இடுகைகள்

பால்வெளி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பால்வெளியில் ரேடியோ அலைவெடிப்பு!

படம்
  பால்வெளியில் ரேடியோ அலைவெடிப்பு கோள்களிலிருந்து ரேடியோ சிக்னல்கள் கிடைத்தது என அறிவியல் செய்திகள் படிக்கும்போது பலருக்கும் சந்தேகம் வரும். அதென்ன ரேடியோ சிக்னல்கள் என்று. விண்வெளியில் இருந்து வரும் கதிர்வீச்சுகளோடு கிடைக்கும் ரேடியோ அலைகளைத்தான் அப்படி வானியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.  பால்வெளியிலிருந்து பல்வேறு அடையாளம் காணப்படாத செயல்பாடுகளின் விளைவாக , வரும் ரேடியோ அலைகளை 2013 ஆம் ஆண்டுக்கு முன்னதாக வானியலாளர்கள் குழப்பத்துடன் பார்த்து வந்தனர். இன்று கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள ரேடியோ ஆன்டனாவில் தினசரி பத்திற்கும் மேற்பட்ட ரேடியோ அலை வெடிப்புகள் பதிவாகி வருகின்றன.  ரேடியோ அலைகள் பால்வெளியில் எப்படி உருவாகின்றன?  பிரகாசமான பொருளிலிருந்து வரும் ஒளி, எலக்ட்ரான்களையும் வேறு பல துகள்களையும் கொண்டுள்ளது. இது பழைய துகள்களை உடைத்து மின்காந்த அலை ஊடகத்தை உருவாக்குகிறது. இதிலுள்ள எலக்ட்ரான்கள் ரேடியோ அலைகளை உருவாக்குகின்றன என்பதே ஆய்வாளர்களின் ஆய்வு அறிக்கை. இது பற்றிய ஆய்வு அறிக்கை arxiv.org வலைத்தளத்தில் பதிவாகியுள்ளது.  2015 ஆம் ஆண்டு கனடாவின் மெக்கில் பல்கலையைச் சேர்ந்த வானியல

டார்க் எனர்ஜி என்றால் என்ன?

படம்
            பதில் சொல்லுங்க ப்ரோ? வின்சென்ட் காபோ டார்க் எனர்ஜி என்றால் என்ன? இதற்கு தீர்மானமான பதிலை யாருமே சொல்லமுடியாது என்பதே உண்மை. டார்க் எனர்ஜி என்பதை பால்வெளி விரிவடைகிற தன்மை அதிகரிக்கிற அம்சம் என்று சுருக்கமாக சொல்லலாம். சார்பியல் கோட்பாட்டு மாடல்கள் இதனை பல்வேறு விதமாக வரையறுக்கின்றன. காலியான வெற்றிடம், இதுவரை அறியப்படாத புதிய சக்தி, விண்வெளியிலுள்ள இடத்தை பிடித்துக்கொள்ளும் எதிர்மறை விளைவுகளை உள்ளடக்கிய ஆற்றல் என்று பலவாறாக குறிப்பிடுகிறார்கள். இறுதியான ஐன்ஸ்டீனின் புவிஈர்ப்பு சக்தி தவறு என்று கூறப்பட்டு புதிய கோட்பாடு தேவைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. டார்க் எனர்ஜியை யார் விளக்கி மர்மத்தை தீர்த்தாலும் அவருக்கு நோபல் பரிசு நிச்சயம் உண்டு. பால்வெளி என்பது ஒன்று மறைந்ததும் மற்றொன்று தோன்றுவதற்கு வாய்ப்பு உள்ளதா? விண்வெளியில் நிறைய பால்வெளி மண்டலங்கள் உள்ளதாக வானியலாளர்கள் நம்புகிறார்கள். குறிப்பிட்ட சீரான கால இடைவெளியில் பெருவெடிப்பு நிகழ்வதாகவும் கூறுகிறார்கள். பால்வெளி மண்டலம் மெல்ல சுருங்கி வெடித்து மீண்டும் தொடங்கும் பிக் பவுன்ஸ், பால்வெளி விரிவடையும் செயல்பாடு தலைகீழாகி பு

எவ்வளவு வேகமாக நகர்கிறோம்? - மிஸ்டர் ரோனி பதில்

படம்
pixabay மிஸ்டர் ரோனி எவ்வளவு வேகமாக நாம் நகர்கிறோம்? பஸ், கார், பைக் என நகர்ந்து செல்வது வேறு. ஆனால் பூமி தன்னைத்தானே சுற்றியபடி நகர்கிறது. அப்படியே நகர்ந்து சூரியனை சுற்றி வருகிறது. பூமி மட்டுமல்ல அனைத்து கோள்களும் நகர்ந்துகொண்டே இருக்கின்றன. பஸ்சில் அறுபது கி.மீ வேகத்தில் செல்லும்போது நாம் நகர்கிறோமா இல்லையா? நிச்சயமாக நகர்கிறோம். நகரும் வேகத்தை மட்டும் பார்ப்போம். பூமியின் வட்டப்பாதை பூமி தன்னைத்தானே சுற்றி வருவதால் நாம் நகருவது தெரியவில்லை. ஒரு நொடிக்கு 30 கி.மீ வேகத்தில் பூமி சுற்றி வருவதால், அதிலுள்ள நாமும் அதே வேகத்தில் சென்று கொண்டிருக்கிறோம். அதேநேரத்தில் இந்த வேகம் நின்று போனால், என்னாகும்? நாம் தூக்கி எறியப்படும். சூரிய மண்டலத்தின் வட்டப்பாதை ஒரு நொடிக்கு 230 கி.மீ வேகத்தில் சுற்றி வருகிறது. இந்த வேகத்தில் நமது சூரியமண்டலம் சுற்றி வருகிறது. பால்வெளியின் வேகம் ஒரு நொடிக்கு  ஆயிரம் கி.மீ. வேகத்தில் நகர்கிறது. நன்றி - ஹவ் இட் வொர்க்ஸ்

இருகோள்கள் ஒரே வட்டப்பாதையில் சாத்தியமா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி?  மிஸ்டர் ரோனி இரண்டு கோள்கள் ஒரே வட்டப்பாதையில் சுற்றிவருவது சாத்தியமா? இரண்டு கோள்களின் கோணங்களைப் பொறுத்தே இதனை உறுதிப்படுத்த முடியும். ஒன்றைப் பின்பற்றி ஒன்று வரலாம். ஆனாலும் கூட இரண்டும் தன்னைத்தானே சுற்றும் வேகம், ஈர்ப்புவிசை ஆகியவையும் இதில் முக்கியமானது. இதோடு கோள்களை இயக்கும் மையத்திலுள்ள நட்சத்திரத்தின் ஈர்ப்புவிசை வட்டப்பாதையை தீர்மானிக்கிறது. சூரியன், வியாழன் ஆகியவற்றுக்கு இடையே இதுபோல சில கோள்கள் சுற்றி வருகின்றன. நன்றி: பிபிசி