இடுகைகள்

பார்வை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பார்வைத்திறன் குறைந்த மாற்றுத்திறனாளிகளின் வேலைவாய்ப்பிற்கு உதவும் கர்ணா வித்யா பவுண்டேஷன்!

படம்
  சென்னையின் கிண்டியில் கர்ணா வித்யா பவுண்டேஷன் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் லட்சியமே பார்வைத்திறன் குறைந்தவர்களுக்கு பயிற்சி அளித்து வேலை வாய்ப்பைப் பெற்றுத் தருவதுதான். 1999ஆம் ஆண்டு, சென்னை ரோட்டரி கிளப் தொடங்கிய நிறுவனம்தான்   கர்ணா வித்யா பவுண்டேஷன். 2013ஆம் ஆண்டு தன்னார்வ நிறுவனமாக மாற்றப்பட்டு கல்வி, வேலை வாய்ப்பைப் பெற்றுத்தரும் நிறுவனமாக மாறியது. பார்வைத்திறன் குறைந்தவர்களுக்கு ஆலோசனை, பயிற்சி, போக்குவரத்து, தொழில்நுட்ப உதவிகளை கர்ணா வித்யா பவுண்டேஷன் வழங்குகிறது. இந்த நிறுவனம், கலசலிங்கம் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படுகிறது. இதன் காரணமாக, பார்வைத்திறன் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதாக வேலைவாய்ப்பைப் பெற்றுத்தர முடிகிறது. 2023ஆம் ஆண்டு கர்ணா வித்யா பவுண்டேஷன் பயிற்சியளித்த மாணவர்களில் 25 பேர், இருபது கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை பெற்றுள்ளனர். அரசின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் நிறுவனங்களின் வேலைவாய்ப்பு முகாம்களிலும் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று வருகின்றனர்.   சாதாரண ஆட்களுக்கு வேலைவாய்ப்பு என்பது நேர்காணல் நடத்தினாலே வேலைவாய்ப்ப

பார்வையற்றவர்களுக்கு லூயிஸ் ப்ரெய்லியின் பங்களிப்பு!

படம்
இன்றிலிருந்து சுமார் 170 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த பிரான்ஸ் நாட்டுக்குச் செல்வோம். அங்கு கூப்ரே என்ற சிறுநகரத்தில் சிறுவன் ஒருவன் வாழ்ந்து வந்தார். அவன் பெயர் லூயிஸ் ப்ரெய்லி. இவரது அப்பா தோல் பொருட்களை தயாரித்து வந்தார். லூயிஸ் விளையாடிக் கொண்டிருக்கும்போது அப்பாவின் ஊசியை தவறுதலாக எடுத்து கண்ணில் குத்திக்கொண்டான். கண்ணில் தொற்று வேகமாக பரவ, விரைவில் பார்வையை இழந்தான். புத்திசாலி என்பதால் கண்பார்வை குறைவை சமாளித்து பாடங்களை சிறப்பாக படித்தான். பின்னாளில் பார்வையற்றோருக்காக ராயல் சொசைட்டியில் உதவித்தொகை பெற்று படித்தான். இங்கு இருந்த நூல்களை எளிதாக லூயிஸ் படிக்க முடிந்தது. இதுபோல அனைவரும் படிக்கும்படி நூல்களை உருவாக்கினால் என்ன என்று யோசித்தார். இதனால் அதற்கெனவேஏ ப்ரெய்லி முறையை உருவாக்கினார். நூல்களை எழுதினார். ப்ரெய்லி முறைக்காக இவர் பயன்படுத்திய கருவி, தனது கண்களை எதைக்கொண்டு தவறுதலாக குத்திக்கொண்டாரோ அதுதான் என்பதை நகைமுரணானது. ஆனால் காலம் அவரை அப்படித்தான் செய்ய வைத்தது. லூயிஸ் பாடுபட்டு இம்முறையை உருவாக்கினாலும் கூட இதனை பலரும் கண்டுகொள்ளவே இல்லை. லூயிஸ் இறந்தபிறகு அவரது மு

ரேடியோ அலைகளை விலங்குகள் பார்க்க முடியுமா?

படம்
மிஸ்டர் ரோனி வைஃபை மற்றும் ப்ளூடூத் சிக்னல்களை பிற விலங்குகள் பார்க்க முடியுமா? வைஃபை மற்றும் ப்ளூடூத் சிக்னல்கள் 6 செ.மீ முதல் 12.5 செ.மீ வரையிலான அலைநீளம் கொண்டவை. இந்த அலைகளை மனிதர்கள் பார்ப்பது கடினம். வௌவால்கள், சில மீன்கள் மற்றும் சில விலங்குகள் மட்டுமே இந்த அலைகளைக் காண முடியும். மிக நீளமான அலைநீளம் கொண்ட அலைகள் குறைந்த சக்தியை வெளிப்படுத்துகின்றன. இதைப்பின்பற்றி பாக்டீரியா டிஎன்ஏ கூட ஆற்றலை வெளியிடுகிறது என பிரெஞ்சு ஆராய்ச்சியாளர் தன் ஆய்வை வெளியிட்டார். 2009ஆம் ஆண்டு இவர் செய்த ஆராய்ச்சியால் கடும் கண்டனங்களைச் சந்தித்தார். உண்மையில் இப்படி நுண்ணுயிரிகள் ஆற்றலை வெளிப்படுத்துகின்றனவா என்பதற்கு எவ்வித அறிவியல் ஆதாரங்களும் கிடையாது. நன்றி - பிபிசி காய்கறிகளை நாம்தான் வேகவைத்துப் பயன்படுத்துகிறோம். அதை எதற்கு தண்ணீரில் கழுவ வேண்டும்? நல்ல கேள்வி. பாக்டீரியா, வைரஸ் போன்றவை வேக வைக்கும் போது அழிந்துவிடும் என்பதை உணர்ந்து கேட்டிருக்கிறீர்கள். ஆனால் செயற்கையான உரம், பூச்சிக்கொல்லி மிச்சங்கள், காய்கறிக்கடைக் காரரின் வியர்வை, அவற்றைக் கொண்டுவரும் போது ஏற்ப

பொருட்களின் அளவு கண்களைப் பொறுத்து மாறுமா?

படம்
மிஸ்டர் ரோனி இருகண்களில் ஒன்று பழுதாகிவிட்டால், மற்றொன்று மூலம் பொருட்களை எளிதாக பார்க்கலாமா? பொருட்களின் அளவு பற்றி நம் நினைவில் ஏற்கனவே சில வரையறைகள் இருக்கும். எனவே, நீங்கள் ஒற்றைக் கண்ணில் பொருளைப் பார்க்கும்போது அதற்கேற்ப மூளை தன்னை மாற்றிக்கொள்ளும். இந்த தன்மையை பைனாகுலர் டிஸ்பாரிட்டி என்று குறிப்பிடுகிறார்கள். சாதாரணமாக ஒற்றைக்கண்ணை மூடி மற்றொரு கண்ணில் ஓர் பொருளைப் பார்க்கும்போது, அதில் வேறுபாடுகள் தெரியும். ரயில்வே பாதைகளைப் பார்த்தால் நமக்குத் தெரிவது மோஷன் பாரலாக்ஸ் எனும் தன்மை. நீண்ட தூரத்திற்கு ஒன்றுபோலவே இருப்புப் பாதைகள் தெரியும். நன்றி- பிபிசி

காற்றில் பார்க்க முடியாதது ஏன்?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி காற்றில் நம்மால் பார்க்க முடியாதது ஏன்? காற்று என்பது வெறும் காற்று மட்டுமல்ல. அதனுடன் குறிப்பிட்ட அழுத்தமும் உண்டு. இதனால், கண்ணின் ரெட்டினா அதனை எதிர்கொள்ள முடியாமல்  கண்களை மூடிக்கொள்கிறோம். குறைந்த அழுத்தம் கொண்ட காற்று, அதிக அழுத்தம் கொண்ட காற்றை விட குறைவான அடர்த்தி கொண்டது. இதனால் ஒளிக்கற்றைகளை காற்று பாதிக்கிறது. வானில் நட்சத்திரங்களை பார்க்கிறீர்கள். அவை தூரத்தில் இருந்தாலும் அவற்றைப் பார்க்க உங்களுக்கு அதிக தடைகள் இல்லை. அவை நிலையானவையாக மூளை உணர்ந்து படமாக கண்களில் காட்டுகிறது. ஆனால் காற்று வீசும்போது உங்களால் பொருட்களில் பட்டும் எதிரொலிக்கும் ஒளியை உள்வாங்க முடியாது. இதனால் உங்களால் அந்த சமயங்களில் கண்ணில் தென்படும் பொருட்களை பார்க்க முடியாது. நன்றி: பிபிசி