எந்த விளையாட்டில் வீரர்களுக்கு அதிக காயங்கள் ஏற்படுகின்றன?

 

 

 

 

 




 

 அறிவியலால் வெல்வோம்

மிஸ்டர் ரோனி

 

 

 எந்த விளையாட்டில் அதிகளவு காயங்கள் ஏற்படுகின்றன?

கால்பந்து, கூடைப்பந்து என இரு விளையாட்டுகளிலும் வீரர்கள் முழங்கால் வலி, காயங்களை அதிகளவு அடைகிறார்கள். இரண்டில் கால்பந்து முன்னிலை பெறுகிறது. அவசர உதவி தேவைப்படும் விளையாட்டு காயங்கள் என்றால் கூடைப்பந்து, சைக்கிள் ஆகிய விளையாட்டு போட்டிகள் பட்டியலில் முன்னிலையில் உள்ளன. இதற்கடுத்து மூன்றாவது இடத்தில் கால்பந்து உள்ளது. பேஸ்பால் விளையாட்டைப் பொறுத்தவரை 5 முதல் 14 வயதிலான சிறுவர்கள் காயமுற்று இறந்துபோவதே உண்டு.

கதிர்வீச்சால் மனிதர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்?

இயற்கையாக பல்வேறு பொருட்களில் இருந்து கதிர்வீச்சு வெளியாகிறது. அதெல்லாம் மனிதர்களின் திசுக்களை அழிக்கும் அளவுக்கு வலிமையானதில்லை. ஆனால், மனிதர்கள் உருவாக்கிய அணு உலைகளில் பயன்படுத்தும் யுரேனியம், புளுட்டோனியம் போன்றவை மனிதர்களின் மரபணுக்களை பாதித்து அதை மாற்ற முயல்கின்றன. இதனால் மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்பட்டு மரணத்தை சந்திக்கிறார்கள். இந்தியா போன்ற கல்வி அறிவு குறைந்த மூடநம்பிக்கை உள்ள நாட்டில் அணு உலைகள் முழுமையாக பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கட்டப்படுவதில்லை. இதனால், விபத்து ஏற்படும்போது மக்கள் எளிதாக பலியாகிறார்கள். அண்மையில் கூட எண்ணூரில் கோரமண்டல் உர தொழிற்சாலையில் அம்மோனியா கசிவு ஏற்பட்டு கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர். இதைபற்றிய விழிப்புணர்வு போராட்டங்கள் ஏதும் நடத்தப்பட்டதா, மக்களுக்கு மருத்துவ உதவிகள் கிடைத்ததா என்றால் இல்லை என்பதே பதிலாக இருக்கும்.




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்