சல்லீசு ரேட்டில் கல்வி கற்க எந்த நாடு பெஸ்ட்?




feels mixed emotions GIF




துருக்கிதான் காசு குறைவாக தரம் நிறைவாக கல்வி தருகின்றனர் என்கிறது ஆய்வு முடிவுகள். இதுபற்றிய ஆய்வு 58 நாடுகளில் உள்ள 360 பகுதிகளில் நடத்தப்பட்டு, துருக்கிதான் அனைத்து நாடுகளிலும் பெஸ்ட் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் படிப்புக்கு ஆண்டுக்கட்டணம் 9,250 பவுண்டுகள் ஆகிறது. இதில் பாதியை செலவழித்தாலே பட்டம் வாங்கிவிடலாம் என்றால் நீங்கள் அதைத்தானே தேர்ந்தெடுப்பீர்கள். அந்த வாய்ப்பை துருக்கி அளிக்கிறது. அந்நாட்டில் வாழ்வதற்கும், படிப்பதற்குமான தோராய செலவு 4, 899 பவுண்டுகள்தான் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. இம்முறையில் மாணவர் ஒருவர் துருக்கியில் படித்தால் 26 ஆயிரத்து 618 பவுண்டுகளை சேமிக்க முடியும்.

ஆய்வுப்பட்டியலில் கட்ட ரேட்டில் எங்கு படிக்கமுடியும் என ஆராய்ந்தோம். அதில் இந்தியா, பாகிஸ்தான், மால்டா, மலேசியா ஆகிய நாடுகளில கல்விக்கட்டணம் குறைவாக உள்ளது. டாப் 20 பட்டியலில் இந்த நாடுகள் வந்துவிட்டன. இங்கிலாந்து மாணவர்கள் இந்த நாடுகளுக்கு படிக்க வந்தால், அவர்கள் தாய்நாட்டில் செலவழிக்கும் 71 சதவீத பணத்தை மிச்சம் பிடிக்கலாம். என்ன இந்தியா வந்தால் அதற்கென தேர்வுகளை எழுதி அட்மிஷன் வாங்க வேண்டியிருக்கும்.

இங்கிலாந்தின் காலனி நாடாக இந்தியா இருந்ததால், ஆங்கிலம் இங்கு பேசப்படுகிறது. எனவே இங்கிலாந்து மாணவர்களுக்கு மொழிப்பிரச்னையும் கிடையாது. மேற்சொன்ன சில நாடுகளிலும் ஆங்கிலம் முக்கியமான மொழியாக பேசப்படுகிறது.

குறைந்த விலையில் கல்வி தரும் நாடு இருந்தால் அதிக விலையில் கல்வி தரும் நாடும் இருக்கும்தானே? முதலிடத்தில் வரிகளை போட்டே பிற நாடுகளைக் கொல்லும் அங்கிள் சாம் அமெரிக்கா உள்ளது. அடுத்த இடங்களில் நியூசிலாந்தும், ஆஸ்திரேலியாவும் உள்ளது.

நன்றி - எஜூகேசன் டைம்ஸ்