இடுகைகள்

ஹெட்போன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இசை கேட்கும் அனுபவத்தை மாற்றிய சோனி வாக்மேன்!

படம்
  இசை கேட்கும் அனுபவத்தை மாற்றிய வாக்மேன்! இன்று ஐபோன், இயர் பட்ஸ், ப்ளூடூத் வயர்லெஸ் ஹெட்போன் என வாழ்க்கை மாறிவிட்டது. பாடல் கேட்கும் அனுபவத்தை இன்று ஜேபிஎல் ஹார்மன், இன்ஃபினிட்டி, ஸ்கல் கேண்டி, பிலிப்ஸ், போஸ் என நிறைய நிறுவனங்கள் மாற்றி வருகின்றன. இதற்கெல்லாம் முன்னோடி ஒன்று உண்டு. அதுதான் சோனியின் வாக்மேன்.  இன்றுமே சில காமன்சென்ஸ் இல்லாத முட்டாள்கள், ஊருக்கே ரேடியோ வைத்து கேட்டுக்கொண்டு இருப்பார்கள், ஜிஃபைவ், லாவா, கார்பன் என உருப்படாத போன்களை வைத்துக்கொண்டு முத்துக்கொட்டை பல்லழகி என ஊருக்கே தண்ணீர் தொட்டியில் பகவதி அம்மன் கோவில் ஒலிப்பெருக்கி போல பாட்டு போட்டுக்கொண்டிருந்தனர். இங்கே எங்கே பிரைவசி? அதைத்தான் சோனியின் வாக்மேன் கொண்டு வந்தது.  நான் ஒலிப்பெருக்கி என்றால் வெளிநாடுகளில் ரேடியோ, கிராம போன் என பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். 1979ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி சோனி வாக்மேனை அறிமுகப்படுத்தியது. இசை கேட்பதில் தனித்துவமான பொருளாகவே வாக்மேன் இன்றும் உள்ளது.  1978ஆம் ஆண்டு சோனியின் துணை நிறுவனர் மசாரு இபுகா, பாடல் கேட்பதை எளிமையாக்க நினைத்தார். இதற்காக டிசி டி5 ஸ்டீரியோ கேசெட்

ஹெட்போனில் வெளிப்புற இரைச்சல் குறைக்கப்படுவது எப்படி?

படம்
  இன்று உலகச் சந்தையில் விற்கப்படும் அனைத்து ஹெட்போன்களிலும் வெளிப்புற இரைச்சலைக் குறைக்கும் வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன. வெளிப்புற இரைச்சலை காதில் அணியும் ஹெட்போன் மூலம் எப்படி கட்டுப்படுத்துவது? இதற்கு  தயாரிப்பு நிறுவனங்கள் சிறப்பு சாதனங்களைப் பயன்படுத்துகின்றன. ஹெட்போனில் இணைக்கப்பட்டுள்ள சிறிய மைக்ரோபோன் , வெளிப்புற இரைச்சலின் அளவை கணக்கிட்டு, அதனை மைக்ரோபுரோசசருக்கு அனுப்புகிறது. இரைச்சலின் அளவு அளவிடப்பட்டு அதற்கு ஏற்ப ஒலி அலைகளை மைக்ரோபுரோசசர் உருவாக்குகிறது. ஒருவர் பாடல் கேட்கும்போது, வெளிப்புற இரைச்சல் அளவுக்கு நிகரான ஒலி அலைகள் காதில் ஸ்பீக்கர் மூலம் உருவாக்கப்படுகின்றன. இதனால் பாடல் கேட்பவருக்கு வெளிப்புற இரைச்சல் இடையூறு செய்யாது.   ஸ்பீக்கர் (speaker) புதிதாக உருவாக்கப்பட்ட ஒலி அலைகளை காதில் ஒலிபரப்புகிறது.  சுற்றுப்புற ஒலி (ambient sound waves) ஒலி அலையின் உயரம், அதன் ஒலி அளவைக் குறிக்கிறது. அலைநீளம் சுருதியை தீர்மானிக்கிறது.  புதிய ஒலி அலை (New sound waves) வெளிப்புற இரைச்சலுக்கு பொருத்தமாக ஒலி அலைகள் உருவாக்கப்பட்டு தலைகீழ் வடிவில் ஒலிபரப்பப்படுகின்றன  இரைச்சலைக் கட்டுப்

டெக் புதுசு! - மார்க்கெட்டில் புது டெக் ஐட்டங்கள்!

படம்
ஆப்பிள் வாட்ச் 5 ரெட்டினா திரை பார்க்க ரம்மியமாக இருக்கிறது. இதில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள சென்சார்களின் உதவியால் பேட்டரி  பதினெட்டு மணிநேரம் தாங்குகிறது. எங்கு இருக்கிறோம், அந்த இடத்தின் அட்ச தீர்க்க ரேகைகள் என்ன ஓடுகின்றது வரையிலும் பார்க்க காம்பஸ் உள்ளது. கீழே விழும் அபாயத்தைச் சொல்லும் அம்சமும் இதில் உள்ளது. இசை காதலர்களுக்கு இந்த வாட்ச் ரொம்ப பிடிக்கும். இசையின் தரம் அப்படி. விலை  40 ஆயிரம் ஹெச்டிசி வைவ் காஸ்மோஸ் உலகம் முழுக்கவே ஏஆர், விஆர் என சென்றுகொண்டிருக்க ஹெச்டிசி அதில் அப்டேட்டாக முன்னணியில் உள்ளது.  ஆறு கேமராக்களைக் கொண்ட விஆர் செட் இது. உங்களிடம் கம்ப்யூட்டர் கேம்ஸ்களை தலைகீழாக படுத்துக்கொண்டு விளையாடும் திறன் இருந்தால் இதனை தேர்ந்தெடுக்கலாம். விலை - எப்படிக் கேட்டாலும் சொல்லவில்லை. ஆசுஸ் ரோக் போன் 2 கம்ப்யூட்டர் விளையாட்டுகளை போனில் விளையாடலாம். கம்பெனி அப்படித்தான் சொல்லுகிறது. 12 ஜிபி ராம், 6.59 இன்ச் திரை, க்வால்காம் ஸ்னாப்டிராகன்  புரோசசர் 855, 6000 எம்ஏஹெச் பேட்டரி  என அசத்துகிறது. விலை 37,000 ஐபால் இயர்வியர் பேஸ் ப