இடுகைகள்

உலகம்- ஈரான்- அமெரிக்கா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கடல் தடத்தை மூடுகிறதா ஈரான்?

படம்
கடல்தடத்தை மூடும் ஈரான் ! அமெரிக்கா அணுஆயுத ஒப்பந்தத்திலிருந்து விலக முடிவு செய்துள்ளதையடுத்த தனது ஆதிக்கத்திற்கு உட்பட்ட ஹோர்முஷ் கடல்வழியை மூடப்போவதாக ஈரான் அதிபர் ஹசன் ருகானி அறிவித்துள்ளார் . ஈரான் , ஈராக் , குவைத் , பஹ்ரைன் , கத்தார் , சவுதி அரேபியா , ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளின் கச்சா எண்ணெய் வணிகம் முழுக்க 21 கி . மீ நீளம் கொண்ட இந்த ஹோர்முஷ் கடல்வழியை நம்பியே நடைபெற்று வருகிறது . உலகில் நடைபெறும் மொத்த வணிகத்தில் 30 சதவிகிதம் இப்பாதையைப் பயன்படுத்தி நடைபெறுகிறது . 1980 ஆம் ஆண்டு ஈரான் - ஈராக் போர் ஏற்பட்டபோது இப்பாதையில் செல்வது மிகவும் ஆபத்தானதாக மாறியது . குவைத் போக்குவரத்து அமெரிக்காவின் கப்பல்வழியே நடைபெற்றதோடு , காப்பீட்டு கட்டணம் உயர பெட்ரோல் டீசல் விலைகளை உலகெங்கும் உயர்ந்தன . அரேபிய நாடுகளை இந்தியாவுடன் இணைக்கும் வழித்தடம் இது . ஈரான் வழித்தடத்தை தன் சிறியரக ஏவுகணைகளால் தாக்கி சேதம் ஏற்படுத்தி கப்பல்களை நிறுத்தி வைக்கும் வாய்ப்பு உள்ளது . தைரியமாக இதனை ஈரான் செய்யுமா என்பதைத்தான் அரசியல் விமர்சகர்கள் கவனித்துக்கொண்டிருக்கின்றனர் .