குரங்கம்மை தொற்று!

 

 

 


 


எம்பாக்ஸ் - குரங்கம்மை

ஆப்பிரிக்காவில் மக்களைத் தாக்கி கொன்று கொண்டிருந்த எம்பாக்ஸ் இப்போது வெளிநாடுகளுக்கும் பரவ தொடங்கிவிட்டது. ஸ்வீடன், பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலும் எம்பாக்ஸ் நோயாளிகள் அறியப்பட்டுள்ளனர். கண்டறியப்பட்ட நோயாளிகள் இருவருமே ஆப்பிரிக்கா, வளைகுடா நாடுகளிலிருந்து வந்தவர்கள் என மருத்துவர்கள் தகவல்களை அறியத் தருகிறார்கள்.

1958ஆம் ஆண்டு குரங்குகளிடம் கண்டறியப்பட்ட அம்மை நோய் இது. டென்மார்க் நாட்டில் நடந்த ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டது. குரங்கம்மை என்று கூறுவதில் இனம் சார்ந்த சிக்கல் எழ உலக சுகாதார அமைப்பு, மங்கி பாக்ஸ் என்பதை எம்பாக்ஸ் என அழைக்கலாம் என்று கூறியது. 1970ஆம் ஆண்டு, பத்து வயது சிறுவனுக்கு குரங்கம்மை தாக்கியது. அந்த சிறுவன் காங்கோ நாட்டை பூர்விகமாக கொண்டவன்.

முன்னெச்சரிக்கை

குரங்கம்மை தாக்குதல் கொண்ட நாடுகளுக்கு செல்பவர்கள் தனிப்பட்ட சுகாதாரத்தில் கவனமாக இருக்கவேண்டும். இறைச்சி உணவுகளைத் தவிர்க்கவேண்டும். நோய் பாதிக்கப்பட்டவர்களையும் விலங்குகளையும் பார்த்த உடனே பதறி விலகி இருக்கவேண்டும். காய்ச்சல், தோலில் அழற்சி இருந்தால் உடனே மருத்துவரை அழைத்து சோதித்துக்கொள்ள வேண்டும். இருபத்தி ஒரு நாட்கள் தவணை உண்டு. அதற்குள் நோயை உறுதி செய்யவேண்டும்.

குரங்கம்மையை தடுக்க மூன்று தடுப்பூசிகள் உள்ளன. இவற்றைக்கூட அனைத்து மக்களும் போட்டுக்கொள்ளவேண்டும் என உலக சுகாதார அமைப்பு கூறவில்லை. நோய் எளிதாக தொற்றும் ஆபத்திலுள்ளவர்கள் மட்டும் அவசியம் போட்டுக்கொள்ளவேண்டும். எம்விஏ-பிஎன், எல்சி16, ஆர்த்தோபாக்ஸ்வேக் ஆகியவைதான் மூன்று தடுப்பூசிகள். சின்னம்மைக்கு பயன்படுத்தும் டெக்கோவைரிமேட் என்ற தடுப்பூசியை ஒருவர் குரங்கம்மைக்கு பயன்படுத்தலாம். ஆனால், அரிதான முறையில்தான் மட்டுமே.

கோவிட் எப்படி பரவியதோ அதை விட மெதுவாகவே குரங்கம்மை பரவி உயிர்க்கொல்லியாக மாறுகிறது. தோல்வழியாக, எச்சில் மூலமாக பரவுகிறது. எனவே, நோய் வந்தவருடன் நேரடியான, நெருக்கமான தொடர்புகளை தவிர்க்கவேண்டும். இல்லையெனில் குரங்கம்மை தொற்றிவிடும்.

நோய் தொடங்கிய ஆப்பிரிக்க கண்டத்தில்தான் அதிக சாவுகள் நடந்துள்ளன. புருண்டி, கென்யா, ருவாண்டா, உகாண்டா ஆகிய நாடுகளில் குரங்கம்மை பாதிக்கப்பட்டு அதிகம் சிறுவர்கள் இறந்துள்ளனர். இருபத்து ஏழாயிரம் பேர் பாதிக்கப்பட்டால், அதில் ஆயிரத்து நூறுபேர் இறந்துவிட்டனர். கடந்த ஆண்டு காங்கோவில் பதினைந்தாயிரத்து அறுநூற்று நாற்பத்து நான்கு பேர் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டு ஐநூற்று நாற்பத்து எட்டு பேர் இறந்துபோனார்கள்.

இப்போது பல்வேறு நாடுகளிலும் பரவி வரும் குரங்கம்மை நோயின் வர்ஷன் கிளாட் ஐபி. இந்நோ் பெரும்பாலும் பாலுறவு வழியாகவே பிறருக்கு அதிகம் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு தகவல் கூறியிருக்கிறது. இந்தியாவில் இருபத்தேழு பேர் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டு ஒருவர் இறந்துபோயுள்ளார். நூற்று பதினாறு நாடுகளில் பரவி, இருநூறு பேர் மரணத்தை சந்தித்துள்ளனர்.

டைம்ஸ் ஆப் இந்தியா

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்