அரசியல்வாதிகள் தம் பொறுப்பை உணர வேண்டும்!

 

 

 Image result for michal rutkowski

 

 

”சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது  அரசியல்வாதிகள்தான்”


உலக வங்கியின் சமூக பாதுகாப்பு மற்றும் வேலைகள் ஆகிய பிரிவின் இயக்குநர் மைக்கேல் ருட்கோவ்ஸ்கி. அவரிடம் எதிர்கால வேலைவாய்ப்புகள் பற்றி பேசினோம்.

ஆங்கிலத்தில் - சுரோஜித் குப்தா

வேலைவாய்ப்பு சந்தையில்  அரசியல்வாதிகளின் பங்கு என்ன?

மக்களுக்கு தேவையான வேலைவாய்ப்பு, செல்வம் ஆகியவற்றுக்கு அரசியல்வாதிகள் முக்கியத்துவம் பெறவேண்டும். அவர்களே இதற்கு பொறுப்பு. உங்களது தாத்தா காலத்து வேலை வாய்ப்புச் சந்தை தற்போது கிடையாது. எதிர்காலத்தில் இந்த சந்தைக்கு மதிப்பும், பாதுகாப்பும் ஏற்படுத்துவது முக்கியம். இவற்றை பிரபலப்படுத்தி தொழில்முனைவோர்களை ஈர்ப்பது அரசியல்வாதிகளின் பொறுப்பு.

எதிர்கால வேலைவாய்ப்புகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

மக்களுக்கான வேலைவாய்ப்புகள் பற்றி நான் நம்பிக்கையுடனே இருக்கிறேன். காரணம் தொழில்நுட்ப பாய்ச்சல் உலகில் புதிய தொழில்நுட்பங்கள் உள்ளே நுழையும் போது வேலையிழப்பு பற்றிய அச்சம் இருக்கும். ஆனால் பின்னாளில் அதே தொழில்நுட்பத்தால் அதிகவேலைவாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. உதாரணமாக 19ஆம் நூற்றாண்டில் லுட்டிடெஸ் குழுவினர் இயந்திரங்களை சூறையாடி உடைத்து நொறுக்கினர். இதனால் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் போயிற்று. ஆனால் அதன்பிறகு, குறைந்த உடல் உழைப்புடன் அதிக உற்பத்தி திறன் கொண்ட இயந்திரங்கள் உருவாகி வந்தன. இது தொழிலாளர்களுக்கும் அனுகூலமாகவே இருந்தது.

இந்த மாற்றங்களை இன்றைய காலத்துடன் பொருத்திப் பார்ப்பதில் சிரமங்கள் உள்ளன. நவீன காலத்தில் உருவாகும் வேலைவாய்ப்புகள் திடீரென உருவாகின்றன. அதேவேகத்தில் நீர்க்குமிழிகளாக மறைந்தும் போகின்றன. ஆனாலும் எனக்கு தொழிலாளர்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. மாறிவரும் வேலைவாய்ப்பு உலகிற்கு ஏற்றபடி அவர்கள் தம் மென் திறன்களை வளர்த்துக்கொள்வார்கள். இல்லையெனில் மாறிக்கொண்டே இருக்கும் சூழலுக்கு தாக்குப்பிடிக்க முடியாது. அடுத்த பணியில் சமூக பாதுகாப்பை ஏற்படுத்திக்கொள்வது. பணியை பகுதிநேரமாக அல்லது ஒப்பந்த முறையில் செய்வது போன்ற நிலைகளை தேர்ந்தெடுப்பது. இதில் தொழிலாளர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

வேலையில் சமூக பாதுகாப்பு என்பதை விவரியுங்களேன்.

வேலையில் சமூக பாதுகாப்பு என்பது, வரி மூலம் பிடித்தம் செய்யப்பட்டு காப்பீடு செய்யப்படும் நிதிதான். இதன்மூலம் பல்வேறு குடும்ப சூழல்களுக்கும், வயதாகும்போதும் கிடைக்கும் வேலை சார்ந்த காப்பீட்டுத்தொகை உங்களுக்கு நிம்மதியைத் தரும். பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும். இந்தியாவில் தற்போது இம்முறை இல்லை என்றாலும், விரைவில் அமலுக்கு வர வாய்ப்புள்ளது. காரணம் இன்று ஸ்மார்ட்போன் மூலம் பணப்பரிமாற்றத்தை வெளிப்படையான முறையில் செய்யத் தொடங்கிவிட்டோம். அமைப்பு சாராத முறைப்படுத்தாத தொழில்துறையைக் கொண்டுள்ள இந்தியாவுக்கு இம்முறை பயன் கொடுக்கும்.

இதில் தனியார் துறையின் பங்களிப்பும் தேவை உண்டா?

நிச்சயமாக. வேலையில் சமூக பாதுகாப்பு என்பதை அரசு வேலைகள் மட்டுமே ஏற்படுத்திவிட முடியாது. தனியார் துறையினரின் பங்களிப்பு இதனை முழுமையாக்கும். இதில் நடக்கும் பணப்பரிமாற்றங்கள் பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்தும். கென்யாவில் நடைபெறும் சம்பள பரிமாற்றங்கள் 90 சதவீதம்  ஸ்மார்ட்போன்கள் மூலமே நடைபெறுகிறது. ஏறத்தாழ அந்நாட்டு பொருளாதாரத்தில் இது 10 சதவீதம் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா?

இதனை அரசு மட்டுமே கண்காணிக்கும் என்று கூறமுடியாது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக மேம்பாட்டு நிறுவனங்கள் இதன் வெளிப்படைத்தன்மையை கண்காணித்து வருகின்றன.

நன்றி - டைம்ஸ் ஜன.1, 2020