இடுகைகள்

வானிலை ஆப் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அமெரிக்காவில் அதிகரிக்கும் காலநிலைமாற்ற பதற்றம் - கொள்ளை லாபம் சம்பாதிக்கும் வானிலை ஆப்கள்

படம்
  காலநிலை மாற்ற பதற்றம் கொரோனாவுக்குப் பிறகு மக்களின் வாழ்க்கை அடியோடு மாறிவிட்டது. பலரும் வேலை என்பதை விட குடும்பம் முக்கியம் என மாறிவிட்டனர். சொந்த ஊருக்கு திரும்பி சென்று தெரிந்த வேலைகளைப் பார்க்கிறார்கள். அதைவிட முக்கியமாக எப்போது வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம் என்ற பயத்தில் வாழத் தொடங்கிவிட்டனர். அலுவலகத்தில் செய்து வந்த பணிகள் பெரும்பாலும் வீட்டில் இருந்தே செய்யுமாறு மாறிவிட்டன. பெருநிறுவனங்கள் மீண்டும் அலுவலகத்திற்கு திரும்ப உத்தரவிட்டும் வேலை செய்தவர்கள் பணிக்கு திரும்பவில்லை. ஏராளமானோர் வேலையைக் கைவிட்டனர். இதெல்லாமே மனிதர்களின் பதற்றமான மனநிலையை அடையாளம் காட்டுவதுதான். பெருந்தொற்றுக்கு முன்பே வெப்ப அலை பிரச்னை இருந்தாலும் தற்போது அது தீவிரமாகிவருகிறது. அண்மையில் அமெரிக்காவின் டெக்ஸாஸில் 46 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்தது. அங்கு வாழ்ந்தவர்கள் பீதியடைந்து, இங்கேயே இருக்கலாமா, வெப்பம் அதிகரித்தால் வேறு நகரங்களுக்கு போகலாமா என யோசிக்கத் தொடங்கிவிட்டனர்.   இவர்களின் உளவியல் பீதியை வானிலை ஆப்கள் மேலும் அதிகரித்தன. அமெரிக்கர்களில் 50 சதவீதம் பேர் வானிலை ஆப்களை பயன்ப