இடுகைகள்

அடிமைத்தனம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒரு பொருளை புதியது போல காட்டி உண்ண, பருகத் தூண்டுவது எப்படி? - ஒளி, ஒலி காட்டும் மாயாஜாலம்

படம்
  போனைப் பயன்படுத்துவது, அதில் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்ப்பது எல்லாம் மிகவும் சகஜமான ஒன்று. இன்று நண்பர்களை விட ஆண்ட்ராய்ட் அல்லது ஆப்பிள் போன் மிகச்சிறந்த மோசடி செய்யாத நண்பனாக உடன் இருக்கிறது. போனில், கால்குலேட்டர், டார்ச் பல்வேறு ஆப்களை பயன்படுத்துவதோடு ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தவும் நிறைய சமாச்சாரங்கள் உண்டு. அமேஸானின் கிண்டில் ஆப் இருந்தால் அதன் மூலமே நிறைய மின்நூல்களை வாசிக்கலாம். ஓடிடிக்கு பணம் கட்டியிருந்தால் போனில் படம் பார்க்கலாம். டேட்டா இருந்தால் தேவையான வீடியோக்களை தரவிறக்கி கொள்ளலாம். ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி கற்றுக்கொண்டே இருக்க போன் உதவுகிறது. நண்பருக்காக காத்திருக்கும் நேரத்தில் கூட நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை. அந்தளவு தொழில்நுட்பம் நெகிழ்வாக மாறிவிட்டது. அதேசமயம், அதைப் பயன்படுத்தும் மனிதர்கள் இறுக்கமாக மாறிவிட்டார்கள். சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு சென்று உலாவுவது, பொருட்களை வாங்குவது, பிராண்ட் பொருட்களை கண் வைத்து வாங்குவது, வாங்கிக்கொண்டே இருப்பதை அடிமைத்தனம் என்று கூறலாம். ஆங்கிலத்தில் கண்ணியமாக ‘அடிக்‌ஷன்’ என்று சொல்கிறார்கள். பொதுவாக, தன்னைச் ச

இசட் டிரக்ஸ் - தூக்கமாத்திரைகளை ஒழுங்குமுறை செய்வதன் அவசியம் என்ன?

படம்
          இசட் டிரக்ஸ் தூக்கமின்மைக்கு மருத்துவர்கள் வழங்கும் மருந்துகளை இசட் டிரக்ஸ் என்று அழைக்கின்றனர் . ஸோல்பைடம் , ஸோபிகுளோன் , ஸால்ப்ளோன் ஆகிய மருந்துகள் ஆம்பியன் , இன்டர்மெஸோ , சோனாடா என்ற பெயரில் விற்கப்படுகின்றன . 1980 களில் இம்மருந்துகள் புகழ்பெறத்தொடங்கின . பென்ஸோடியாஸ்பைன்ஸ் போன்ற வகையில் இசட் மாத்திரைகள் வேலை செய்கின்றன . ஒருவகையில் உடலில் வேகமாக செயல்படும் திறன் கொண்டவை . தினசரி களைப்பை குறைத்து உற்சாகம் அளிக்கிறது . ஆனால் இம்மாத்திரை அடிமைத்தனம் ஏற்படுத்துவதில் குறைவான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்கின்றனர் . கோடைன் , பென்ஸோடயாஸ்பைன்ஸ் ஆகிய மருந்துகளைப் போலவே இவையும் பயன்படுத்துவர்களை மெல்ல அடிமையாக்கும் குணம் கொண்டவை . இந்த மருந்துகளை ஒருவர் குறைந்தகாலத்திற்கு மட்டுமே பரிந்துரைக்க வேண்டும் . அதாவது ஒருமாதம் என்ற கால அளவிற்கு . இன்சோம்னியா ஏற்படுவதற்கு மனநிலைக் கோளாறுகளான பிளவாளுமை , பிடிஎஸ்டி , மன அழுத்தம் ஆகியவையும் முக்கிய காரணம் . இம்மருந்துகளைப் பயன்படுத்தி பாதிப்பு ஏற்படுவது பற்றிய புரிதல் மருத்துவர்களுக்கு இல்லை என்கிறார் மருத்துவர்

ஸ்மார்ட்போனைக் கண்காணிப்போம். - சூப்பர் ஆப்ஸ்

படம்
அன்லாக் கிளாக் எத்தனை முறை போனை திறக்கிறீர்கள், கைரேகை, முகமறியும் வசதியை எத்தனை முறை பயன்படுத்துகிறீர்கள், பின்கோடை எத்துனை முறை அழுத்துகிறீர்கள் என அத்தனையும் பதிவு செய்து உங்கள் அடிமைத்தனத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கும் ஆப் இது. அதிக நினைவகத்தை எடுத்துக்கொள்ளாது என்பதால் தயங்காமல் பயன்படுத்தலாம். இதனை உங்கள் போன் ஸ்க்ரீன் வால்பேப்பர் போல வைத்துக்கொண்டு எத்தனை முறை போனை திறக்கிறீர்கள் என்று கூட சோதித்துக்கொள்ள முடியும். ஆப்பை திறக்கும் நேரம் மிச்சம்தானே? ஜியோமி பயனர்கள் இதனை பயன்படுத்த வேண்டாம். நேரவிரயம். மார்ப் உங்கள் போனில் ஸ்பாட்டிஃபை முதற்கொண்டு கருப்பு குரோம் ஜிலுஜிலு படங்கள் வரை பல ரகசியங்களை வைத்திருப்பீர்கள். இதற்கான ஆப்களை ஒழுங்குமுறைப்படுத்தினால்தானே நல்லது? அதற்குத்தான் இந்த மார்ப் ஆப் உதவுகிறது. மேலேயுள்ள ஆப்பும், மார்ப் ஆப்பும் கூட கூகுளின் தயாரிப்பே. வேலை, விளையாட்டு, இணைய ரேடியோ என தலைப்பிட்டு ஆப்களை தேர்வு செய்துகொள்ளலாம். ஸ்பேஸ் இதுவும் அன்லாக் கிளாக் போன்ற வேலைகளைச் செய்கிறது. நீங்கள் போனில் செலவிடும் நேரத்தை வரையறை செய்துகொள்ள இந்த ஆப்பை நாடல

ஷெட்யூல்டு டிரக் என்றால் என்ன?

படம்
giphy.com மிஸ்டர் ரோனி ஷெட்யூல்டு டிரக் என்று சிவப்பு நிறத்தில் ஆயின்மென்டுகளில் பிரின்ட் செய்யப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். இதற்கு என்ன பொருள்? ஷெட்யூல்டு டிரக் என்பதற்கு தமிழில் பட்டியலிடப்பட்ட மருந்துகள் என்று பெயர். இதிலுள்ள மருந்துகள் அடிமையாக்கும் தன்மை கொண்டவை, பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்துபவை. தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளவை என அடையாளம் காணப்பட்டு அரசு மூலம் இவை பட்டியலிடப்பட்ட மருந்துகள் என கூறப்படுகின்றன. மருந்துகள் என்றால் அதில் உள்ள வேதிப்பொருட்களின் சேர்மானம் என்று பொருள் கொள்ளுங்கள். அதுவே சரியாக இருக்கும். கீழே கூறுவது அமெரிக்க அரசு விதிமுறைகளின் படி வரும் பட்டியலிடப்பட்ட மருந்துகள் 1 உளவியல் ரீதியாக பாதிப்பு ஏற்படுத்தும் மருந்துகள் இவை. இவற்றை நடப்பு காலத்தில் முறையாக மருத்துவரின் பரிந்துரை இன்றி பயன்படுத்தக்கூடாது என அரசு கூறியுள்ளது. எ.கா - ஹெராயின்,  பியோட்டே , மெத்திலீன் டையாக்சி பீட்டமைன். பட்டியலிடப்பட்ட மருந்துகள் 2 இம்மருந்துகளும் உளவியல் சார்ந்த உடல் சார்ந்த அடிமைத்தனத்தை பாதிப்பை ஏற்படுத்துபவையே. ஆனால் பட்டியல்

செல்போனில் அதிகரிக்கும் சூதாட்ட மோகம்! - இங்கிலாந்து மருத்துவமனையின் தீர்வு!

படம்
அதிகரிக்கும் அடிமைத்தனம்! செய்தி: ஸ்மார்ட்போன்களின் வழியாக திரைப்படங்கள், விளையாட்டு, டிவி தொடர்கள் ஆகியவற்றின் மீதான அடிமைத்தனம் அதிகரித்துள்ளதாக இங்கிலாந்து அரசின் ஆய்வுகள் கூறுகின்றன. இன்று பேருந்துகளிலும், கார்களிலும் செல்பவர்கள் அனைவருமே போனில் ஏதாவது செய்தியைப் பார்த்துக்கொண்டே செல்கிறார்கள். அது திரைப்படமாக, விளையாட்டாக அல்லது சமூகவலைத்தள பதிவாக கூட இருக்கலாம்.  மது, புகையிலை போன்ற அடிமைத்தனத்தை இவை ஏற்படுத்துகின்றன என்று உளவியலாளர்கள் கூறி வருகின்றனர்.  இங்கிலாந்து அரசு அமைப்பான கேம்ப்ளிங் கமிஷன் 2017 ஆம் ஆண்டு ஆய்வொன்றைச் செய்தது. இதில் 4 லட்சம் பேர்களுக்கு மேல் ஆப் வழியாக சூதாட்ட விளையாட்டுகளை விளையாடி வருகின்றனர். தற்போது இளைஞர்களிடையே  இணையம் சார்ந்து அடிமைத்தனம் அதிகரித்துள்ளது. “அடிமைத்தனத்தைப் பழக்கம், பொருட்களை தொடர்ச்சியாக கவனமின்றி பயன்படுத்துவது என்றுகூட கூறலாம்” என்கிறார் அடிக்சன் எனும் பத்திரிகையின் ஆசிரியரும், புகையிலை ஆராய்ச்சியாளருமான ராபர்ட் வெஸ்ட். இணையம் சார்ந்த நெட்ஃபிளிக்ஸ் அமேசான் நிகழ்ச்சிகளைப் பார்த்தாலும் தினசரி நடவடிக்கைகளை அவை பாதிக்காத