இடுகைகள்

எல்ஜிபிடி வெற்றி- 377 சட்டம் நீக்கம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

377 - 158 ஆண்டுகால ஒடுக்குமுறை சட்டம் நீக்கம்!

படம்
வானவில் வெற்றி! இயற்கைக்கு விரோதமானது என்று கூறி எல்ஜிபிடி சமூகத்தினரின் வாழ்வுரிமைக்கு எதிராக இருந்த 158 ஆண்டுகால ஆங்கிலேயர் காலத்தின் 377 சட்டத்தை திருத்தியுள்ளது நீதிமன்ற தீர்ப்பு. தீர்ப்பை கூறிய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உள்ளடங்கிய நீதிபதிகளின் பெஞ்ச், 377 சட்டத்தை பகுத்தறிவற்ற, ஏற்றுக்கொள்ள முடியாத, சர்வாதிகாரம் என விமர்சித்துள்ளனர். 2001 ஆம் ஆண்டு நாஸ் பவுண்டேஷன்(இந்தியா) தொடுத்த வழக்கு இது. பாலுறவு நோய்கள் தொடர்பாக செயல்படும் இவ்வமைப்பு 377 சட்டம் அரசியலமைப்பு சட்டம் மற்றும் உலக மனித உரிமை விதிகளையும் புறக்கணிக்கிறது என்று கூறி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. காமன்வெல்த் மற்றும் 70 க்கும் மேற்பட்ட நாடுகளில் எல்ஜிபிடியினருக்கு எதிராக இதே சட்டம் பல்வேறு வடிவங்களில் உள்ளது. உச்சநீதிமன்றத்தில் எல்ஜிபிடி சமூகத்தினருக்கு ஆதரவாக 35 மனுக்கள் தாக்கலாயின. அதில் பரதநாட்டியக் கலைஞர் நவ்தேஜ்சிங் ஜோகர், டெல்லி ஐஐடி மாணவர் வருண் ஐயர், வரலாற்று எழுத்தாளரும் ஹோட்டல் அதிபருமான அமன்நாத், உணவுத்துறை ஆலோசகரான ஆயிஷா கபூர், பத்திரிகையாளர் சுனில் மெஹ்ரா, த