மறக்கமுடியாத சம்பவங்கள் 2018
சிபிஐ தொடங்கி 55 ஆண்டுகளான பின் அதன் நம்பகத்தன்மையை குலைக்க பாஜக செய்த சதி வேலை பார்த்தது. இதன்காரணமாக அதன் அலுவலகத்திற்குள்ளேயே ரெய்டு நடந்தது.
ஃபிளிப்கார்ட் நிறுவனத்தை வால்மார்ட் 16 பில்லியன் டாலர்கள் தொகைக்கு விலைபேசி வாங்கியது.
159 ஆண்டுகளாக யாரும் முறியடிக்காத சார்லஸ் டார்வினின் பரிணாம வளர்ச்சியை பாஜக சத்யபால் சிங் கேள்வி கேட்டு சர்ச்சையில் சிக்கினார். மனிதக்குரங்கிலிருந்து மனிதர்கள் உருவாகி வருவதை யாருமே பார்க்கவில்லை என புதுமையான விளக்கம் சொன்னார் சிங். டார்வினின் ஆவியும் எதிர்பார்க்காத எதிர்ப்பு இல்லையா?
பாலியல் படங்களை பார்ப்பதில் இந்தியர்களின் அடித்துக்கொள்ள முடியாத இடம் 3 என நிரூபணமானது.
தன்பாலின மக்களை குற்றவாளிகள் எனக்கூறும் பழைமை வாத சட்டத்தை நீக்கியது உச்சநீதிமன்றம். இதற்கான தீர்ப்பு பக்கங்களின் எண்ணிக்கை 493.
27 ஆண்டுகளுக்கு பிறகு மேகாலயாவில் சிறப்பு ஆயுதப்படை சட்டம் வாபஸ் பெறப்பட்டது.
ஆசிய விளையாட்டுப்போட்டியில் இந்தியா நம்ப முடியாத வேகம் காட்டி வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 69.
அசாமில் தேசிய மக்கள் பதிவேட்டில் 40 லட்சம் மக்களின் பெயர்கள் கிடையாது என அதிர்ச்சி தகவல் வெளியானது. இதே திட்டத்தை பல்வேறு மாநிலங்களில் பாஜக அமல்படுத்த முயற்சித்து வருகிறது.
ஆதார் எண் பாதுகாப்பானது என்ற பொய் அடிபட்டுப்போனது. ட்ராய் தலைவரின் ஆதார் எண்ணை அவரின் அனுமதியின்று ஹேக் செய்து அவரின் வங்கி கணக்குக்கு இணைய கொள்ளையர்கள் ரூ.1 அனுப்பி வைத்து அவமானப்படுத்தினர்.
பஞ்சாப் வங்கியை வேட்டையாடிய நீரவ் மோடி பாதுகாப்பாக வெளிநாட்டில் பதுங்கினார். பத்தாயிரம் கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பணம் பகலிலேயே கொள்ளையடிக்கப்பட்ட நிகழ்வு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எப்போதும்போல பாஜக அரசு பசுக்களைப் பற்றியே இந்த ஆண்டும் கவலைப்பட்டது.
நன்றி -டைம்ஸ் ஆப் இந்தியா