நச்சு உணவு பாதிப்பு ஏற்படுவது ஏன்?
நச்சு உணவுக்கு தீர்வு!
உலகெங்கும் உணவு நச்சாவதால் வயிற்றுப்போக்கு, வாந்தி என பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கான தீர்வை ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
வயிற்றிலுள்ள பேசில்லஸ் செரியஸ் என்ற பாக்டீரியா வெளியிடும் நச்சு மனிதர்களின் உடல் பாதிக்கப்பட முக்கியக் காரணம். “வயிற்றிலுள்ள”இந்த பாக்டீரியா நோய்எதிர்ப்பு அமைப்புடன் ஏற்படுத்தும் செயலின் விளைவாக உணவு நச்சாகிறது” என்கிறார் ஆராய்ச்சி மாணவரான அனுகீர்த்தி மாத்தூர்.
காய்கறிகள், இறைச்சி, மீன், பாஸ்தா ஆகியவற்றை சரியான வெப்பநிலையில் பராமரிக்காதபோது பேசில்லஸ் செரியஸ் பாக்டீரியா அதில் வளரத்தொடங்கி பெருகுகிறது. பாக்டீரியா வெளியிடும் வேதிப்பொருள் உடலின் செல்லை தாக்குகிறது. உடனே நோய் எதிர்ப்பு அமைப்பு இனை தடுக்க முற்பட வயிற்றுப்போக்கு தொடங்குகிறது. “இப்போது பாக்டீரியாவின் தாக்குதலை நம்மால் கணித்து சிகிச்சை மூலம் தடுக்க முடியும்” என்கிறார் மாத்தூர். வருமுன் காப்பதே சிறந்தது என்பதால் கைகளை சரியானபடி கழுவி சமைத்த உணவை சூடு குறைவதற்கு முன்பு சாப்பிடுவது வயிறு தொடர்பான நோய்களைத் தீர்க்கும்.