இடுகைகள்

இயற்கை- சுற்றுச்சூழல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சூழல் மாசுபாடுகளால் புயல்களின் வலிமை அதிகரித்து வருகின்றன! - வானியலாளர் ரகு முர்டுகுடே

படம்
கடல் வெப்பமாவதால் புயல்கள் வலிமையாகின்றன ரகு முர்டுகுடே, தட்பவெப்பநிலை வானியலாளர்(மேரிலேண்ட் பல்கலைக்கழகம்) வரலாற்றுரீதியாக புயல்கள் அரபிக்கடலில்தான் உருவாகி வந்துள்ளன. வங்காள விரிகுடாவில் புயல்கள் அதிகம் உருவாகி வரவில்லை. இப்போது இதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? பருவகாலத்திற்கு முன்னர் நீங்கள் கூறியபடி வங்காள விரிகுடா, அரபிக்கடல்களில் புயல்கள் உருவாகின்றன. நவம்பரில் வங்காள விரிகுடாவில் மட்டும் 80   சதவீத புயல்கள் உருவாகின்றன. அரபிக்கடலில் உருவாகும் புயல்கள் சற்று குழப்பமானவை. நம்மிடம் ஆழமான தகவல்கள் இல்லை என்றாலும் மாசுபாடு, அரபிக்கடலில் ஏற்படும் புயல்களை தீவிரப்படுத்துவதாக தோன்றுகிறது. இந்தியா புயல்களிலிருந்து எப்படி தப்பி பிழைப்பது? பொதுவாக, பேரிடர் மேலாண்மைகளில் கவனம் செலுத்துவது அவசியம். இந்திய தட்பவெப்பநிலை நிறுவனத்தின் கருத்துகளை காதுகொடுத்து கேட்பது அவசியம். நகரத்திலுள்ள கழிவுநீர் அமைப்புகளை சீர்படுத்துவது முக்கியம. மாங்குரோவ் காடுகள் அழிவு, நகரிலுள்ள மரங்கள் தீவிரமாக அழிக்கப்படுவது அனைத்தும் புயல்கள் தீவிரமடைவதை ஊக்குவிக்கின்றன. அதற்கு முன்னரே அதனைத் தவிர்க்கும், பாதிப்ப

உடை, உணவு, வாழ்க்கை என அனைத்திலும் மிதமிஞ்சிய போக்கு ஆபத்தானது! - வந்தனா சிவா

படம்
  பூமியும் மக்களின் நுகர்வும்! இன்று ஆடைகளை அணியும் நாகரிகம் என்பது வேகமாகிவிட்டது. இதனால் ஆடைகள் உடுத்தும்படியாகவே இருந்தாலும் கூட காலத்திற்கேற்ப இல்லை என்று சொல்லி நிறைய ஆடைகளை மக்கள் வாங்கிவருகின்றனர். சிறப்பங்காடிகளும் உடைகளின் விலையை தள்ளுபடி விலையில் விற்றுத்தீர்க்க அவசரம் காட்டுகின்றன. இதன் விளைவாக, ஏராளமான துணிகள் அதன் பயன்பாடு முடிவற்கு முன்னரே நிலத்தில் குப்பையாக சேர்கின்றன. இதற்கடுத்து தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் உணவுபற்றி பார்ப்போம். அடிப்படையில் ஒரு யூனிட் அளவுக்கு நாம் இயற்கை ஆதாரங்களைப் பயன்படுத்தினால் பத்துமடங்கு ஆற்றலை இந்த உணவுகள் தரவேண்டும். தொழிற்சாலைகள் மூலமாக தயாரிக்கப்படும் உணவுவகைகள் பத்து யூனிட் அளவுக்கான இயற்கை ஆதாரங்களையும் சக்தியையும் பயன்படுத்துகின்றனர. பதிலாக எந்த ஊட்டச்சத்துக்களும் இல்லாத உணவை உருவாக்குகின்றன. இவற்றை நாம் போலி உணவு என்று கூறலாம். பொதுமுடக்க காலம் நமக்கு அவசியமான விஷயங்களை வாங்குவது பற்றிய கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்குலகில் உள்ள ஒருமுறை பயன்படுத்தி எறியும் கலாசாரம் இந்தியாவுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். இது சூழலுக்கும், பூமி

இயற்கையை சீரழிக்கும் நுகர்வு கலாசாரம்! - சூழல் பாதிப்புகள்

படம்
நாம் கவனத்துடன் இருக்கிறோமா? ஒரு ஜோடி ஜீன்ஸ் பேண்டை தயாரிக்க 7,500 லிட்டர்கள் தண்ணீர் செலவாகிறது. இந்த நீரை வைத்து மனிதர்கள் ஏழு ஆண்டுகள் உயிர்வாழ முடியும். உலகில் ஒரு நொடிக்கு ஒரு லாரி நிறைய துணிகள் குப்பைகளாக கொட்டப்படுகின்றன. 85 சதவீத ஜவுளி நிறுவனங்கள் இந்த குப்பைகளை உருவாக்குகின்றன. நாம் பயன்படுத்தும் பாலீஸ்டர் உடைகள் மூலமாக 35 சதவீத பிளாஸ்டிக்குகள் பூமியில் கழிவாகத் தேங்குகின்றன. இவற்றை மண்ணால் மட்கச்செய்ய முடியாது. அதிவேக நாகரிகத்தின் விளைவாக இந்த பிளாஸ்டிக்குகள் கடலிலும் கலந்து வருகின்றன. ஜவுளித்துறை மூலமாக ஆண்டுதோறும் பத்து சதவீத கார்பன் வாயுக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த அளவு 2000 ஆவது ஆண்டைவிட 2014-2015இல் அதிகரித்துள்ளது. மூன்று கிலோ உணவு தேவையின்றி கழிவாக வெளியே கொட்டப்பட்டால் 23 கிலோ கார்பன் வாயுக்களை சூழலில் உருவாக்குகிறது. உலகில் மூன்றில் ஒரு பங்கு உணவு அல்லது 30 சதவீத உணவு கழிவாக குப்பையில் கொட்டப்படுகிறது. வீணாக்கப்படும் உணவுகளால் 8 சதவீத பசுமை இல்ல வாயுக்கள் உருவாகின்றன. நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா 

காடுகளின் வளத்திற்கும், பாதுகாப்பிற்கும் எறும்புகள் அவசியம்! -

படம்
மனிதர்களுக்கு எறும்புகள் அவசியத்தேவை! ஆராய்ச்சியாளர் கோரி மொரியு ஆங்கிலத்தில்: ஸ்ரீஜனா மித்ரா தாஸ் நன்றி: டைம்ஸ் எவோக் வெப்பமயமாதல் எறும்புகளின் இனப்பெருக்கத்தையும் பாதிக்கிறதா? சாதாரண மனிதர்கள் எறும்புகளை எப்படி பாதுகாப்பது? வெப்பமயமாதல் பாதிப்பு, மனிதர்கள் எறும்புகளின் புற்றை இடிப்பது ஆகிய காரணங்களால் எறும்புகளும் உலகில் மெல்ல அருகி வருகின்றன. தாவரங்கள், பூஞ்சைகள், நுண்ணுயிரிகள் ஆகியவையும் இந்த செயல்முறையில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. காடுகளைக் காப்பதிலும் அதனை வளமுறச்செய்வதிலும் எறும்புகள் முக்கியப்பங்காற்றுகின்றன. எறும்புகளுக்கு என தனித்த பழக்க வழக்கங்கள் குணங்கள் உண்டா? எறும்புகளில் 15, 000 வகைகள் உண்டு. இதில் சில எறும்புகள் பிற பூச்சிகளை வேட்டையாடி உண்ணும். சில வகை எறும்புகள் தாவரங்களின் சாற்றை உறிஞ்சிக் குடித்து வாழும். காலனியாக இவை வீடமைத்து வாழ்கின்றன. மைர்மெகாலஜி எனும் படிப்பு எறும்புகளைப் பற்றியது. சமூக விலங்காக வாழும் எறும்புகளைப் பற்றி படிக்க ஆர்வமிருந்தால் இப்படிப்பை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். மரங்களுக்கும் எறும்புகளுக்குமான உறவை விவரியுங்கள். மரங்களில்

சூழலியல் பிரச்னைகளால் தொழில் நடவடிக்கைகள் நிற்க கூடாது! சீட்ஸ் அமைப்பு

படம்
வணிகத்திற்கும், சூழலியலுக்குமான புரிந்துணர்வு முக்கியம். மனு குப்தா, அன்சு சர்மா இவர்கள் இருவரும் சீட்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார்கள். இந்த நிறுவனம் சூழல் சார்ந்த பேரிடர் சம்பவங்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. கடந்த இருபத்தாறு ஆண்டுகளாக சூழலியலுக்கும், மக்களின் வாழ்வாதாரத்திற்கும் உழைத்து வருகிறார்கள். அவர்களிடம் பேசினோம். இயற்கை சார்ந்த பேரிடர் சம்பவங்களில் அரசு, தனியார் நிறுவனங்கள், உங்களைப்ப் போன்ற சூழலியல் நிறுவனங்கள் ஆகியோரின் பங்கு என்ன? அரசு மற்றும் தனியார் துறைகளுக்கு இடையில் இடைவெளி உள்ளது. அதனை நிரப்ப எங்களைப் போன்ற சூழலியல் நிறுவனங்கள் உதவுகின்றன. ஒவ்வொரு முறையும் இயற்கை பேரிடர் சார்ந்த சம்பவங்கள் நடக்கும்போது நாங்கள் புதிய விஷயங்களைக் கற்று வருகிறோம். அரசு புதிய கொள்கைகளை வகுக்கும்போது தனியார் துறை அதற்கு உதவும்படி தொழில்நுட்பங்களை தந்து உதவ வேண்டும். இதனை மக்கள் சமூகம் ஏற்று உறுதிசெய்து தேவையான தகவல்களைத் தரவேண்டும். இதில் ஊடகம் முக்கியமான பங்கை வகிக்கிறது. இந்தியா தற்போது புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருகிறதா? பிற நாடுகளை விட

காமன்வெல்த் அமைப்பில் இந்தியாவின் பங்கு 50 சதவீதம் ஆகும்! - பேட்ரிசியா ஸ்காட்லாந்து , காமன்வெல்த் செயலாளர்

படம்
pixabay காமன்வெல்த் அமைப்பு தனது உறுப்பினர் நாடுகளில் வெப்பமயமாதலுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் பொதுச்செயலாளர் பேட்ரிசியா ஸ்காட்லாந்தை சந்தித்துப் பேசினோம். ஆங்கிலத்தில்: மன்கா பேஹ்ல் பெருந்தொற்று பாதிப்பு உலகமெங்கும் இருக்கிறது. இதற்கும் வெப்பமயமாதலுக்கும் தொடர்பு இருக்கிறதா? வெப்பமயமாதல் பாதிப்பு இப்போதும் இருக்கிறது. இப்போது திடீரென ஏற்பட்டுள்ள கோவிட் -19 பாதிப்பு மக்களின் இயல்பு வாழ்க்கையை மிக தீவிரமாக பாதித்துள்ளது. இந்த சூழ்நிலை தெற்காசியா, கரீபியன் பகுதிகளின் வாழ்நிலையை கடுமையாக பாதித்துள்ளது. பெருந்தொற்று பாதிப்பால் வெப்பமயமாதலுக்கான பல்வேறு எச்சரிக்கை நடவடிக்கைகளை எங்களால் எடுக்க முடியவில்லை. அனைத்து நாடுகளுக்கும் பொதுவான திட்டம் ஒன்றின் மூலம் பல்வேறு அம்சங்களை இணைக்க முயன்று வருகிறோம். வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவதில் காமன்வெல்த் அமைப்பின் பங்கு என்ன? காமன்வெல்த் அமைப்பில் தற்போது 54 நாடுகள் உள்ளன. மக்கள்தொகை 2.4 பில்லியன். அறுபது சதவீதத்திற்கும் மேற்பட்டோர் முப்பது வயதிற்கும் உட்பட்டோர். 32 நாடுகள் சிறிய நாடுகள் என்றும், அதில் 24 தீவு

ஐரோப்பாவின் நாசவேலை!

படம்
ஐரோப்பா செய்யும் நாசவேலை ! கம்ப்யூட்டர்கள் , டேப்லட்கள் , ஸ்மார்ட்போன்கள் என பழைய பொருட்கள் அனைத்தையும் ஐரோப்பா ( ரஷ்யா உட்பட ) நைஜீரியா நாட்டில் கொட்டப்பட்டு வருகின்றன . ஓராண்டுக்கு 12.3 டன்கள் எலக்ட்ரானிக் குப்பைகள் ஐரோப்பிய நாடுகளில் ஆண்டுதோறும் உருவாகின்றன . இதில் 60 ஆயிரம் டன் இ - குப்பைகள் நைஜீரியாவில் கொட்டப்பட்டுள்ளது என்பதை அமெரிக்காவின் சுற்றுச்சூழல் ஏஜன்சி மற்றும் ஜெர்மனியின் வளர்ச்சி மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்பு அமைச்சகம் இணைந்து செய்த ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது . இக்கழிவுகளில் 77 சதவிகிதம் ஐரோப்பாவிலிருந்தும் மீதி அமெரிக்கா , சீனாவிலிருந்தும் வருகிறது . அமெரிக்கா ஒரு ட்ரில்லியன் டாலர்கள் மதிப்புக்கு எலக்ட்ரானிக் பொருட்களை அதி நுகர்வு செய்யும் தேசமாக முதலிடத்திலும் அடுத்த இடத்தில் ஐரோப்பாவும் உள்ளது . இ - குப்பைகளில் மெர்க்குரி , காட்மியம் , லெட் ஆகிய நச்சுகள் சூழலுக்கு கேடு விளைவிப்பன என்றாலும் ஏழை நாடுகள் பலவற்றிலும் பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதிக்கு எதிரான தடுக்கும் வகையிலான கிடுக்குப்பிடி சட்டங்கள் கிடையாது . இக்கழிவுகளை இறக்குமதி செய்ய

பழங்குடிகளை அச்சுறுத்தும் அதிபர்!

படம்
பறிபோகும் பழங்குடிகளின் நிலம் ! அமேசான் பழங்குடி பெண்கள் தங்கள் பகுதியில் ஈகுவடார் அரசு செய்யும் ஆயில் உறிஞ்சும் பணியை நிறுத்த அதிபர் லெனின் மொரினோவை கேட்டுக்கொண்டுள்ளனர் . தொழில்துறையை நிறுத்த கேட்டுக்கொண்டதற்காக பாலியல் தொந்தரவு மற்றும் கொலைமிரட்டல்களை பெண்கள் சந்தித்துள்ளனர் . " அதிபரிடம் நாங்கள் எங்கள் கோரிக்கையை முன்வைத்திருக்கிறோம் . இரண்டு வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்கவில்லையெனில் நாங்கள் மீண்டும் போராட்டத்தைத் தொடங்குவோம் " என்கிறார் ஈகுவடார் பழங்குடி பெண்கள் ஃபெடரேஷனின் துணைத்தலைவரான ஸோய்லா காஸ்டிலோ . " எண்ணெய் மற்றும் சுரங்கம் இல்லாமல் உலகம் எப்படி இயங்கமுடியும் ?" என்று பதில் சொல்லியிருக்கிறார் அதிபர் மொரினோ . கடந்தாண்டு எண்ணெய் மற்றும் சுரங்கத்திற்கான ஏலத்தில் மொரினோ ஈடுபட்டதை எதிர்த்து மக்கள் அமேசானிலிருந்து கொய்டோ வரை பேரணி நடத்தினர் . அண்மையில் யாசுனி தேசியப்பூங்காவில் நடைபெறும் ஆயில் அகழ்ந்தெடுக்கும் பணிக்கு எதிராக ஈகுவடார் மக்கள் வாக்களித்தனர் .  தற்போது அரசு , போராட்டத்தை முன்னணியிலிருந்து நடத்தும் பெண்களுக்கு கொலைமிரட்