இடுகைகள்

குமார் சண்முகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நுரைத்து ததும்பும் மதுக்குவளையின் ஐஸ்கட்டி நீ!

படம்
  உன் விழிகளில் தேங்கிக் கிடக்கும் ப்ரியங்களின் மகரந்தம் இப்போதெல்லாம் தீண்டுவதே இல்லை என்னை… என்னை ஆற்றுப்படுத்தும் உன் வாஞ்சை மிக்க மொழிகள் மெல்ல மௌனத்தின் வெளியில் உலவிக் கொண்டு இருக்கின்றது. அன்பின் தாவரங்கள் மலர்ச்சியில் பெருகத் தொடங்கியிருந்தது. உன் கருணையினால்… நீ இன்றி அழுகிப் போகத் தொடங்கிவிட்டது செடிகளிலேயே மலர்கள் அழுகிய வாசனை மெல்ல மேலெழும்புகிறது 5.4 முன்னெப்போதோ நான் செய்த பாவத்திற்கு கிடைத்த தண்டனையாய் கருதிக்கொள்ளத்தான் வேண்டும்… ஒரு தேவதையைப் போல என்னோடு நீ வந்து இருந்து, நடந்து அற்புதம் புரிந்ததை இனி எப்போதும் நான் மறக்கவியலாது. ஆனால், நான்தான் சாத்தான் நான் உன்னை நுரைத்து ததும்பும் என் மதுக்குவளையின் ஐஸ்கட்டியாய் இட்டு வைத்தேன். மிக உயர்வானவைகள் எளிமையாகத்தான் இருக்குமென்பது எனக்கு புரியவில்லை இவ்வளவு நடந்தும்… கசப்புகள் மறந்து நான் உனக்காக காத்துக்கொண்டுதான் இருக்கிறேன் நீ மறுபடியும் என்னை மலர்த்துவாய் என்று… நினைவுகள் மீளவும் வழியற்ற பாதையில் நிறைந்து கிடக்கின்றன ப்ரியங்கள்….   தொகுப்பு அன்பரசு

வாசனையாக மாறியவளை முகரும் நாசி!

படம்
  பேருந்தில் ஏறும்போதே வாசனையின் தாழியில் வழிதவறி விழுந்தேன் மெல்ல மெல்ல நாசிகளில் நிரம்பிய வாசனை ஒரு பெண்ணின் உடலிலிருந்து என தோன்றியபோது.. நறுமணத்தில் மூழ்கத் தொடங்கியிருந்தேன்.   தீராத வாசனை திசையெங்கும் அலைக்கழித்தது திடீரென வாசனை வற்றிப்போனது மெதுவாக குறைந்த வாசனை நாசியைக் கூட அறியாமல் கடந்து போயிருந்தது அதிர்ச்சியுற்றவனாக கடந்த வாசனையின் வழிதேடி ஓடத் தொடங்கினேன். கூந்தல் அலைபாய ஒருத்தி மட்டும் முன்னே போய்க்கொண்டிருந்தாள். தீரா வாசனை அவளுடனே சென்று கொண்டிருந்தது முழுமையாக வாசனையாகவே மாறியிருந்தாள் நான் நாசியாக…  கவிதை- குமார் சண்முகம் படம்  - பிக்ஸாபே

நான் உணருகிற ஒரே வாசம்! - குமார் சண்முகம்

படம்
  முத்த வாசனை   - குமார் சண்முகம் கவிதைகள் உன்னை ஆவேசமாக முத்தமிட்டு திரும்புகிற போதெல்லாம் உன் மகத்தான வாசம் என் நாசியில் ஒட்டிக் கொள்கிறது   நீ   என்னை விட்டு பிரிந்து சென்று நெடுநேரமாகிய பிறகும் உன் வாசம் உன்னை   நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது.   என்னில் பிறிதொரு வாசம்   உணர வாய்ப்பதில்லை நான் உணருகிற ஒரே வாசம் உன்னுடையதுதான்…

கடிதம் எழுதி நீண்டநாட்களாகின்றன - வே.பாபு- குமார் சண்முகம் - கடிதங்கள்

படம்
  கடிதம் எழுதி நீண்ட நாட்களாகின்றன… குமார்- எப்படி இருக்கிறாய்? வனாந்தரத்தில் காணாமல் போன குயில் குரல் போல இருக்கிறது உன் பதிலின்மை… என்னவாயிற்று? ஏதாவது படித்தாயா? வேலைபளு அதிகமா? நான்   எதுவும் படிக்கவோ, எழுதவோ இல்லை. தக்கை நண்பர்கள் அனைவரும் நலம். தக்கையில் குறிப்பிடும்படியாக எதுவுமில்லை. வீட்டில் அனைவரும் நலமா? சிவராஜ் அவ்வப்போது தொடர்புகொண்டு பேசுகிறார். தொகுப்பு கூடிய விரைவில் கொண்டு வரலாமென்று இருக்கிறேன். கடிதம் எழுதி நீண்ட நாட்களாகின்றன.                                                                                           வே.பாபு சேலம் 25.03.2006 படம் - பின்டிரெஸ்ட்

மறந்துவிட்டாயா நண்பா? - கடிதங்கள்- குமார் சண்முகம்

படம்
  மறந்துவிட்டாயா நண்பா? 786 வள்ளியம்பாளையம் 31.3.2001 அன்புள்ள என் உயிர் நண்பன் குமாருக்கு, அப்பாஸ் எழுதுவது., நான் இங்கு நலமாக இருக்கிறேன். அதுபோல அங்குள்ள நலத்தை அறிய ஆவலாக உள்ளேன். விடுமுறையில் நீ என்னை மறந்து இருக்கலாம். ஆனால், என்னால் உன்னை மறக்க முடியவில்லை. நீ எங்கு வேலை செய்கிறாய் என்று குறிப்பிடவும்.   அப்படியே எனக்கும் ஒரு வேலை இருந்தால் பார்க்கவும் என்று சொல்லி இருந்தேனே? நீ என்னை மறந்துவிட்டாயா? நான் உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும். அதனால் இந்த வாரம் அல்லது அடுத்தவாரம் ஞாயிற்றுக்கிழமை   நீ என் வீட்டுக்கு வரவும். இடையில் மடல் வரையவும். மறந்திடாதே..நீ என்னை மறந்தாலும் நான் உன்னை மறவேன்.                                                                                            இப்படிக்கு.. எம் அப்பாஸ் படம் - பிக்சாபே