இடுகைகள்

அம்மை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சுற்றுலாப்பயணிகளால் ஏராளமான பறவைகள் அழிந்துள்ளன! - சூழலியலாளர் பாரா இஷ்தியாக்

படம்
  சூழலியலாளர் பாரா இஷ்தியாக் பறவைகளை அழித்ததே தொற்றுநோய்கள்தான்!  கடந்த இருபது ஆண்டுகளாக பறவைகளுக்கு பரவும் தொற்றுநோய்கள் பற்றி ஆய்வு செய்து வருகிறார் ஃபரா இஷ்தியாக். 49 வயதாகும் ஃபரா , பறவைகளுக்கு ஏற்படும் மலேரியா பற்றி தனித்த கவனத்துடன் ஆராய்ச்சி செய்கிறார். அமெரிக்காவில் உள்ள ஸ்மித்சோனியன் மரபணு பாதுகாப்பு மையத்தில் முனைவர் படிப்பிற்கான வாய்ப்பு கிடைத்தது. அதன் வழியாக ஹவாயிலுள்ள   பறவைகளுக்கு ஏற்படும் மலேரியா பற்றி ஆய்வுகளை செய்தார்.  ”ஹவாயைச் சேர்ந்த 90 சதவீத பறவைகளை அழிவின் விளிம்பிற்கு தள்ளியதே மலேரியாவும், அம்மை நோயும்தான் ” என்றார் ஃபரா. ஐரோப்பிய கடல் பயணிகளின் வருகையால் பறவைகளுக்கு மலேரியா, அம்மை நோய் பாதிப்பு தொற்றியது. இவற்றுக்கு இயல்பாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கிடையாது. எனவே, எளிதாக நோய்தாக்கி பலியாகிவிடுகின்றன என்பதைக் கண்டுபிடித்தார்.  கடந்த பத்தாண்டுகளாக இமாலயப் பகுதியில் உள்ள பறவைகளைப் பற்றி ஃபரா ஆராய்ந்து வருகிறார். தனது ஆய்வின் வழியாக மலேரியா ஒட்டுண்ணிகள் எப்படி பரவுகின்றன, அதற்கு உதவும் சூழல் ஆகியவற்றை அடையாளம் கண்டார். பறவைகளைப் பிடித்து ஆய்வுத்தரவுகளை எடுக்க 4

அம்மை ஊசி போடுங்க - அமெரிக்கா அட்வைஸ்!

படம்
படை எடுக்கும் அம்மை! மீண்டும் தொற்றுநோய்களின் படையெடுப்பு தொடங்கிவிட்டது. இதோடு மக்கள் தொற்றுநோய் தடுப்பூசி பல்வேறு பக்கவிளைவுகளைக் கொண்டது என்று கூறி அதனைத் தவிர்க்கும் செயல்பாடுகளை சில தன்னார்வ குழுக்களுடன் சேர்ந்து செய்து வருகின்றனர். பல்வேறு அறிவியல் சோதனைகளிலும் பக்கவிளைவுகள் பாதிப்புகள் உண்டு. ஆனால் இன்று தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டபின்புதான், பல்வேறு தொற்றுநோய்கள் கட்டுப்படுத்தப்பட்டன. ஆனால் இயற்கை மருத்துவர்கள் நோயின் தோற்றமும் முடிவும் குறிப்பிட்ட கால வரையறைக்குட்பட்டன. அது இயல்பாக தோன்றி இயல்பாக முடிவுக்கு வந்துவிடும் என்று கூறுகின்றனர். மரணத்தை ஏற்றுக்கொள்வது சரி. ஆனால் இது பக்கத்து வீட்டுக்கார ருக்கு ஏற்படும் வரைதான். உங்கள் தந்தைக்கோ, தாய்க்கோ அம்மை தாக்கும் அபாயம் ஏற்பட்டால், அல்லது தாக்கினால் இதேபோல கொண்ட கொள்கையில் உறுதியோடு இருக்க முடியுமா? சாத்தியமில்லை. தற்போது அமெரிக்கா 1989 ஆம் ஆண்டு பிறந்தவர்களுக்கும் தடுப்பூசி அவசியம் என்று அறிவித்துள்ளது. இம்மாதம் அமெரிக்கா - இஸ்ரேல் விமானத்தில் பணிப்பெண்ணாக பணிபுரியும பெண்மணிக்கு தொற்றுநோய் கண்டறியப்பட்ட