தனது குடும்பத்தை அழித்த படைத்தளபதியை பழிவாங்க முயலும் பலவீனமான எல்லைப் பாதுகாப்பு படை வீரனின் போராட்டம்!
எவர் நைட் சீன டிராமா முதல் பாகம் அறுபது எபிசோடுகள் நிங்க் சூ, வெய் சிட்டி ராணுவத்தில் வேலை பார்க்கிறான். அவனை மரம் வெட்டுபவன் என கூறிக்கொள்கிறான். எல்லையில் உள்ள கொள்ளைக்காரர்களை அடித்து உதைத்து கொல்வதுதான் வேலை. அவனுக்கு வீட்டில் வேலை செய்ய சாங்சாங் என்ற சிறுமி இருக்கிறாள். அவளை குழந்தையாக இருக்கும்போதில் இருந்து நிங்க் சூ , தெருவில் இருந்து எடுத்து வளர்க்கிறான். இருவருக்குமான மனப்பொருத்தம் அந்தளவு நேர்த்தியாக உள்ளது. உடல் இரண்டு என்றாலும் மனசு ஒன்று. இருவரும் ஒரே வீட்டில் வாழ்கிறார்கள். நிங்க் சூ, ராணுவ வீரன். அவனுக்கு வீட்டில் சாப்பாடு தயாரிப்பது, உடைகளை துவைப்பது, வெந்நீர் போடுவது என அனைத்து வேலைகளையும் சாங்சாங் செய்கிறாள். அவளுக்கு நிங்க் சூ சொல்வதுதான் எல்லாம். வேறு எதுவும் முக்கியமல்ல. தனது பெற்றோரைக்கொன்றவர்களை பழிவாங்க உடல்பலத்தோடு ஆன்மிக ஆற்றலும் தேவை என நிங்க் சூவுக்குத் தெரியும். எனவே, டேங்க் பேரரசின் தலைநகரத்தில் உள்ள டேங்க் அகாடமியில் சேர முயல்கிறான். இத்தனைக்கும் அவனுடைய உடலில் உள்ள அக்குபஞ்சர் புள்ளிகள் அனைத்துமே அடைபட்டுவிட்டன. ஆனாலும் தற்காப்பு...