இறந்துபோன மரத்தின் எமோஜி!
இறந்துபோன மரத்தின் எமோஜி! இனி போன்களில் இறந்துபோன மரத்தின் எமோஜியை நாம் பயன்படுத்தலாம். ஆனால் இதை மகிழ்ச்சியான செய்தி என்று கருதமுடியாது. பகிரவும் முடியாது. 2022ஆம் ஆண்டு இறந்து மரத்தின் எமோஜி சிந்தனை உருவானது. அது அண்மையில் செயலாக்கம் பெற்றுள்ளது. யுனிகோட் கன்சோர்டியம் என்ற தன்னார்வ அமைப்பு, புதிய எமோஜியை ஏற்றுக்கொண்டுள்ளது. இறந்த மரத்தின் எமோஜி, காலநிலை மாற்ற பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வுக்கானது. இயற்கையாகவே வறட்சி என்பது உலக நாடுகளின் பல பகுதிகளில் ஏற்பட்டு வருகிறது. மனிதர்கள் தங்கள் செயல்பாட்டால் ஏற்படுத்துவது வேறுவகையானது. புதிய எமோஜியை யோசித்தது சற்று முன்னரே என்றாலும் பல்வேறு பிரச்னைகளை பேசும்போது இன்றைக்கும் அது பொருத்தமாகவே உள்ளது என்றார் எமோஜி கமிட்டி தலைவரான ஜெனிபர் டேனியல். துருவத்தில் பனி உருகுவது, பிளாஸ்டிக் மாசுபாடு, கடல்நீர்மட்டம் உயர்வது, பன்மைத்தன்மை குறைவது என பல்வேறு பிரச்னைகளை எமோஜி மூலம் பேசலாம். 1970 தொடங்கி இன்றுவரை வறட்சியால் ஆறு லட்சத்து ஐம்பதாயிரம் மக்கள் இறந்துள்ளதாக ஐ நா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. இன்று, 2.3 பில்லியனுக்கும...