இடுகைகள்

அமெரிக்கா - ட்ரம்ப் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அகதிகளுக்கு கெட் அவுட்! - ட்ரம்பிஸ்தான் அதிகாரம் ஒன்று!

படம்
அகதிகளே வெளியேறுங்கள்! - அமெரிக்காவின் மூர்க்கமான அதிரடி ரூல்ஸ்! - ச.அன்பரசு உங்கள் குழந்தைகளுக்கான பிஸ்கட் வாங்க கடைக்குச் சென்றிருக்கிறீர்கள். கடையில் நிற்கும்போது குடியேற்ற அதிகாரிகள் உங்களை கைது செய்து சிறையில் அடைத்து முறையான ஆவணங்கள் இல்லை என்று கூறி நீங்கள் தப்பித்து வந்த உங்கள் நாட்டிற்கே அனுப்பி வைத்தால் எப்படியிருக்கும்? அமெரிக்காவிலுள்ள 1.1 கோடி மக்களுக்கு அடுத்த நேரப்போகும் விபரீதம் இதுதான். மெக்சிகோவைச் சேர்ந்த அலெஜாண்ட்ரோ அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியாவில் பேக்கர்ஸ்ஃபீல்டில் வசித்து வந்தார். வேலைக்குப் போய்விட்டு வீடு திரும்பியவர் வீட்டின் காலிங்பெல்லைக் கூட அழுத்தவில்லை; சாலையில் நிறுத்திய காரிலிருந்து அதிவேகமாக இறங்கிய குடியேற்ற அதிகாரிகள் அலஜாண்ட்ரோவை சட்டவிரோத குடியேற்றத்திற்காக அரஸ்ட் செய்து மெக்சிகோவிற்கு உடனே நாடுகடத்திவிட்டார்கள். இனி அவர் அமெரிக்காவிற்கு திரும்பிவர,அவரது இரண்டரை வயது மகள்களுக்கு 21 வயது பூர்த்தியாகவேண்டும். மரியா தன் மேஜரான மகள் மூலம் அப்ளை செய்தால் 2036 ஆம் ஆண்டில் கணவர் அலெஜாண்ட்ரோவைச் சந்திக்கலாம் எனும்படி ரூல்ஸ