இடுகைகள்

டெக்உலகு- போன்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மார்க்கெட்டைக் கலக்கும் ஈஸி போன்கள்!

படம்
ஈஸி போன்கள் ! தற்போது பெரிய ஸ்க்ரீன்களைக் கொண்ட ஸ்மார்ட்போன்களைவிட பட்டன்களைக் கொண்ட 4 ஜி வசதியுள்ள குறைந்தவிலை போன்கள் மார்க்கெட்டில் பரபரவென விற்று வருகிறது . எ . கா . மைக்ரோமேக்ஸ் பாரத் 1( ரூ .1,899), லாவா கனெக்ட் 1( ரூ .3,599), ரிலையன்ஸ் ஜியோ ( ரூ .1,500) போன்கள் . சல்லீசான ரேட் , கீபேட் இருப்பதால் துல்லியமாக டைப் செய்யும் வசதி , இரு சிம்களை பயன்படுத்த முடிவதோஉட மூன்றுநாட்களுக்கு தாங்கும் சார்ஜ் , சிம்பிளான லாவகமாக கையாளும் போன் . ஸ்மார்ட்போன்களைப் போல அடிக்கடி அப்ளிகேஷன் அப்டேட் தேவையில்லை . 4 ஜியில் கிடைக்கும் இப்போன்களில் சர்ச் , மேப் , இமெயில் , ப்ளூடூத் , வைஃபை வாய்ஸ் உதவியாளர் ஆகிய ஸ்மார்போன் வசதிகளும் இதில் உண்டு . விரைவில் வெளியாகவிருக்கும் நோக்கியா 8110 போனை ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் வெளியிடுகிறது . " உலகம் முழுவதும் Feature எனும் இவ்வகை போன்களின் அளவு 1.3 பில்லியன் . நாங்கள் இவ்வகையில் பிரீமியம் போன்களையும் வெளியிடவிருக்கிறோம் " என்று இந்நிறுவனத்தின் தகவல் அறிக்கை தெரிவிக்கிறது .