ரத்தசோகையைப் போக்கும் பிஸ்கெட்!
பெரு நாட்டைச் சேர்ந்த பொறியியலாளர் 30 நாட்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்தசோகையை போக்கும் ஊட்டச்சத்து பிஸ்கெட்டை உருவாக்கி உள்ளார்.
அமெரிக்காவில் உள்ள ஹிஸ்டரி டிவி சேனலில் ஜனவரி மாதம் 29ஆம் தேதி, உலகை மாற்றிய ஐடியா என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதில் நியூட்ரி ஹெச் என்ற பிஸ்கெட்டை தயாரித்த விவசாய பொறியியலாளருக்கு விருது அறிவிக்கப்பட்டது. அது ரத்தசோகையை போக்கும் என்பதுதான் பிஸ்கெட்டின் விசேஷம்.
இதைக் கண்டுபிடித்தவர் ஜூலியோ கேரி பாரியோஸ். ”’மூன்று வயது முதல் ஆறு வயது வரையிலான குழந்தைகள் இந்த பிஸ்கெட்டை சாப்பிடலாம். முப்பது நாட்களில் இதிலுள்ள புரத சத்தும மூலம் அவர்களின் ரத்தசோகை பிரச்னை தீர்ந்துவிடும் ’ என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பெரு நாட்டில் பாரியோஸின் நியூட்ரி ஹெச் பிஸ்கெட் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் இருந்து குழந்தைகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. அங்குள்ள 50 சதவீத குழந்தைகளுக்கு ரத்தசோகை பாதிப்பு உள்ளது. ரத்தசோகையை போக்கும் இந்த பிஸ்கெட்டில் அப்படி என்ன விஷயம் உள்ளது. கீன்வா எனும் தானியம், கோகோ, பொவைன் ஹீமோகுளோபின் ஆகிய மூன்று சேர்மானங்களே இந்த பிஸ்கெட்டை உறுதியாக்குகின்றன.
நன்றி - குளோபல் வாய்ஸ்