இடுகைகள்

மாடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விலங்குகளை கால்நடை பராமரிப்பாளர் நேசிக்கத்தொடங்கும் புள்ளி! - பால்து ஜன்வர் - பசில் ஜோசப், ஸ்ருதி

படம்
  பால்து ஜன்வர் பால்து ஜன்வர் பால்து ஜன்வர் ஷம்மி திலகன் - பால்து ஜன்வர் பால்து ஜான்வர் மலையாளம் இயக்குநர் - சங்கீத் பி ராஜன் பசில் ஜோசப், திலீஷ் போத்தன், ஷம்மி திலகன்   அனிமேஷன் நிறுவனம் தொடங்கி அதில் தோல்வி கண்ட இளைஞன், பிரசூன் கிருஷ்ணகுமார். அவருக்கு அரசு வேலையாக கிராமம் ஒன்றில் கால்நடைகளை சோதித்து நோய் தீர்க்கும் வேலை கிடைக்கிறது. வேறுவழியின்றி வேண்டா வெறுப்பாக அந்த வேலைக்கு செல்பவனின் வாழ்க்கையே படத்தின் கதை. பிரசூன், நகரத்து நாகரிக ஆள். அவருக்கு கிராமம், அங்குள்ள மனிதர்கள், விலங்குகளை நேசிக்கும் பாங்கு என அனைத்துமே புதிது. கூடுதலாக அவரின் தலைவராக இருப்பவர், எம்எல்எம் நிறுவனங்களின் மீது ஆர்வம் கொண்டவர். இவருக்கும் பிரசூனுக்கும் விரைவில் முட்டிக்கொள்கிறது. அதேநேரம் பணி சார்ந்து அவருக்கு பெரிய அறிவு கிடையாது. அவரின் பெண்தோழிதான் பிரசூனுக்கு நிறைய உதவிகளை செய்கிறாள். பிரசூன் கால்நடை கண்காணிப்பு ஆய்வாளராக வேலையை தீவிரமாக செய்ய நினைக்கிறார். ஆனாலும் மருத்துவ நிலைய தலைவர், உள்ளூர் வார்டு உறுப்பினர் ஆகியோரின் அரசியல், சுயநலம் சார்ந்த காரணங்களால் நிறைய  பேரிடம் பிரசூன் அவமானமும் பட்டுக்கொ

புரதச்சத்தை உடலுக்கு பெறும் ஒரே வழி - கறி சாப்பிடுவதுதான்!

படம்
                        finger licking good -Meat இப்படி நிறையப் பேர் சொல்லுவார்கள். புரத தேவைக்கு ஒரே எளிதான வழி இறைச்சி என பலரும் முடிவுக்கு வந்துவிட்டார்கள்.  ஆனால் இதில் எந்த உண்மையும் இல்லை. காய்கறிகள், பிற தானியங்கள் என பல்வேறு உணவுப்பொருட்களிலும் புரதம் உள்ளது. இறைச்சியை பட்டினி கிடந்தவர்கள் சாப்பிடுவது போல சாப்பிட்டால், உடல் கெட்டுவிடும். இதயம்., நுரையீரல் சார்ந்த பிரச்னைகள் உறுதியாக ஏற்படும் என்பதை மறந்துவிடாதீர்கள். ஆதிக்காலத்தில் நாம் இறைச்சியைத்தான் சாப்பிட்டோம் என ஐந்துவீட்டு சாமி துணை பக்தர்கள் கொந்தளிக்கலாம். ஆனால் அன்று உணவுக்கு வேட்டையாடி சாப்பிடும் தேவை இருந்தது. பயிர் விளைவித்து சாப்பிடும் புத்தி உருவாகவில்லை. அப்படி ஒரு ஒப்பீட்டை எடுத்தாலும் கூட இன்று ஆண்டுக்கு ஒருவர் சாப்பிடும் இறைச்சி அளவு அதிகம். புரதம். விலை குறைவு என நிறைய காரணங்களை லாஜிக்காக சொல்லலாம். இதனை நாம் மறுக்கவில்லை. இறைச்சியில் எளிதாக நுண்ணுயிரிகள் தொற்றிக்கொள்வதால், அதனை சாப்பிடுபவர்களுக்கு எளிதாக வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படும். இறைச்சிக்கு மாற்றாக என்ன சாப்பிடுவது? அவகாடோ, தேங்காய், பருப்பு வகை

மாடுகளை வதைக்கின்றனவா பால் பண்ணைகள்? - வலுப்படும் எதிர்ப்புகள்

படம்
  உலகம் முழுவதும் உள்ள பால் பண்ணைகளுக்கு எதிராக பல்வேறு விலங்கு நல அமைப்புகள் போராடி வருகின்றன.  உலகநாடுகளில் இயங்கி வரும் பால் பண்ணைகள் மூலம்தான் பதப்படுத்தப்பட்ட பால், ஐஸ்க்ரீம், யோகர்ட், வெண்ணெய், நெய், சீஸ், பனீர் ஆகிய பால் பொருட்கள் கிடைக்கின்றன. மிதமிஞ்சிய பாலை பால் பௌடராக மாற்றி உலகச்சந்தையில் பல்வேறு நாடுகளும் விற்பனை செய்து வருகின்றன.  பால் பண்ணைகளில் உற்பத்தி குறையாமலிருக்க பசுக்கள் செயற்கை முறையில் சினையூட்டம் பெற்று கன்றுகளை ஈனுகின்றன. பசுக்களின் பராமரிப்பு, இயற்கையான முறை அல்லாமல் செயற்கையான சினையூட்டப்படுவது, கிடாரிக்கன்றுகளை வைத்துக்கொண்டு கிடாய்களை இறைச்சிக்கு விற்றுவிடுவது ஆகியவற்றுக்கு எதிராக விலங்குநல ஆர்வலர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்.  அமெரிக்காவில் பால்துறை சந்தை தோராயமாக 60 ஆயிரம் கோடிக்கும் அதிகம். அங்கு  மாட்டிறைச்சி உணவுகளுக்கான சந்தையும் பெரியது. இருபது ஆண்டுகாலம் வாழும் பசு, ஐந்து ஆண்டுகளிலேயே பால் வளத்தை இழந்து, இறைச்சிக்காக விற்கப்பட்டுவிடுகின்றன. பால் வளமின்றி வளர்ப்பது விவசாயிகளுக்கு சுமை என்று கூறப்படுகிறது. ’’இங்கு பெறப்படும் பால் என்பது வன்முறையின