சிறுவயது முதலே குழந்தைகளை அடிமைத்தனத்தில் வைத்திருக்க பெருநிறுவனங்கள் விரும்புகின்றன! - டேவிட் டி கோர்ட்ரைட்

 





நேர்காணல்

டேவிட் டி கோர்ட்ரைட்

வடக்கு புளோரிடா பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர்


அடிமையாக்குதல் பற்றி எழுதியுள்ளீர்கள். இதில் முதலாளித்துவம் எப்படி உள்ளே வருகிறது?


நமது மூளையில் லிம்பிக் என்ற பகுதியில், மகிழ்ச்சி, ஊக்கம், நீண்டகால நினைவுகள் உள்ளது. இதை அடையாளம் கண்டுகொண்ட நவீன தொழிலதிபர்கள், மூளையை நேரடியாக பாதிக்கும், செல்வாக்கு செலுத்தும் விதமாக பொருட்களை வடிவமைத்து வருகிறார்கள். இந்த செயல்பாடு தனிநபர்களையும், சமூகத்தையும் கூட பாதிக்கிறது. மூளையில் அதிகளவு டோபமனை சுரக்க வைக்கும் விதமாக பொருட்களை வடிவமைக்கிறார்கள்.இந்த வேதிப்பொருள் மகிழ்ச்சி ஏற்படும்போது சுரக்கிறது. பெருமளவு முதலீட்டை, இத்தகைய பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறார்கள் அல்லவா? அதைத்தான் முதலாளித்துவம் என்று கூறினேன். இதில், பெரியளவு லாபம் உள்ளது. 


அடிமையாக்குதலின் சில வடிவங்களைக் கூறுங்கள்.


முதலில் ஒருவரை அடிமையாக்குதல் என்றால் மது, ஹெராயின், புகையிலை ஆகிய பொருட்களையே சுட்டிக்காட்டுவார்கள். இன்று, டிஜிட்டல் பொருட்களின் மீதான அடிமைத்தனம், சர்க்கரை, கொழுப்பு, காரம் சார்ந்த உணவுப்பொருட்களை உண்ணுதல் தொடர்பான அடிமைத்தனம், சூதாட்டம் என தளம் மேலும் விரிவடைந்துகொண்டே செல்கிறது. 


மனிதர்களின் மூளை சூழலைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப மாறிவருகிறது. சவால்களுக்கு ஏற்ப தன்னைக் காத்துக்கொள்ளவும் முயல்கிற ஒன்று. இந்த விஷயங்களை அடிமையாக்குதல் என்பது பாதிக்கிறதா?


அடிமையாக்குதல் என்பது, பரிணாம வளர்ச்சியின் சாதகமான விஷயங்களை பயன்படுத்திக்கொள்கிறது. அரசுகள், குற்ற அமைப்புகள் அடிமையாக்குதல் வழியாக எளிதாக மக்களைக் கட்டுப்படுத்த முடிகிறது. இந்த அடிமையாக்குதல் முறை இல்லாதபோது, ஒருவரை கையாள்வது மேலாதிக்க அமைப்புகளுக்கு, இயக்கங்களுக்கு கடினமான காரியமாக இருந்தது. ஆனால் இப்போது மூளையில் முடிவெடுக்கும் ஃபிரன்டல் கார்டெக்ஸ் பகுதிகளைக் கூட அடிமையாக்கும் செயல்பாடு பாதிக்கிறது. ஒன்றைச் செய்யலாமா வேண்டாமா என்று தீர்மானிக்கும் செயல்படுத்தும் பகுதி இதுதான். அதுவே பாதிக்கப்பட்டுவிட்டால், நமக்கு என்னவாகும்? 


உணவுகள், செல்போன் நிறுவனங்கள் என பல்வேறு நிறுவனங்களும் குழந்தைகளையே குறிவைப்பது ஏன்?


நீங்கள் இருபத்தைந்து வயதில் புகைபிடிக்கத் தொடங்குகிறீர்கள். இந்தச் சூழலில் அதை நீங்கள் தொடராமல் கைவிடுவதற்கே வாய்ப்புகள் அதிகம். இத்தனை ஆண்டுகளாக உங்களுக்கு அந்தப் பழக்கம் இல்லையே? ஆனால், அதுவே பனிரெண்டு வயதில் புகைபிடிக்கத் தொடங்கினால் உங்களால் ஆயுள் முழுக்க அதை கைவிடமுடியாது. இத்தாலியைச் சேர்ந்த வில்ஃபிரடோ பாரடோ பொருளாதார அறிஞர், அவரின் கோட்பாடு பாரடோ கோட்பாடு என்று அழைக்கப்படுகிறது.80/20 என இதைக்கூறலாம். சுருக்கமாக உங்கள் நிறுவனத்தின் எண்பது சதவீத லாபம், இருபது சதவீத வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைக்கிறது. ஒரு நிறுவனம் வளர அதற்கு தினசரி வாடிக்கையாளர்கள் தேவை. அப்படியென்றால் அவர்கள் சிறுவயதில் இருந்தே பயன்படுத்தினால்தான் எதிர்பார்த்த வருவாயை நிறுவனங்கள் ஈட்ட முடியும். இப்படித்தான் சமூக வலைத்தளங்கள், சிகரெட்டுகள், மது, குப்பை உணவுகள் எளிதாக குழந்தைகளை முதலில் குறிவைக்க முயல்கிறார்கள். அவர்களை நிரந்தர வாடிக்கையாளர்களாக்கினால் லாபத்திற்கு பிரச்னையே இல்லை. இப்போது உடல் எடையைக் குறைக்கும் மருந்துகள் சிகிச்சைகளை எடுத்துக்கொண்டாலும் அனைத்து சங்கிலிக் கண்ணிகளும் ஓரிடத்தில் ஒன்றாக இணையும். அதிக கொழுப்பு கொண்டு ஊட்டச்சத்தான உணவுகளை இவர்களே விற்பார்கள், பிரசாரம் செய்வார்கள். இதுதான் முதல்படி. அடுத்து, இதனால் பாதிக்கப்பட்டு உடல் எடை கூடினால், பருமன் அதிகரித்தால் அதற்கான மருந்துகளோடு அவர்களே வருகிறார்கள்.பிரச்னையும் அவர்களே உருவாக்கி, அதற்கான தீர்வையும் வழங்குகிறார்கள். இரண்டிலும் அபரிமிதமான லாபம் உள்ளது.  


முதலாளித்துவம் அடிமையாக்குதலை உருவாக்குகிறதா?


முதலாளித்துவம் அடிமையாக்குதல் எனும் பிரச்னையை ஊக்குவிக்கிறது.ஆதரிக்கிறது. தொழில்துறை புரட்சிக்கு முன்னர் அடிமையாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்கள் இல்லாமலில்லை. ஆனால், இன்று கொள்ளை லாபத்திற்காக அதை ஊக்குவிக்கிறார்கள். முன்னர் இப்படி நடைபெறவில்லை. பதினாறாம், பதினெட்டாம் நூற்றாண்டுகளில் நாட்டை நவீனப்படுத்த தேவையான பணம் எங்கிருந்து கிடைத்திருக்கும் என நினைக்கிறீர்கள்? புகையிலை, மதுபானங்களை விற்பதன் வழியாகவே அரசுகள் வரிவருவாய் பெற்று நலத்திட்டங்களை செயல்படுத்தின. ஆங்கிலேயர்கள் இந்தியாவில் இருந்து சீனாவுக்கு ஓபியம் கொண்டு சென்றது, ஐரோப்பாவிற்கு புகையிலை சென்றது என அனைத்துமே வரி வருவாயைப் பெற்று அரசை நவீனப்படுத்தவே செலவிடப்பட்டது. 


பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முயல்கின்றன. அதன் விளைவாக சிகரெட் புகைத்தல் அளவு குறைந்திருக்கிறது. டிஜிட்டல் அடிமையாதல் சற்று வேறுபட்டது. இதில் அரசுகள் தலையிடுகின்றன. ஆஸ்திரேலியா, சீனா ஆகிய நாடுகள் இளைஞர்களைப் பாதுகாக்க சமூக வலைத்தள கட்டுப்பாட்டு சட்டங்களை இயற்றியுள்ளன. நீங்கள் விழிப்புணர்வாக இல்லாதபோது,புகையிலை போலவே சில செய்திகளும் போதையூட்டுபவையாக, அடிமையாக்குபவையாக மாற்றப்படும் அபாயம் உள்ளது.      

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!