இடுகைகள்

பாலியல் கல்வி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குழந்தைக்கு பெற்றோர்தான் அனைத்தையும் கற்றுத்தரவேண்டும் - மாயாஸ் அம்மா - ஸ்வாதி ஜெகதீஷ்

படம்
  ஸ்வாதி ஜெகதீஷ், எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் மருத்துவமனைக்கு சென்றார். அப்போது அவர் கர்ப்பிணியாக இருந்தார். அங்கு அவரின் கருவில் உள்ள குழந்தையை சோதித்தவர்கள், பிறப்புறுப்பையும் (அல்குல்) அனுமதியின்றி தொட்டு பார்த்தனர். இது ஸ்வாதியின் மனதை பாதித்தது. பிறகு அவர் தனது குழந்தையை கோவாவில் நீரில் குழந்தையை பெறும் முறையில் பெற்றெடுத்திருக்கிறார். அதற்கும் இப்போது அவரைப் பற்றி பேசுவதற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும் என்கிறீர்களா? இன்றைக்கும் திரைப்படம் பார்ப்பதில் குடும்ப படம், இளவயதினர் பார்ப்பது என சில தடைகள் உண்டு. சமூகத்தில் பொது இடத்தில் செக்ஸ், வஜினா என்று பேசிப்பாருங்கள். உங்களை ஒதுக்கிவிடுவார்கள். அதுபோன்ற பாலியல் சொற்களைக்   கொண்ட கல்வியை ஸ்வாதி பேசி வருகிறார். இதற்கெனவே கோயம்புத்தூர் பேரன்டிங் நெட்வொர்க் என்ற தன்னார்வ நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த அமைப்பு மூலம் பெண்கள், பெற்றோர் என பலருக்கும் குழந்தை நலம், குழந்தை வளர்ப்பு பற்றி கல்வியைக் கற்றுத் தந்து வருகிறார். ஸ்வாதியை எப்படி அடையாளம் காண்பது, மாயாஸ் அம்மா என்றால் கோவையில் தன்னார்வ தொண்டு வட்டாரத்தில் இவரை அடையாளம் காணலா

சமூக வலைத்தளங்களில் பாலியல் கல்வி நடத்தும் புதிய தலைமுறை மருத்துவர்கள்!

படம்
          ஆன்லைனில் செக்ஸ் கல்வி நடத்துகிறார்கள் ! இன்றைய புதிய தலைமுறை மருத்துவர்கள் சமூக வலைத்தளங்களில் பாலியல் கல்வியை விழிப்புணர்வுக்காக பிறருக்கும் பரப்புரை செய்கிறார்கள் . இவர்களுக்கு ஏராளமான பார்வையாளர்களும் கிடைத்துள்ளனர் . இந்தியாவில் ஆண்களையும் பெண்களையும் பிரித்து வைத்து கல்லூரி நடத்த ஆசைப்படுபவர்களை அதிகம் . இந்த சூழலில் வளரும் ஆணோ , பெண்ணோ இருவருக்குமே தங்கள் உடல் பற்றியும் , அதன் ஆரோக்கியம் பற்றியும் பலவித கேள்விகள் , ஐயங்கள் இருக்கும் . ஆனால் இதைப்பற்றி வெளிப்படையாக யாரிடம் கூறுவது ? ஆலோசனை பெறுவது என்பதில் தயக்கம் நிலவுகிறது என்பதே உண்மை . யோனியில் கசியும் திரவத்தின் நிறம் மாறுபடுவது பற்றிய கேள்விகளுக்கு கூட இங்கு பெண்ணின் உடல் சார்ந்தும் , அவள் நடத்தை சார்ந்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன . இப்படி கேள்வியை யாரிடம் கேட்பது எனத் தவிப்பவர்களுக்கு ஆதரவாக இரும்பில் முதுகெலும்பு கொண்ட புதிய தலைமுறை மருத்துவர்கள் சமூக வலைத்தளத்தில் இயங்கி வருகிறார்கள் . இவர்கள் , தாங்கள் இயங்கும் சமூக வலைத்தளத்தில் கூட பாலியல் சார்ந்த விழிப்புணர்வுக்கு பலமுறை தடை

செக்ஸைப் பற்றிப் பேசுவது தவறு கிடையாது! - சேட்டன் பகத்

படம்
pixabay.com செக்ஸைப் பற்றி பேசுவது தவறு அல்ல! நன்றாக நினைவுபடுத்திப் பாருங்கள். உங்களில் எத்தனைபேர் பகிரங்கமாக செக்ஸைப் பற்றி பேசியிருக்கிறீர்கள். அல்லது அதன் பிரச்னைகளைப் பற்றிய ஆலோசனைகளைக் கேட்டிருக்கிறீர்கள். எனக்கு தெரிந்து இந்தியாவில் அதுபோன்ற நிகழ்வுகள் நடக்கவேயில்லை. நான் அண்மையில் நூல் ஒன்றில் ஒரு சம்பவத்தை படித்தேன். திருமணமான தம்பதிகளின் முதலிரவு அது. அன்று ஆண் சொர்க்க கதவை எவ்வளவோ முட்டிப் பார்த்ததும் திறக்கவில்லை. பெண்ணுக்கும் ஒன்றும் புரியவில்லை. அடுத்த வாரம் செக்ஸாலஜிஸ்டை அணுகுகிறார்கள். அவரிடம் பேசியபோதுதான் கணவருக்கு தெரிந்திருக்கிறது. தான் சாவி போட்டு திறக்கவேண்டிய பூட்டு தான் முயற்சித்த கதவுக்கு கீழிறக்கிறது என்று. அவர் பெண்ணின் சிறுநீர் துவாரத்தில் தன் ஆண்குறியை திணிக்க முயல, பெண் வலியில் அலறி துயரமான தேனிலவாக முடிந்திருக்கிறது அவர்களின் கல்யாண ராத்திரி. pixabay.com பெண்களைத் திரும்பி பார்க்காமல் மண்ணைப் பார்த்து நடந்து கற்பை காப்பாற்றி, கல்யாண பந்தத்தில் நுழைந்தால் இப்படித்தான். காரணம், வன்முறையை வெளிப்படையாக காட்டத்தெரிந்த நமக்கு காதலை, அன்பை, க