இடுகைகள்

தாஜ்மகால் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆன்மிக உள்ளொளி கொண்ட இந்தியா - நான் நேசிக்கும் இந்தியா - ஓஷோ

படம்
  நான் நேசிக்கும் இந்தியா - ஓஷோ படம் - பனுவல் நான் நேசிக்கும் இந்தியா ஓஷோ கண்ணதாசன் பதிப்பகம் ரூ.75 பொதுவாக இந்தியா பற்றி மேற்குல ஆராய்ச்சியாளர்கள் சுற்றுலா பயணிகள் மனதில் என்ன கருத்துகளைக் கொண்டிருக்கிறார்கள். அத்தகைய கருத்துகள் தவறு என்று கூறி அதற்கான பல்வேறு தகவல்களை ஓஷோ முன்வைத்து பேசியுள்ள நூல்தான் நான் நேசிக்கும் இந்தியா.  இந்தியாவை ஒருவர் எப்படி பார்ப்பது, புரிந்துகொள்வது என பல்வேறு விஷயங்களை  நூலில் எளிமையாக சொல்லிச் செல்கிறார். இதன் தன்மை நாம் ஊழல், ஒழுங்கின்மை, அழுக்கு என்று சொல்லும் தேசத்தின் அடிப்படை என்னவென்று புரிந்துகொள்ள உதவுகிறது.  இதில் நிறைய சிறு குறு கதைகள் உள்ளன. அவற்றில் சுவேதகேது பற்றிய கதை முக்கியமானது. கல்வி என்பது என்ன என்பதை இந்தியாவிலும் மேற்குலகிலும் வேறுமாதிரி பார்க்கின்றனர். எது கல்வி என்பதை அவர் குரு மூலம் கற்றுக்கொடுக்க முடியாத கல்வியை அறியும் இடம் அற்புதமானது.  இன்னொரு கதை பலரும் அறிந்ததுதான். அக்பரின் அவையில் இருந்த தான்சேன் என்ற இசைக்கலைஞரைப் பற்றியது. யாருடைய இசை உயர்ந்தது என்று பேசும்போது தான்சேன் எந்த ஆணவமுமில்லாமல், தனது குரு ஹரிதாசரின் இசைதான் உ

சிறுமூளை கொண்டவர்கள்தான் வரலாற்றை திருத்தி எழுத முயல்கிறார்கள்! - உ.பி. மகாராஷ்ர பாடநூல்கள் மாற்றம்

படம்
                 பாடத்திட்டங்களை மாற்றினால் உலகம் மாறிவிடுமா? நவீன கால இந்தியாவில் ஆட்சியாளர்கள் தம்மை சர்வாதிகாரிகளாக மாற்றிக்கொண்டு வருகிறார்கள். தாங்கள் மனதில் நினைப்பதை பிறருக்கும், எதிர்கால தலைமுறையினருக்கும் வரலாறாக்க நினைக்கிறார்கள். இதன் பொருட்டுதான் மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இஸ்லாமிய ஆட்சியாளர்கள் பற்றி பாடங்கள் பாடநூல்களிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் எதிர்கால மாணவர்களுக்கு பல்வேறு வரலாற்று தகவல்கள் மறைக்கப்படுகின்றன. அவர்கள் தொன்மை இந்தியாவில் என்ன நடந்தது என்று கூட தெரியாமலே படித்து பட்டம் பெறும் ஆபத்து உள்ளது. அரசியல்வாதிகள் தங்களை பிரபலப்படுத்தி, பிரமாண்டப்படுத்திக் காட்டுவதற்காக இதுபோன்ற பாடங்களை நீக்கி, வரலாற்றைத் தூய்மைப்படுத்தும் வேலைகளை செய்கிறார்கள். கடந்த மாதம் மகாராஷ்டிரா அரசு கல்வித்துறை, வரலாற்று நூல்களிலிருந்து இஸ்லாமிய மன்னர்களைப் பற்றிய செய்தியை நீக்கிவிட்டது. உத்தரப்பிரதேச அரசு இதே விஷயத்தை இப்போது செய்துவருகிறது. இப்படி இஸ்லாமிய மன்னர்களைப் பற்றி நீக்குவதால், இஸ்லாமியர்களுக்க் எந்த இகழ்ச்சியும் கிடையாது. வரலாற்றைப் படிப்

இந்த வாரத்தில் நடைபெறும் விழாக்கள்!

படம்
இந்த வார விழாக்கள்! தாஜ் மகோத்சவ் பிப்.18 – -27 உத்தரப் பிரதேசத்தின் ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழா. இந்தியக் கலாசாரம், கைவினைப் பொருட்கள், உணவுத் திருவிழா, ஒட்டகச் சவாரி என, பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. வெளிநாட்டினர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இலவசம். மாசாட்டு மாமங்கம் பிப்.20 கேரளத்தின் திரிச்சூர் மாவட்டத்தில் திருவானைக்காவு கோவிலில் நடைபெறும் விழா. ஐந்து நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், குதிரகோலம் எனும் குதிரை பொம்மைகளை உருவாக்கி பிரமிக்க வைக்கிறார்கள். மாலையில் இங்கு பாரம்பரிய யானைகளின் அணிவகுப்பு  முக்கிய அம்சமாகும். கஜூராகோ நடனத் திருவிழா  பிப்.20 – -26  1975ஆம் ஆண்டிலிருந்து கஜூராகோவிலுள்ள கோவில்களின்  பின்னணியில் நடைபெறும் நடனத் திருவிழா. மத்தியப் பிரதேசத்திலுள்ள கஜூராகோவின் விஸ்வநாத, சித்ரகுப்தா கோவில்களில் நடனங்கள் நடத்தப்படுகின்றன. அனுமதி இலவசம். மகா சிவராத்திரி பிப்.21 இந்தியாவிலுள்ள சிவபக்தர்கள் கொண்டாடும் விழா. சூரிய உதயத்தில் எழுந்து, விரதமிருந்து கங்கை ஆற்றில் குளித்துவிட்டு சிவனின் கோவில்களுக்குச் செல்வார்கள்.