சீனாவின் பசுமை அரசியல்! - கார்பனை அடிப்படையாக கொண்ட காலனியாதிக்க முறை வளருகிறதா?
சீனா, ஆசிய அளவில் பெரிய பொருளாதார சக்தி. அதை ஏற்றுக்கொள்ள முடியாத மேற்குலக நாடுகள் அந்நாட்டை கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் இழிவும் அவதூறும் செய்து வருகின்றன. அதில் முக்கியமானது. மாசுபாடு தொடர்பானது. இந்தியா, கருத்தியல் அல்லது பொருளாதார அளவில் கூட சீனாவின் அருகே நிற்க முடியாத நாடு. ஆனால் தொடர்ச்சியான சீனாவுடன் அதை ஒப்பீடு செய்து தாழ்வுணர்ச்சி கொண்ட ஆய்வாளர்கள் மனதை ஆற்றிக்கொள்கிறார்கள். அதனால் என்ன பயன் கிடைக்குமோ அவர்களது மனதிற்கே தெரியும். இந்தியா தலைநகரான டெல்லியில் கூட மாசுபாட்டை எப்படி கட்டுப்படுத்துவது என தெரியாமல் திணறிக்கொண்டிருக்கிறது ஒன்றிய அரசு. மாநில அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அதன் முதல்வருக்கான அதிகாரங்கள் மிக குறைவு. சீனாவில் மாசுபாடு பாருங்கள் இதோ என புகைப்படங்கள் எடுத்த மேற்குலகு கூட இப்போது சீனாவில் மாசுபாடு வெகுவாக கட்டுப்பட்டிருப்பதை ஏற்க முடியாவிட்டாலும் நெசந்தானுங்க அய்யா என ஒருவழியாக ஒப்புக்கொள்ள தலைப்பட்டிருக்கிறார்கள். பொறாமையும், வயிற்றெரிச்சலும் மட்டுமே ரு நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்லமுடியாது. சூழியல், காலநிலை மாற்றம் ன்பன மக்...