இடுகைகள்

வெள்ளி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சூடும் குளிரும் தாண்டிய பௌதிகம்! - கவிஞர் தாமரை

படம்
  எரிமலைக் குழம்பையும் துருவப் பனியையும் பிசைந்து போட்டுவிட்டு கேள்வியென்ன? சூடும் குளிரும் தாண்டிய பௌதிகம்   நான் வெள்ளிவாசி நீ செவ்வாயிலிருந்து இறங்கியிருக்கிறாய் இடைதூரத்தை கடக்க முயல்கிறோம் நான் கண்ணீராலும் கனத்த   வார்த்தைகளாலும் நீ அதிகாரத்தாலும் அடர்ந்த மீசையாலும்   சாலையின் ஒரு திசையிலும் எதிர் திசையிலும் ஒரே நேரத்தில் நடந்துகொண்டிருக்கிறோம் கைகள் கோர்த்தும் விலகியும்… -தாமரை படம் - பிக்ஸாபே காப்புரிமை - குமுதம்  

வெள்ளியில் வாழ முடியுமா?

படம்
giphy மிஸ்டர் ரோனி நாம் வெள்ளி கோளுக்கு சென்று, அதன் வான்பரப்பில்  விண்கலத்தில் வசிக்க முடியுமாழ சயின்ஸ் பிக்சன் படமாக வேண்டுமானால் இதனை முயற்சிக்கலாம். காரணம், அப்படி விண்கலத்தில் மனிதர்கள் வாழ்வது ஆபத்தானது. மேலும் மிதக்கும் நகரங்கள் பெரும் செலவு பிடிப்பவை. வெள்ளி ஏறத்தாழ பூமியைப் போன்ற தன்மையைக் கொண்டவை. அறுபது கி.மீ தொலைவுக்கு பூமியைப் போன்ற ஈர்ப்புவிசை இருக்கும். இதனால் ஆராய்ச்சியாளர்கள் அப்படி நினைத்தார்கள். ஆனால் அது நிறைய நடைமுறைப் பிரச்னைகளைக் கொண்டிருந்ததால் தற்போது, செவ்வாய் பக்கம் திரும்பிவிட்டனர். எனவேதான் எலன் மஸ்க், அமேசான் பெசோஸ் உட்பட செவ்வாயை காலனியாக்கி மனிதர்களை குடிவைக்க திட்டமிட்டு வருகின்றனர்.இப்போதைக்கு வீனஸ் வாழ்க்கை என்ற பெயரில் சயின்ஸ் ஃபிக்ஸன் படம் மட்டுமே எடுக்க முடியும். ஆராய்ச்சிகள் அந்த வேகத்தில்தான் போய்க்கொண்டிருக்கிறது. நன்றி - பிபிசி