இடுகைகள்

பருத்தி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெண்களுக்கான எளிமையான இயற்கை இழைகளைக் கொண்ட துணிகளே லட்சியம்! - இந்து ஸ்ரீவஸ்தவா

படம்
  இந்து ஸ்ரீவஸ்தவா ஃபீல்குட் எனும் நிறுவனம் மூலம் கைகளால் நெய்யும் இழைகளைக் கொண்ட துணிகளை தயாரிக்கிறார் இந்து.  பெண்களின் அலமாரியில் 50 சதவீத உடைகளை கைகளால் நெய்த துணிகளாக மாற்றவேண்டும் என்பதே இந்துவின் லட்சியம்.  பிறருக்கு உதவவே தொழிலை தொடங்கினீர்களா என்ன? என்னுடைய மகள் தன்னுடைய உடை பற்றி எப்போதும் குறை சொல்லிக்கொண்டே இருப்பாள்.  வேலை செய்யும் இடம், குடும்ப நிகழ்ச்சிகள் என அவள் அணியும் ஆடைகள் அனைத்தின் மீதும் இப்படி புகார்களை குவித்தாள். மகள் என்பதால் புகார்களை எளிதாக புரிந்துகொள்ள முடிந்தது. பொதுவாகவே நிறைய பெண்களுக்கு தங்கள் உடைமீது குறைகள், புகார்கள் உண்டு. அப்போது இந்திய ஜவுளித்துறை பற்றிய நூலொன்றை படித்தேன். அப்போதுதான் துணிகளில் பிரச்னை இல்லை. அதை நெய்யும் இழைகள் இயற்கையானவையாக இருக்கவேண்டும் என முடிவு செய்தேன். அதை மனதில் வைத்துக்கொண்டுதான் இந்துவை தொடங்கினேன். தொன்மைக்காலத்தில் மக்கள் தங்கள் பகுதியில் என்ன கிடைக்கிறதோ அதைத்தான் வாங்கி உடுத்துவார்கள். நான் தொடக்கத்தில் எனது மகளுக்காகவே உடைகளை வடிவமைத்தேன். அவை எளிமையான அழகுடையவை.  உங்களுடைய ரோல்மாடல் யார்? எனக்கு கோகோ சேனல் என்

பருத்தி விவசாயின் தற்கொலை வழியாக விவசாயிகளின் வாழ்க்கைப் போராட்டப் பார்வை! - நூல் அறிமுகம்

படம்
  நூல்கள் அறிமுகம் ராம்ராவ் ஜெய்தீப் ஹர்டிகர் ஹார்பர் கோலின்ஸ் 2014ஆம் ஆண்டு ராம்ராவ் பான்செல்னிவர் என்ற விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். பூச்சிக்கொல்லியை குடித்து இறந்துபோன இவர்தான், விவசாயிகளின் தற்கொலையை தொடங்கி வைத்த பெருமையைக் கொண்டவர். அன்றிலிருந்து இன்றுவரை 30 நிமிடங்களுக்கு ஒரு விவசாயி தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.  கடந்த இருபது ஆண்டுகளில் 60 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள்.  எழுத்தாளர் ஜெய்தீப், ராம்ராவ் வாழ்க்கை வழியாக விவசாயிகளின் வாழ்க்கை இந்தியாவில் எப்படி இருக்கிறது என்பதை விளக்குகிறார்.  ஆர்ட் சினிமா அண்ட் இந்தியாஸ் பார்காட்டன் ஃபியூச்சர் ரோச்சனா மஜூம்தார் கொலம்பியா யுனிவர்சிட்டி பிரஸ் இந்தியா சுதந்திரம் பெற்றபிறகு சினிமா உலகம் எப்படி வளர்ந்தது, கலைப்படங்களுக்கான இடம், வணிக படங்களின் சந்தை, சத்ய ஜித்ரே, மிருணாள் சென், ரித்விக் கடக் ஆகிய இயக்குநர்களின் பங்களிப்பு பற்றி நூல் பேசுகிறது.  தி மிட் வே பேட்டில்  கௌதம் சிந்தாமணி ப்ளூம்ஸ்பரி 2019ஆம் ஆண்டில் மோடி மீண்டும் பிரதமரானார்.  முதல் முறை ஆட்சியில் தயங்கியவற்றை இந்த முறை பெரும்பான்மை உதவ