இணையத்தில் உங்கள் மதிப்பு என்ன?
இணையத்தில் உங்கள் மதிப்பு என்ன?
இணையத்தில் பல்வேறு சமூகவலைதளங்கள், வங்கிதகவல்கள், ஆபாச வலைதளங்கள், உபர் வாகன சேவைகளில் பயன்படுத்தும் நபர்களின் தகவல்களின் மதிப்பு ரூ.3 ஆயிரத்து 500 என காஸ்பர்ஸ்கை ஆய்வுத்தகவல் வெளியாகி உள்ளது.
இணையத்தில் நடைபெறும் திருட்டுகள் குறித்த ஆய்வை செய்த காஸ்பர்ஸ்கை ஆய்வகம், கொள்ளையர்கள் தகவல்களை விற்கும் தொகையை வெளியிட்டுள்ளது. தோராயமாக ஒருவரின் கணக்கு தகவல்களுக்கு ஒரு டாலர் விலை நிர்ணயித்து கொள்ளையர்கள் கருப்பு இணையத்தில் விற்கின்றனர்.
“தகவல் திருட்டின் மூலம் கிடைக்கும் அபரிமிதமான பணம் சமூகத்தை உருக்குலைக்கும் செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது” என்கிறார் காஸ்பர்ஸ்கையின் மூத்த ஆராய்ச்சியாளரான டேவிட் ஜேக்கோபை. குறிப்பிட்ட ஒருவரின் தகவல்களை திருடி ஹேக்கர்கள் பயன்படுத்தும்போது பாதிக்கப்படுவது தனிநபர்கள்தான்.
இதன்விளைவாக அவர்களின் அடையாளம் பகிரங்கமாவதோடு சட்டரீதியான பிரச்னைகளுக்கும் உள்ளாவார்கள். ஒரு கணக்கு வேலை செய்யவில்லையென்றால் ஹேக்கர்கள் மற்றொரு பயனரின் கணக்கை ஆஃபராக கொடுக்கும் அளவு கொள்ளை வேகமாக முன்னேறிவருகிறது. பல்வேறு பாஸ்வேர்டுகளை கடினமாக அமைத்து தகவல்களை பாதுகாப்பது முக்கியமாகிறது.