விரில் என்ற அற்புத சக்தியூட்டும் ஆதாரம்- மிஸ்டர் ரோனி - அறிவியல் பேச்சு
அறிவியல் பேச்சு
மிஸ்டர் ரோனி
விரில் என்றால் என்ன?
எழுத்தாளர் எட்வர்ட் புல்வர் லைட்டன் என்பவர் எழுதிய நாவலில் இடம்பெற்ற மர்ம ஆற்றல் ஆதாரத்தின் பெயர்தான் விரில்.
தி கமிங் ரேஸ் என்ற நாவலில் சூழலில் உள்ள மின்காந்த சக்தியைப் பயன்படுத்தி வலிமையான ஆயுதம் ஒன்றை தயாரிக்க நினைப்பார்கள். அப்படியான மர்ம ஆற்றல் ஆதாரமே விரில். இப்படி எழுதிய எழுத்தின் பின்னால் எந்த அறிவியலும் கிடையாது. ஆனால் எழுத்தாளரின் கற்பனையை வைத்து நிறைய வேதிப்பொருட்களை இஷ்டப்படி கலந்து தயாரித்து சந்தையில் விற்றார்கள். அவை உடலுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தின. இப்போதைக்கு சந்தையில் போவ்ரில் என்ற பொருள் சந்தையில் கிடைக்கிறது. இறைச்சியிலிருந்து பெறப்படும் பொருள் இது. 1870ஆம் ஆண்டு தொடங்கி போவ்ரில் விற்பனையாகி வருகிறது. தொடக்க காலத்தில் இதன் பெயர் ஜான்ஸ்டன் ஃப்ளூய்ட் பீஃப்.
குழம்பில் வாசனைக்காக சேர்த்தனர். வெந்நீரைக் கலந்து சூடான பானமாக குடித்திருக்கிறார்கள். இப்படி பல்வேறு பயன்பாடு கொண்ட இறைச்சி உணவு போவ்ரில்.
வார்டென் கிளிப் என்றால் என்ன?
நிக்கோலா டெஸ்லா, வார்டென் கிளிப் என்ற இடத்தில்தான் வயர்கள் இல்லாமல் ஆற்றலை காற்றில் செலுத்தும் ஆராய்ச்சியை செய்து வந்தார். கம்பியற்ற ஆற்றல் செலுத்தும் முறையின் சோதனையிடம்தான் வார்டென் கிளிப். இச்சோதனை எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை.
செர்பியாவை பூர்விகமாக கொண்டு அமெரிக்காவில் பல்வேறு கண்டுபிடிப்புகளை செய்தவர் டெஸ்லா. எடிசனின் ஆய்வகத்தில் பொறியாளராக வேலை செய்து உருவாக்கிய கண்டுபிடிப்புகளை, உரிமையாளரான எடிசன் கைப்பற்றி விநியோகம் செய்து புகழும் பணமும் சம்பாதித்தார். இதனால் டெஸ்லாவிற்கு அறிவு இருந்தளவு பொருளாதார பலம் கிடைக்கவே இல்லை. 57 அடி உயரத்தில் கோபுரம் ஒன்றை அமைத்து அதன் வழியாக மின்சாரத்தை காற்றில் செலுத்தி உலகிலுள்ள யாரிடமும் தகவல் தொடர்பு கொள்ளமுடியும் என நம்பிக்கை கொண்டிருந்தார் டெஸ்லா. இந்த சோதனையில் ஜெனரேட்டர்கள் பயன்படுத்தப்பட்டன. மின்சாரம், செலுத்தப்பட்ட டவர்களைக் கடந்து அருகிலுள்ள வீடுகளின் உலோகங்களிலும் பாய்ந்தது. ஆய்வுக்கு நிதி உதவி செய்த ஜே பி மோர்கன், பின்னாளில் அதை கைவிட்டுவிட்டார். 1903ஆம் ஆண்டு சோதனை முழுமையாக நின்றுபோனது. ஆனால், அந்த சோதனை நடந்த கட்டிடம் அப்படியே உள்ளது. கோபுரம் நீக்கப்பட்டுவிட்டது.
வாழும்போது வெல்லமுடியவில்லை என்றாலும் இன்று டெஸ்லா பெயரை எலன் மஸ்க் உலகளவில் புகழ்பெறச் செய்துள்ளார். எடிசனின் நிறுவனம் ஜிஇ பன்னாட்டு நிறுவனமாக இயங்கி வருகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக