இடுகைகள்

வணிகம் - கார்லோஸ் கோசன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கார்லோஸ் கோசன்: சிதைந்த வணிக பிம்பம்!

படம்
சூப்பர் ஹீரோ, வில்லன் ஆன கதை! நிசான், மிட்சுபிஷி, ரினால்ட் மூன்று கார் நிறுவனங்களின் தலைவராக 2009 ஆம் ஆண்டு முதலாக வழிநடத்தி மார்க்கெட்டை மீட்டார் கார்லோஸ். 1954 ஆம் ஆண்டு பிரேசிலின் போர்ட்டோ வெல்கோ நகரில் பிறந்த கார்லோஸ் கோசன், தற்போது ஜப்பானின் டோக்கியோவில் நிதிமுறைகேடு புகாரில் கைதாகியுள்ளார். லெபனான், பிரேசில், பிரான்ஸ் நாட்டு குடியுரிமைகளை வைத்திருந்த தொழிலதிபரான கார்லோஸ், நிசான், ரினால்ட், மிச்சுபிஷி நிறுவனங்களை ஒன்றாக கூட்டணி போட வைத்து சந்தையில் வென்றவர். உலகின் மூன்றாவது பெரிய வாகன தயாரிப்பு நிறுவனம் என்பதோடு சந்தையில் பத்து சதவிகித பங்கையும் வைத்திருந்த ஜெகஜால பிஸினஸ்மேன். தற்போது நிசானின் நிதியை தனிப்பட்டமுறையில் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் டோக்கியோவில் கைதாகியுள்ளார் கார்லோஸ்.  இதில் அவருக்கு உதவியதாக நிசான் அமெரிக்க இயக்குநர் கிரெக் கெல்லியும் கிசுகிசுக்கப்படுகிறார். நிசான், மிட்சுபிஷி நிறுவனங்கள் கார்லோஸை இயக்குநர் பொறுப்பிலிருந்து நீக்க முடிவெடுத்தாலும் ரினால்ட் இதில் அதிகாரப்பூர்வமாக அவரை நீக்குவதாக அறிவிக்கவில்லை. கார்லோஸ் கோசனின