இடுகைகள்

வசீகரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாயத்தன்மையும் வசீகரமும் கொண்ட சிறுகதைகள் - சரீரம் - நரன்- சால்ட் பதிப்பகம்

படம்
  சரீரம் -நரன்- சால்ட் பதிப்பகம் சரீரம் நரன் சிறுகதைகள் சால்ட் பதிப்பகம் நன்றி – ஆலிவர் ஜென், திருவண்ணாமலை   2019ஆம் ஆண்டு வெளியான சிறுகதைகள். சரீரம் என்ற இத்தொகுப்பில் பதினோரு கதைகள் உள்ளன. நூலின் வடிவமைப்பு, கட்டமைப்பு மிகவும் கச்சிதமாக புதியதாக உள்ளன.   அனைத்து சிறுகதைகளும் மாயத்தன்மை கொண்டுள்ளன. கதைகளை வாசிப்பவர்கள் அதிலுள்ள மாய வசீகரத்தில் இழுக்கப்படுகிறார்கள். நூலை முழுமையாக படித்து முடிக்கும் வரை அதிலிருந்து மீள முடிவதில்லை. நூலின் முதல் கதையிலும், அமரந்தா எனும் கடைசிக்கு முந்தைய கதையிலும் அமரந்தா பாத்திரம் வருகிறது.   உடல் எனும் முதல் கதையில் சங்கரன் பார்த்த அக்காவின் உடல் எப்படி அவனை பித்து பிடிக்க வைக்கிறது என்று ஆசிரியர் சொல்லியிருக்கிறார். அமரந்தா கதையில் அவளுக்கு எப்படி உடலே பெரும் பாரமாக மாறுகிறது என்று ஆசிரியர் காட்டியிருக்கிறார்.   அமரந்தாவின் தோழன் அபு அவளின் கை பற்றி அவளோடு சென்னை பயணப்படும் நிகழ்ச்சி, கதைக்குப் பொருத்தமானதாக அழகாக இருந்தது. அந்த காட்சியை அப்படியே காண்பது போல இருக்கிறது. இரண்டு கதையில் வரும் அமரந்தாவுமே பிறரது மனதை ஆழமாக   உள்ளே பார்

குற்றங்களை செய்வதில் முதலிடம் யாருக்கு?

படம்
குற்றங்களை ஆவணப்படுத்துதல் குற்றங்களை ஆவணப்படுத்துவது என்பது கடினமானது. சில வழக்குகள் மிக நீண்டு பல ஆண்டுகளாக கோப்பில் இருக்கும். குற்றவாளிகளை பிடிக்கவே முடியாது. இதற்கு காரணம், வழக்குகளை காவல்துறையினர் சரியானபடி இணைத்து பார்க்காத துதான். இதன்படி பார்த்தால் முந்நூறு பேர்களை கொன்ற கொலம்பியாவைச் சேர்ந்த பெட்ரோ லோபஸ் முன்னாடி வருவார். கொலைகளை செய்த தில் இவருக்கு தங்கப் பதக்கம்தான் தரவேண்டும். இதற்கடுத்து,  ஹென்றி லீ லூகாஸ், ஓட்டிஸ் ஆகிய இருவரும் இருநூறு பேர்களை கொன்று இரண்டாவது இடத்தில் இருக்கிறார்கள். இவர்களை காவல்துறை விசாரித்தபோது, தாங்கள் ஏழு பேர்களை மட்டுமே கொன்றதாக சொன்னார்கள். அடித்து கேட்டாலும் அப்படித்தாங்க சார் என்றார்கள்.   ஜெர்மனியைச் சேர்ந்த ப்ரூனோ லுட்கே, ரஷ்யாவைச் சேர்ந்த ஆண்ட்ரேய் சிக்காட்லோ முறையே 85, 52 என ஆட்களை போட்டுத்தள்ளியவர்கள். இவர்களுக்கு அடுத்து அமெரிக்காவைச் சேர்ந்த ஜெரால்டு ஸ்டானோ வருகிறார். இவர் 41 பேர்களை கொன்றார். இவருக்கு அடுத்து தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந மோசஸ் சிட்கோல் என்பவர் 38 பேர்களைக் கொன்றுள்ளார். இவர்களுக்கு அடுத்துதான் கேரி ரிட்ஜ்வே, ஜான் வேய்ன்

காதல் வார்த்தைகள் இவ்வளவா? - வரலாற்றில் புழங்கியவை!

படம்
pixabay இணையம் வந்ததிலிருந்து பழமையான தகவல் தொடர்புமுறைகள் பலவும் தேக்கத்தை சந்தித்துள்ளன. இன்று காதல் சொல்ல ரோஜா, ஆர்ச்சி அட்டைகளை தேடுவதை விட ஜிஃப் ஃபைலாக அனுப்புவது இன்னும் எளிமையாக உள்ளது. காதலைச் சொல்ல, குறிப்பிட்ட நபரை அழகாக இருக்கிறான் என்று சொல்ல என்ன வார்த்தையை முன்னர் பயன்படுத்தினார்கள் என்று அறிந்தால் நன்றாக இருக்குமே! அதற்காகத்தான் சில சொற்களை உங்களுக்கு அறியத் தருகிறோம். பக் ஹவுஸ்  காதலில் வீழ்ந்தேன் என்று சொல்கிறார்களே அதை ஒத்தது. புதிதாக காதல் செய்பவர்கள் இரவு முழுக்க போனில் பேசுவார்கள். சீனா - ரஷ்யா கூட அவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டு அரசியல் சமாச்சாரங்களை பேசியிருக்க மாட்டார்கள். காதலில் மூழ்கி பைத்தியமாக திரிந்து நண்பர்களை ஒரண்டுக்கு இழுப்பதும் இவ்வகையில் சாரும். இதனை 21ஆம் நூற்றாண்டில் பக் ஹவுஸ் - Bughouse என்கிறார்கள். BUSS பஸ் என்றால் கிஸ் என்று பொருள். அன்று பிரெஞ்சில் பைசர், ஸ்பானிஷில் பெசோ, இத்தாலியின் பசியோ என்று சொல்லி முத்தம் கேட்டனர். பாசன் - bassen  என்ற சொல்லிலிருந்து உருவாகி வந்திருக்கலாம் என்கிறார்கள். இந்த சொல் தோன்றி புழங்கிய காலம் 1