இயற்கை பேரிடர்களிலிருந்து இந்திய அரசு எந்த பாடங்களையும் கற்கவில்லை! - அமிதவ் கோஷ்

 

 

 

 

 


 


அமிதவ் கோஷ், எழுத்தாளர்
காலநிலை மாற்றம் பற்றிய அக்கறைக்காக எராஸ்மஸ் பரிசை நடப்பு ஆண்டில் பெற்றிருக்கிறார்.

வயநாடு நிலச்சரிவு விவகாரத்தில் நாம் கற்கவேண்டியது என்ன?

வயநாடு மட்டுமல்ல இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இதுபோல பேரிடர் சம்பவங்கள் நடக்கலாம். சாலைகள் அமைப்பது, காடுகளை அழிப்பது, மணல் குவாரி, கல் குவாரி, முறையற்ற கட்டுமானங்கள் என இதில் நிறைய ஆதாரப் பிரச்னைகள் உள்ளன.

மலைப்பாங்கான பகுதிகளில் நிலச்சரிவு, மேக உடைப்பு பிரச்னைகள் அதிகம் நேரும். டெல்லியில் ஏற்பட்ட அதீத வெள்ளத்தால் மூன்று மாணவர்கள் இறந்துபோனதை நாம் மறந்துவிடக்கூடாது.அந்த மாணவர்கள் பயிற்சி மையத்தின் கீழ்த்தளத்தில் வெள்ளநீரில் சிக்கி இறந்துபோனார்கள். புதிதாக கட்டப்பட்ட நாடாளுமன்றத்திலும் வெள்ளம் புகுந்துவிட்டது. இதற்கு காரணம், நாம் சூழலைப் பற்றி கவலைப்படாமல் கட்டிடங்களை வடிவமைத்து வருவதுதான். இதெல்லாம் நாட்டில் என்னென்ன எப்படிப்பட்ட வி்ஷயங்கள் நடந்து வருகின்றன என்பதைக் குறியீடாக காட்டும் சமாச்சாரங்கள்தான்.

கோவாவைப் போலவே பிற மாநிலங்களுக்கும் அச்சுறுத்தல் உருவாகி வருகிறதா?

2011ஆம் ஆண்டு மேற்கு தொடர்ச்சி மலை பற்றிய சூழலியல் அறிக்கையை ஆராய்ச்சியாளர் மாதவ் காட்கில் வெளியிட்டார். அதில், வயநாட்டில் ஆக்கிரமிப்புகள், கட்டுமானங்கள், சாலை பணிகள் நிலப்பரப்பிற்கு ஊறு விளைவிக்கின்றன என்பதை முன்கூட்டியே கூறியிருந்தனர். ஆனால் அரசு, அதிலுள்ள எந்த பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்தாமல் புறக்கணித்தது. நடந்த சம்பவங்களிலிருந்து நாம் இன்றுவரை எந்த பாடத்தையும் கற்கவேயில்லை. கோவாவில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளை மேம்படுத்த வேண்டிய பகுதிகளாக பாஜக அரசு மாற்றி வருவதை வீடியோவில் கிளாட் ஆல்வாரிஸ் குறிப்பிட்டிருந்தார். வயநாட்டிற்காக வருந்தி வருகிறோம். ஆனால் கோவாவிற்காகவும் கவலைப்படவேண்டும் என்று கூறியிருந்தார். அப்படி அதீத மழை பெய்வதற்கான வாய்ப்பும், வெள்ள அபாயமும் அங்கு ஏற்படும் அபாயம் உள்ளது.

வெள்ளம், நிலச்சரிவை முன்னரே கண்டறிந்து அறிவிக்கும் அமைப்பை உருவாக்குவதில் இந்தியா பின்தங்கி விட்டதா?
வெள்ளம், நிலச்சரிவை முன்னரே அறிவிக்கும் துறை இருப்பது அவசியம். ஆனால் நடப்பில் ஆட்சியில் உள்ள அரசு, தவறான திசையில் சென்று வருகிறது. விவசாயிகளுக்கு தட்பவெப்பநிலை தகவல்களை அளிக்கும் பிரிவுகள் நாடெங்கும் இயங்கி வந்தன. 199 மாவட்டங்களிலுள்ள இந்த அரசு பிரிவுகள், நடப்பு ஆண்டில் மூடப்பட்டுவிட்டன. இப்பிரிவுகள் தனியாருக்கு வழங்கப்படவிருக்கின்றன. கட்டுமான துறையை கட்டற்று இயங்க அனுமதித்துவிட்டு, மக்களுக்கு உதவும் அரசின் ஆலோசனை மையங்களையும் மூடி வருகின்றனர். நவீன தாராளமய அரசின் கொள்கை இப்படித்தான் பெருநிறுவனங்களின் லாபத்திற்கென இயங்குகிறது.
தட்பவெப்பநிலை அறிவிப்பு கிடைப்பதால் மட்டுமே, ஊழல் செறிந்த, சீரற்று இயங்கும் அரசு எந்திரம் முன்னேற்றம் அடைந்துவிடாது. நடந்த இயற்கை பேரிடர் சம்பவங்கள் அனைத்துமே மனிதர்களால் ஏற்பட்டவைதான்.

ஒன்றிய அரசின் அணுகுமுறை, காலநிலை மாற்றத்திற்கு உதவியாக உள்ளதா?

காலநிலை மாற்றம் சர்வதேச அளவிலான பிரச்னை. அதன் விளைவுகள் உள்ளூர் தன்மை கொண்டவை. தட்பவெப்பநிலை சார்ந்து குறிப்பிட்ட இடத்தில் மழை வெள்ள பாதிப்பு என தகவல் கூறுகிறார்கள் எனில், ஏற்படும் பாதிப்பை எங்கெங்கு எப்படியான நிலைமை என உள்ளூர்காரர்கள்தான் கூற முடியும். இப்படியான தகவல் அறிவு கொண்டவர்களை, அரசு எந்திரம் புறக்கணித்துவிட்டு இயங்கி வருகிறது.

சூழலியல் பிரச்னை கொண்ட இடங்களில் சுற்றுலா பயணிகளும் ஆபத்தை அதிகரித்து வருகிறார்கள். அவர்களுக்கு கட்டுப்பாட்டு நெறிகள் அவசியமா?

நிச்சயமாக. மலைப்பகுதி சுற்றுலா தளங்களில் சுற்றுலா வருபவர்களுக்கு சில கட்டுப்பாட்டு நெறிகளை விதிப்பது அவசியம். ஒன்றிய அரசு சுற்றுலா பயணிகளை ஊக்குவித்து சூழலியல் அபாயம் உள்ள இடங்களுக்கு அனுப்பி வைத்து வருகிறது. சில பகுதிகளுக்கு நான்கு வழிப்பாதைகளை அமைக்கிறது. இத்தகைய திட்டங்கள் எல்லாமே உள்ளூரில் அங்கு வாழும் மக்களின் வாழ்வை அழிக்கக்கூடியன.

வங்காள விரிகுடாவின் கடல் நீரில், உணவில் பயன்படுத்தும் உப்பில் கூட மைக்ரோபிளாஸ்டிக் உள்ளது பற்றி  என்ன நினைக்கிறீர்கள்.

கடல் மட்டுமல்ல பல்வேறு இடங்களில் மைக்ரோபிளாஸ்டிக் கிடைத்து வருகிறது. இமாலயத்தில் கூட பிளாஸ்டிக்குகள் வந்துவிட்டன. அவை மனிதர்களின் உடல்நலனை பாதிக்கின்றன. நெகிழ்வுத்தன்மை, உழைக்கும் இயல்பு பிளாஸ்டிக்கிற்கு உண்டு எனவே அவற்றை பல்வேறு இடங்களில் பார்க்கலாம்.  இப்போது உணவுப்பொருட்களிலும் கலக்கத் தொடங்கிவிட்டது.

டைம்ஸ் ஆப் இந்தியா

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்