எவ்வளவு வேகமாக நகர்கிறோம்? - மிஸ்டர் ரோனி பதில்
pixabay |
மிஸ்டர் ரோனி
எவ்வளவு வேகமாக நாம் நகர்கிறோம்?
பஸ், கார், பைக் என நகர்ந்து செல்வது வேறு. ஆனால் பூமி தன்னைத்தானே சுற்றியபடி நகர்கிறது. அப்படியே நகர்ந்து சூரியனை சுற்றி வருகிறது. பூமி மட்டுமல்ல அனைத்து கோள்களும் நகர்ந்துகொண்டே இருக்கின்றன. பஸ்சில் அறுபது கி.மீ வேகத்தில் செல்லும்போது நாம் நகர்கிறோமா இல்லையா? நிச்சயமாக நகர்கிறோம்.
நகரும் வேகத்தை மட்டும் பார்ப்போம்.
பூமியின் வட்டப்பாதை
பூமி தன்னைத்தானே சுற்றி வருவதால் நாம் நகருவது தெரியவில்லை. ஒரு நொடிக்கு 30 கி.மீ வேகத்தில் பூமி சுற்றி வருவதால், அதிலுள்ள நாமும் அதே வேகத்தில் சென்று கொண்டிருக்கிறோம். அதேநேரத்தில் இந்த வேகம் நின்று போனால், என்னாகும்? நாம் தூக்கி எறியப்படும்.
சூரிய மண்டலத்தின் வட்டப்பாதை
ஒரு நொடிக்கு 230 கி.மீ வேகத்தில் சுற்றி வருகிறது. இந்த வேகத்தில் நமது சூரியமண்டலம் சுற்றி வருகிறது.
பால்வெளியின் வேகம்
ஒரு நொடிக்கு ஆயிரம் கி.மீ. வேகத்தில் நகர்கிறது.
நன்றி - ஹவ் இட் வொர்க்ஸ்