பசுமை இல்ல வாயுக்கள் இல்லாத உலகம், மத நெருக்கடிகளை எதிர்கொண்ட ரோஜர் பேக்கான்

 

 

 





 

 

 

அறிவியல் பேச்சு
மிஸ்டர் ரோனி

உலகில் பசுமை இல்ல வாயுக்களே இல்லை என்றால் பூமியின் வெப்பம் என்னவாக இருக்கும்?

தோராயமாக மைனஸ் 15 டிகிரி தொடங்கி மைனஸ் இருபது டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். பசுமை இல்ல வாயுக்களின் காரணமாகவே பூமியில் தோராய வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸாக உள்ளது. முற்றாக பசுமை இல்ல வாயுக்களே இல்லை என்றால் நம் வாழ்க்கை முற்றாக பூமியில் இல்லாமல் போய்விடும். அளவோடு இருப்பது நல்லது. கூடவும் கூடாது, குறையவும் கூடாது.

சூரிய வெப்பம் பசுமை இல்ல வாயுக்களின் ஊடாகவே பூமிக்கு வருகிறது. இந்த வெப்பம் வாயுக்களின் காரணமாகவே பூமியில் தங்குகிறது. பசுமை இல்ல வாயுக்கள் அளவை தாண்டாமல் இருந்தால் பூமியில் அனைத்து உயிரினங்களுக்கும் வாழ்வதற்கான காலநிலையை உருவாக்குகிறது. குறிப்பாக கார்பன் டை ஆக்சைடு, தாவரங்கள் வளர்வதற்கு அத்தியாவசியம். கார்பன் அனைத்து தாவரங்கள், விலங்குகள் வாழ்க்கைக்கும் தேவையான ஒன்று.

ரோஜர் பேக்கான் என்பவர் யார்?

1214 அல்லது 1220 ஆண்டில் பிறந்தவர் என்றே கூறவேண்டியுள்ளது. இவர் ஒரு அறிவியலாளர். ரோஜர் பேக்கானை பலரும் தத்துவவாதி பிரான்சிஸ் பேக்கானோடு தொடர்படுத்தி குழப்பிக்கொள்கிறார்கள். அறிவியல் நூல்களை எழுதக்கூடாது என கிறித்தவம் அழுத்தம் கொடுத்த காலத்தில் ரோஜர் அறிவியல் நூல்களை எழுதவேண்டும், அதை மக்கள் படிக்கவேண்டும் என விரும்பினார். இன்றைக்கு இந்தியாவில் உள்ள சில சாணி வண்டு அமைப்புகள், சிந்தனையாளர்களை, அறிவுஜீவிகளை அவதூறு செய்து குற்றம்சாட்டி சிறையில் அடைப்பதைப் போன்ற காலகட்டம், ஐரோப்பாவில் இருந்து வந்தது. அந்த காலகட்டத்தில் அறிவியல் ஆய்வுகளை செய்யவேண்டுமென ஆசைப்பட்டவர் ரோஜர்.

பிரெஞ்சு நாட்டு பாதிரியார் ஒருவருக்கு தேவையான உதவிகளை செய்து வந்தார் ரோஜர். அவர் போப்பான பிறகு, அவரிடம் அறிவியல் களஞ்சியம் ஒன்றை எழுத அனுமதி கோரினார். ஐந்து லட்சத்திற்கும் அதிகமான வார்த்தைகளைக் கொண்டு நூலையும் எழுதினார். அதைப்பற்றி அறிமுக கடிதம் ஒன்றைக் கூட போப்பிற்கு கொடுக்க எழுதி வைத்திருந்தார். அந்த நேரத்தில் ரோஜருக்கு பொருள் உதவி செய்தவர், திடீரென இறந்துபோனார். எனவே, தொடங்கி அதுவரை செய்த விஷயங்கள் அப்படியே முடங்கிப் போயின.

ஒளி, கணிதம், அறிவியல் பரிசோதனைகள் பற்றி ரோஜர் சிந்தித்து எழுதிய கட்டுரைகள், தகவல்கள் முக்கியமானவை. இன்றைக்கு அவற்றை படித்தாலும் ஒருவர் எளிதில் ஆச்சரிய வசப்படுவது நிச்சயம். ஆனால் வாழ்க்கையில் ஆசைப்படுவது எல்லாம் நடக்குமா என்ன? அதனாலும் மனிதர்கள் ஆசைப்படுவதை நிறுத்துவதும் இல்லை அல்லவா?





கருத்துகள்

பிரபலமான இடுகைகள்