எலியோடு போராட்டம்!
பிட்ஸ்!
எலியோடு போர்!
அமெரிக்காவின்
நியூயார்க் ரயில்வே ஸ்டேஷனில் பெண் ஊழியர் டிக்கெட் கொடுத்து கொண்டிருந்தார்.
அப்போது மெகா சைஸ் எலி அவரின் ஸ்நாக்ஸ் பாக்கெட்டை லபக்க முற்பட்டது. நொடியில்
எரிமலையான ஊழியர் கையில் கிடைத்த துடைப்பத்தை எடுத்து எலியோடு போரிட சென்றுவிட்டார்.
இந்த கடமை கண்ணிய வீடியோவை பயணிகள் எடுத்து இணையத்தில் பதிவிட, ரயில்வே நிறுவனம் எலியோடு
போராடி பணியை செய்யாத ஊழியரின் நடத்தைக்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.
ட்வின்ஸ்
கிறிஸ்துமஸ்!
அமெரிக்காவின்
சிகாகோவில் இரட்டையர்களை பெற்ற தாய்களின் குழு, 23 ட்வின்ஸ் குழந்தைகள் சகிதமாக மால்
ஒன்றில் எடுத்த புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது. ஸ்காப்பர்க்கிலுள்ள
வுட்ஃபீல்டிலுள்ள மாலில் கூடிய 23 ட்வின்ஸ் குழந்தை தாய்மார்கள்கள் சான்டாகிளாஸ்
தாத்தாவோடு கிறிஸ்துமஸ் விழாவிற்கான ஸ்பெஷல் புகைப்படம் எடுத்துக்கொண்டு
மகிழ்ந்தனர்.
மாரத்தானில்
ஆள்மாறாட்டம்!
சீனாவின் ஷென்ஸென்
பகுதியில் மாரத்தான் போட்டி அறிவிக்கப்பட்டு நடந்தது. அதில் பங்கேற்று
முறைகேட்டில் ஈடுபட்ட 258 வீரர்கள் தகுதிநீக்கப்பட்டது அதிர்ச்சி தந்துள்ளது. போக்குவரத்துதுறை
வீடியோவில் வீரர்கள் போலி எண்களை பயன்படுத்தியதும், குறுக்குவழியில் மாரத்தானில்
வெல்ல ஆள்மாறாட்டம் செய்து ஓடச்செய்ததும் மாரத்தானின் மரியாதையை கெடுத்தது.
வீரர்களின் குற்றங்களைப் பொறுத்து அவர்களுக்கு இரு ஆண்டு முதல் ஆயுட்கால தடையை விதித்து
மாரத்தான் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
டான்ஸ் மாரத்தான்!
நேபாளத்தைச் சேர்ந்த
பந்தனா நேபாள், காத்மாண்டுவில் 126 மணிநேரம் மாரத்தான் டான்ஸ் ஆடி கின்னஸ் சாதனை
படைத்துள்ளார்.”இது பந்தனாவின் தனிப்பட்ட சாதனை மட்டுமல்ல; நாட்டின் பெருமையும்
கூட” என்று பூரிக்கிறார் தந்தை ராம் நேபாள். 2011 ஆம் ஆண்டு கலாமண்டலம் ஹேமலதா,
123 மணிநேரம் 15 நிமிடங்கள் இடைவேளையின்றி டான்ஸ் ஆடியதே முந்தைய டான்ஸ் சாதனை
ஆகும்.