15ஆம் நூற்றாண்டில் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு!
சிறந்த கண்டுபிடிப்பாளர்கள்
பிரின்டிங் இயந்திரம் - ஜோகன்னஸ் குடன்பர்க்
இவரே பிரின்டிங் மெஷினைக் கண்டுபிடித்தவர். ஜெர்மனியைச் சேர்ந்த இந்த கண்டுபிடிப்பாளர் 1439ஆம் ஆண்டு நகர்ந்து இயங்கும்படியான அச்சு மெஷினை கண்டுபிடித்து சாதித்தார். இவரை அச்சுத்துறையின் பிதாமகன் என்று அழைக்கின்றனர்.
காகிதங்களை உள்ளே வைத்து கையால் மெஷினை இயக்கி அதில் அச்சிடும் முறையை இவர் உருவாக்கினார். 15ஆம் நூற்றாண்டில் மிகச்சிறந்த கண்டுபிடிப்பாக குடன்பர்க் பிரின்டிங் இயந்திரமே கருதப்பட்டது. பின்னாளில் இதனை பல கண்டுபிடிப்பாளர்கள் மேம்படுத்தினர்.
டெலஸ்கோப் - 1609
இக்கருவி இல்லையென்றால் நாம் விண்வெளியில் உள்ள பல்வேறு கோள்களைக் கண்டுபிடித்திருக்க முடியாது. இதனை 1611ஆம் ஆண்டு கிரேக்க கணிதவியலாளர் ஜியோவன்னி டெமிசியானி என்பவர் கண்டுபிடித்தார். இதனை கலிலீயோ கலிலீ முழுமை செய்தார். நவீன விண்வெளி தொலைநோக்கிகளை உருவாக்கியதில் முக்கிய பங்களிப்பு செய்தவர் ஐசக் நியூட்டன்.
நீராவி இஞ்சின் - 1712
இன்றும் கூட உலகில் மின்சாரம் தயாரிக்க எண்பது சதவீத நீராவி இயந்திரங்கள் பயன்படுகின்றன. பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்து வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல நீராவி இஞ்சின் பயன்பட்டது. இன்று டீசல் இஞ்சின், மின்சாரத்தில் இயங்கும் பல்வேறு விஷயங்கள் உருவாகி விட்டன.
இதனை அலெக்சாண்டிரியாவில் உள்ள ஹீரோ என்பவர் முதலில் கண்டுபிடித்தார். நீரை கொதிக்க வைத்து அதிலுள்ள அழுத்தம் மூலம் இயந்திரங்கள் இயங்கத் தொடங்கின. இதற்கு அழுத்தம் தருவதற்கான சிலிண்டர்கள் பொருத்தப்பட்டு இயங்கின.
இதனை மேம்படுத்திய பொறியாளர்களில் தாமஸ் நியூகாமன், ஜேம்ஸ் வாட், மேத்யூ போல்டன் ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்களால் 19ஆம் நூற்றாண்டில் தொழில்புரட்சி வேகம் பிடித்தது.
பிளாஸ்டிக் - 1856
இன்று லட்டு வாங்கிக்கொண்டு வருவது முதல் குப்பைகளை கொண்டுபோய் எறிவது வரையில் பிளாஸ்டிக் இல்லாமல் இல்லை. பிளாஸ்டிக் எடை அதிகமாக பொருட்களை தள்ளி வைக்க சொல்லியது. நம் பயணங்களில் பொருட்களின் எடையைக் குறைத்தது. அதேசமயம் ஏராளமான கழிவுகளை உருவாக்கியது.
அதனை இங்கிலாந்திலுள்ள பிர்மிங்காமிலுள்ள அலெக்சாண்டர் பெர்கெஸ் கண்டுபிடித்தார். இங்கிலாந்தின் லண்டனில் நடந்த கண்காட்சியில் சுயமாக கண்டறிந்த பெர்கெசென் என்ற பெயரில் பிளாஸ்டிக்கை அறிமுகப்படுத்தினார். வணிகரீதியாக பெர்கெஸால் வெற்றி பெற முடியவில்லை. அவர் தயாரித்த பிளாஸ்டிக் பொருட்கள் மோசமான தரத்தைக் கொண்டிருந்தன. ஆனால் இவரது ஆராய்ச்சி பிளாஸ்டிக்கின் தரத்தை மேம்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை ஆராய்ச்சியாளர்களுக்கு அளித்தது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் வெஸ்லி ஹயாட் என்பவர் பிளாஸ்டிக்கை மேம்படுத்தி செயற்கை பிளாஸ்டிக்கை வணிகரீதியாக உருவாக்கினார். பின்னர் இவர், 1870 ஆம் ஆண்டு அந்த பிளாஸ்டிக்கிற்கு காப்புரிமை பெற்று வணிகரீதியாக வென்றார்.
நன்றி - ஹவ் இட் வொர்க்ஸ் இதழ்