றாலும் அதிகநாட்கள் இச்செயல்முறை நடைபெறாது.
பாலைவனத்தில் உயிர்பிழைக்க நீருக்கு பதில் ஒயின், பீர் என எது கிடைத்தாலும் குடிப்பதை
தவிர வேறு வழியில்லை.