இடுகைகள்

ஆராய்ச்சி. வைரஸ் வௌவால் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சீனாவிலிருந்து விடைகிடைக்காத கேள்விகள்! - கோவிட் -19 எங்கிருந்து பரவியது?

படம்
          கொரோனா பெருந்தொற்று தடுப்பூசி போட்டவர்களுக்கும் கூட கொரோனா வருகிறது என எழுத்தாளர் பா . ரா கூறிவிட்டார் . எனவே , நோய்த்தொற்று ஏற்பட்டாலும் கூட கவனமாக சிகிச்சை பெற்று உயிரைக் காப்பாற்றிக்கொள்ளவேண்டியதே முக்கியம் என்ற நிலையில் நாம் உள்ளோம் . . 2003 இல் ஏற்பட்ட சார்ஸ் பெருந்தொற்றை விட கோவிட் -19 பரவும் வேகம் அதிகமாக உள்ளது . மேலும் இதனால் ஏற்படும் அறிகுறிகளும் கடுமையானவைதான் . பா . ரா தனது சமூக வலைத்தள பதிவில் கூறியதில் முக்கியமானது , மருத்துவரே தடுப்பூசி போட்டாலும் கூட நோய்த்தொற்று ஏற்படும் என்பதை உறுதிப்படுத்தினார் என்பதைத்தான் . காரணம் , தற்போது செலுத்தப்படும் தடுப்பூசியை விட தற்போது மாறியுள்ள கொரோனா வைரஸின் தன்மை செயல்திறன் கொண்டதாக உள்ளது . இந்த வைரஸ் எங்கிருந்து பரவியது என்ற கேள்விக்கு இன்றளவும் யாரிடமும் பதில் கிடைக்கவில்லை . சீனாவிலிருந்து பரவியது என பலரும் முன்னர் கூறிக்கொண்டிருந்தனர் . ஆனால் உலக சுகாதார அமைப்பு , வூகான் வைரஸ் ஆய்வு மையத்தில் செய்த சோதனையில் அதற்கான வாய்ப்பு இல்லை என்று தெரிய வந்துள்ளது . ஆனால் வேறு எப்படி பரவியிருக்க முடியும் எ